இன்று பார்த்த முதல் படம் An Ordinary Execution. இதைத்தான் பார்ப்பது எனத் தேர்வு செய்யக் காரணம், கதையின் பின்புலம் ஸ்டாலினிய காலம் என்பது மட்டுமின்றி ஸ்டாலினே பாத்திரமாய் வருகிறார் என்பதும்தான்.
சிறிய சித்திரவதையைக்கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘காட்சியாய்க்’ காட்டாமல் கணவன் மனைவி என்கிற இரண்டே பாத்திரங்களின் வாயிலாக ஸ்டாலினிய அடக்குமுறையை சாதாரண மக்களின்மேல் அது ஏற்படுத்திய கடுமையான தாக்கத்தைக் கூறும் படம் என்பதால் படம் பார்த்து முடித்ததும் பிரமாதமாய்த் தோன்றியது.
An Ordinary Execution / Dir: Marc Dugain / France / 2010 / 105 Min
An Ordinary Execution – review
A pungently atmospheric chamber piece about the nature and history of Russian political power.
Peter Bradshaw
guardian.co.uk, Thursday 25 November 2010 22.53 GMT
Marc Dugain, the author whose first world war-set novel The Officers' Ward became a powerful movie almost a decade ago, has here directed his own adaptation of his 2007 novel – or rather, adapted just the first part of an ambitious, episodic fiction about the nature and history of Russian political power. The result is a pungently atmospheric chamber piece, set in the paranoid Soviet era of purges and disappearances; Dugain imagines an encounter between Stalin and a young doctor, Anna, who inspires align obsession from male colleagues on account of her extreme beauty and popularity with patients, stemming from a rumoured healing "aura" from her hands. Stalin imperiously makes Anna his top-secret personal physician, an intimacy which he decrees is so important that it supersedes and invalidates every other relationship in her life – especially her marriage. André Dussollier portrays Stalin with presence and aplomb, and Anna is played by Marina Hands with great passion and intelligence. It is a strange, almost eerie film, with something of Kafka and Orwell. An Ordinary Execution forcefully conveys Russian fear and shame, and Marina Hands really is outstanding.
***
1931ல் பிறந்த மார்த்தா மஸாரஸ் 2009ல் தமது 78வது வயதில் இயக்கிய படம், அன்னா பற்றிய கடைசி அறிக்கை. 1956ல் நடந்த சம்பவங்களின் காரணமாய் சொந்த நாட்டைவிட்டு வெளியேறி அயல்நாட்டில் தஞ்சம் புகுந்து தமது தங்கையுடன் வசிக்கும் அரசியல்வாதியான அன்னாவை இளக்குவதற்காக 1973ல் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி 2009ல் எடுக்கப்பட்டிருக்கும் படம்.
சினிமா ’பார்க்கிறோம்’ என்கிற உணர்வே இல்லாமல், அன்னாவை நோக்கி ‘செலுத்தப்பட்ட’ முன்னேற ஆசைப்படும் இளம் இலக்கிய விரிவுரையாளன், மேற்குலகில் எப்படியேனும் ‘செட்டிலாக’ விரும்பும் அவனது இளம் மனைவி, அவனது மாமாவான, அப்போதும் ஹங்கேரியில் வசிக்கும் அன்னாவின் காதலர், அனைத்தையும் ஒருங்கிணைத்து அயல்நாட்டிலும் வேவுபார்க்கும் அப்போதைய ஹங்கேரியின் தூதரகம் என்று ஒன்றுடன் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்தபின் உண்டான மன விரிவில் ஸ்டாலினின் கெடுபிடி பற்றிய படம் ‘எடுக்கப்பட்டிருப்பதான்’ உணர்வையே ஏற்படுத்திற்று.
குளோசப் ஷாட்களில் சகிக்கத்தக்கதாகவும் மிட்ஷாட்களில் எரிச்சல் ஏற்படுத்துவதாகவும் லாங் ஷாட்டில் இளித்துக்கொண்டிருப்பதாகவும் இருக்கும் இதுபோன்ற டிவிடி திரையிடல்களே இனி திரைப்பட குழுக்களின் தலைவிதி என்று ஆனபோதுதான், கடன்மேல் கடன்வாங்கி பின் தொண்ணூறுகளில் ஹோம் தியேட்டர் அமைத்துக்கொண்டு, கனத்த மனதுடன் ஃபிலிம் சொசைட்டிகளுக்குப் போவதையே நிறுத்திக்கொள்ள நேர்ந்தது.
