Shaseevan Ganeshananthan கொண்டோடியின் இன்னொரு கருத்தையும் கீழே இணைக்கின்றேன். கொண்டோடி 1995 - 2004 வரை புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அதுமட்டுமல்லாது 'ஜெயசிக்குறு' சண்டையில் பங்குபற்றியுமுள்ளார்.
கொண்டோடி said...
இப்போது தான் பார்த்தேன் "ஆவியில் அமுட்டு வீசிய இலக்கிய குண்டு" என்று மாமல்லன் ஓரிகை எழுதியுள்ளார். கிளிப்பைக் கழற்றிக் குண்டையெறிந்து மீளப்பூட்டும் கதையை அப்போதே நாங்கள் நக்கலடித்ததுபோன்றே மாமல்லனும் திட்டித்தீர்த்திருக்கிறார்.
மாமல்லன்: ஆவியில் அமுட்டு வீசிய இலக்கிய குண்டு: ஆவியில் அமுட்டு வீசிய இலக்கிய குண்டு
எட, சோபாசக்தியின் கதைக்குமட்டுமேன் இந்தாள் இப்பிடி வக்காலத்து வாங்குது? அதிலயும் அமுட்டு விட்ட ஓட்டைகள் போல கன ஓட்டைகள் இருக்குத்தானே?
=================
அதுசரி, சசீவன், உங்கடபாட்டுக்கு கொண்டோடி பற்றி வர்ணணைகள் குடுக்கிறியள்? உந்த வர்ணனைகள்தான் என்ர கருத்துக்குப் பலம் சேர்க்குமென்றில்லை. கையெறிகுண்டு நுட்பம் பற்றிச் சொல்ல யாரும் இயக்கத்தில் இருந்திருக்க வேண்டியதில்லை. அட! மாமல்லன் என்ன புலிகள் இயக்கத்தில் இருந்தாரா என்ன? அதைவிட, நீங்கள் என்னைப்பற்றிச் சொல்பவை பல உண்மையுமல்ல. அனேகமாக கொண்டோடியின் இறுதிப்பின்னூட்டமாகவும் இது இருக்கலாம்.December 14, 2011 6:52 AM
22 ஏப்ரல் 1962ல் ஜெயமோகன் பிறந்து சரியாக இருபது வருடங்கள் கழித்து அதே நாளில் பிறந்த சசீவனிடமிருந்துதான் ஈழப்போர் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்று நான் கேட்டது சீனியர் ஜூனியர் என்பதற்காக அன்று, கடல்களைத்தண்டியே என்றாலும் நேரலையாய்ப் பார்த்து வளர்ந்தவர்கள் இல்லையா என்கிற பொருளில்தான் என்பது இப்போதாவது புரிந்தால் சரி.
இந்தியாவில் இருந்துகொண்டு இணையத்தின் ஃபேஸ்புக்கில் ஈழப்போர் பற்றிய அனுபவங்களை இலகுவாக சேகரிக்கிறேன் பேர்வழி என்று ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்தால் இப்படித்தான்.
’ஆராய்ச்சி’ செய்வதாலேயே எவருக்கும் பிரமுக அந்தஸ்து கொடுக்கவேண்டியதில்லை.ஆராய்ச்சிகள் சரியான அடிப்படைகளைக் கொண்டிருக்கின்றனவா என்பதுதான் அத்தியாவசியம்.