ஒரு பதிவை எழுதத் தொடங்கி, இப்படித்தொடங்கி இப்படி முடிக்கலாம் என முதல் வரி கடைசி வரி மட்டும் எழுதினேன். செங்கை வந்துவிடவே மூடும் அவசரத்தில் வரைவாக சேமி என்பதை அழுத்த நினைத்து, வெளியிடு என்பதை அழுத்தி விட்டேன். நின்ற ரயிலில் இருந்த படியே அதை சரிசெய்ய முயன்றால் வெளியில் மழை காரணமாக ரிலையன்ஸ் படுத்தல் தொடங்கிவிட்டது. இடர் களைந்து ஒருவழியாக உலகத்தின் கண்களில் இருந்து வெற்றிகரமாக மறைத்துவிட்டதாய் எண்ணித் திருப்திபட்டபோது, ஆட்டோ பயணத்தில் பொறி தட்ட என் அறியாமையை எண்ணி உதட்டோரம் ஒரு புன்னகை.
கூகுள் ரீடர் இருப்பது நினைவுக்கு வரவே அலுவலகம் வந்ததும் இருண்டிருந்த அலுவலகத்தில் டிஜி செட்டை இயக்கியபின் முதல் காரியமாய் ரீடருக்குப் போய் பார்த்தேன். ஆம் அந்த இரண்டு வரிகளைப் பதிவாய் ஃபீடர் அனுப்பி வைத்துவிட்டது. இதற்கெல்லாம் பதிவா என்று அவசரப்பட்டு என்னை கும்ம ஆரம்பித்துவிடவேண்டாம் என்பதற்காகவே இந்தக் குறிப்பு.
கூகுள் ரீடரில் படிக்கும் மகாஜங்கள் மன்னிக்கவும்.