தபால்தலையை அகண்டாகாரமான திரையின் அளவிற்குப் பெரிதாக்கிக் காட்டுவதால் வரும் விளைவுதான் இது என்றார் பின்வரிசையில் அமர்ந்திருந்த இயக்குநர் ஹரிஹரன் (ஏழாவது மனிதன்).
81ல் தொடங்கப்பட்ட சென்னை ஃபில்ம் சொசைட்டியின் ஆரம்ப நாட்களில் இருந்தே ஹரிஹரன்தான் படங்களை அறிமுகப்படுத்திப் பேசுவார். இணையமில்லாத காலம். நிஜமாகவே படங்களைப் பார்த்தவர்களும் குறைந்தது அதைப் பற்றிப் படித்தவர்களும் மட்டுமே அப்போதெல்லாம் ஆளாய் நின்று பேச முடியும். புத்தகத்தில் புருடாவிட்டு, எப்போதோ படம்பார்க்கப்போகிறவன் எங்கே இணைத்துப்பார்க்கப்போகிறான் என்று தெகிரியமாக இருக்க முடியாது. படத்தைப்பற்றி பேசி முடித்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு படமே எதிரில் ஓடத்தொடங்கிவிடும். இஷ்டத்திற்கு அள்ளிவிட்டால் படம் முடிந்தபின் இவ்வளவுதானா அண்ணாத்தையின் பவுசு என்று அம்பலப்பட நேர்ந்துவிடும்.
ஹரிஹரன் படங்கலை அறிமுகப்படுத்தி, ஆங்கிலத்தில் பேசியது ஆரம்ப நாட்களில் பெரிதாய்ப் புரியாததால் படத்தைப்போடுவதைவிட்டு, இந்த ஆள் ஏனைய்யா இடையில்வந்து கழுத்தை அறுக்கிறார் என்று எரிச்சல்பட்டதை நினைத்தால் இப்போதும் வெட்கமாக இருக்கிறது. படம் பார்த்துப்பார்த்துத் தன்னால் புரியத்தொடங்கும் நிலை வருவதற்கு ஆரம்பத்தில் எரிச்சலூட்டிய அவருடைய அறிமுகங்கள்தான் முக்கியமான காரணம் என்பதை ’அறிந்துகொள்ளவே’ பலகாலமாயிற்று.
ஹரிஹரன் படங்கலை அறிமுகப்படுத்தி, ஆங்கிலத்தில் பேசியது ஆரம்ப நாட்களில் பெரிதாய்ப் புரியாததால் படத்தைப்போடுவதைவிட்டு, இந்த ஆள் ஏனைய்யா இடையில்வந்து கழுத்தை அறுக்கிறார் என்று எரிச்சல்பட்டதை நினைத்தால் இப்போதும் வெட்கமாக இருக்கிறது. படம் பார்த்துப்பார்த்துத் தன்னால் புரியத்தொடங்கும் நிலை வருவதற்கு ஆரம்பத்தில் எரிச்சலூட்டிய அவருடைய அறிமுகங்கள்தான் முக்கியமான காரணம் என்பதை ’அறிந்துகொள்ளவே’ பலகாலமாயிற்று.
முந்தைய தலைமுறையில், ஹங்கேரியில் அன்னா நிகழ்த்திய சாதனைகளின் சுவடுகூடத் தெரிந்துவிடாதபடிக்கு, அன்னா பற்றிய தகவல்களை நூலகத்தின் சேமிப்பு கிடங்கின் பொந்தில் கட்டிப்போட்டிருக்கும் ‘திணிக்கப்பட்ட’ கம்யூனிச அரசு பற்றி மார்த்தா எடுத்த இந்த சமீபத்திய படத்தை இடையில் பல வருடங்கள் சந்திக்காத ஹரிஹரனுடன் அமர்ந்து பார்த்தது அதிசயமான ஒற்றுமை..
படம் முடிகையில், விரிவுரையாளன் தன் தம்பியை ஓட்டல் மேசையில் சந்திப்பதை ஓரமாய் இருந்து குடித்தபடி ஒரு மூதாட்டி ‘பர்ப்பதாய்’ ஒரு ஷாட் வந்தது.
பின்னால் இருந்த திருமதி ஹரிஹரன் அவர்கள் அது அன்னாவின் தங்கையல்லவா என்றார்.
படத்தின் தொடக்கத்தில் ஃப்ரான்சுக்குப்போய் விரிவுரையாற்றுவதற்கான ‘வாய்ப்பு’ அந்த ஓட்டல் மேசையில் வைத்து அளிக்கப்படுகையில், பின்புற மேசையொன்றில் இதே மூதாட்டிதான் உட்கார்ந்து பார்ப்பதாய்க் காட்டப்படுகிறது (அப்போது அவன் அன்னாவையே சந்தித்திருக்கவில்லை ஆகவே அவரது தங்கை பற்றிய பேச்சு எழவே வாய்ப்பில்லை) எனவே அது மார்த்தா மசாரஸைக் குறிப்பதாக இருப்பதே பொருத்தமாக இருக்கும் என்று திரும்பிப்பார்த்துக் கூறினேன்.
கொய்ட் ரைட். எஸ் எஸ் தட் மஸ்ட் பி அன்னா என்றார் ஹரிஹரன். கோடி ரூபாய் கிடைத்ததுபோல் இருந்தது. செண்ட்ரல் எக்சைஸ் இன்ஸ்பெக்டர் உதாருக்கு வசப்படுகிற விஷயங்களா இவை?
சுயத்தை உருவாக்குவதும் அதை தக்கவைத்துக்கொள்வதும் எத்துனைப் பெரிய போராட்டம் என்பது படத்தில் வரும் விரிவுரையாள இலக்கியவாதி போன்ற நகல்களுக்கும் நிழல்களுக்கும் எளிதாகப் புரிந்துவிட்டால் மார்த்தா மஸாரஸ் இப்படியொரு படத்தை 78வயதில் எடுத்திருக்கவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்பதுதான் உண்மை.
The Last Report On Anna / Dir: Marta Meszaros / Hungary / 2009 / 103 Min
One of Europe’s most revered blue-chip directors, veteran Hungarian filmmaker Márta Mészáros, has shown off her latest drama at the Moscow International Film Festival.
“The Last Report on Anna” is based on a true story of a politician who gave her life fighting for democracy and freedom.
The director of Adoption, Diary for My Lovers, and The Seventh Room – Márta Mészáros – said her admiration for a Social Democratic politician, Anna Kéthly, served as an impulse to make the film.
“Anna’s story was kept secret by the Hungarian authorities. No one talked about her life, no one knew anything about her. So when I learnt about her, I decided to tell her story to others so that they could also appreciate her. And in the end it paid off because, after watching my film, people started discussing Anna, no matter which political views they shared. She’s become a role model of morale for many. It means making the film was worth it!” Mészáros said in an exclusive interview with RT.
Although set in Hungary in the 1970s, the movie touches upon universal issues – freedom and treason, deceit and devotion – many of which have been personal for the filmmaker herself.
“I had a horrible childhood. My father was killed in Russia. But no matter what I went through, I’ve always felt myself free and fearless. I searched for freedom and truth. Here I stand and I can do no other. That’s how l lived with the men I loved, that’s what I’ve told my children and grandchildren. Freedom is vital for me.”
Filmmaking has always been the be-all and end-all for Marta.
“I love making films. I love my job, I like it when the actors play, when they play well, I like being with them. But I don’t take it too close to heart, I don’t suffer, and I’m not one of those directors who say ‘I’m gonna tell you this great story’. Miklós Jancsó used to say about me, that “Marta can make a good film in between making dinners. In fact, he wasn’t wrong.”
The 78 year-old guru of cinematography says she is no longer lured by trophies and awards. The opinion of her friends is the one that matters.
“It so happened that my films weren’t loved in my country, although the authorities gave me some funds. Meanwhile in the 70s, my productions were screened at the world’s most prestigious film festivals where I received all the Grand Prizes one can think of. So when you ask me now, whether I care about getting my films screened around the world or not – well, not really. I do care about my friends’ opinion. But in general the festival thing is over for me, I honestly don’t care whether I’m awarded or not.”
Valeria Paikova, RT
http://rt.com/news/prime-time/mszros-film-festival/
http://rt.com/news/prime-time/mszros-film-festival/