பத்மாசினி காட்டிவரும் பயாஸ்கோப் எழுதியபின், பரவலான கவனத்தை ஈர்த்து, தமிழகத்து வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மற்றும் சின்மயியின் தாயார் மியூஜிகாலஜிஸ்ட்டு பத்மாசினி, இரு தரப்பாருக்கும் நன்மை விளையட்டும் என்கிற நல்லெண்ணத்துடன் அநேகமாக அனைத்து பத்திரிகைகளுக்கும் இதன் சுட்டியை அனுப்பி, மியூஸிக் சீசனாகவும் இருப்பதால், இதைப்பற்றி எழுதுவது, பரபரப்பு செய்தியாய் உங்களுக்கும் பயன்படும், எனவே முடிந்தால் பாருங்கள் என விண்ணப்பித்து இருந்தேன்.
27 December 2012
23 December 2012
11 December 2012
சின்மயி விவகாரம் இன்னொரு குரல்
வாசகர் கடிதங்களை எழுதிக்கொள்கிற வழக்கம் எனக்கில்லை. மேலும் வாசகர் கடிதங்கள் எனக்கு வருவதுமில்லை. அப்படியே அபூர்வமாக ஒன்றிரண்டு வந்தாலும் ’ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி பிரசுரத்துக்கு அல்ல’ என்று ஜேம்ஸ் பாண்டின் வீரத்துடன் 36 ஃபாண்டில் தலையிலேயே சொல்லிவிடும். கடிதமும் ஒரு பக்கத்துக்கும் குறைவாகவே வரும்.
ஐன்ஸ்டீன் ஜாடை
ஐன்ஸ்டீன் ஜாடையில் இருந்தால்
போட்டோவில் சிந்தனையாளனாகவும்
தோன்றுமேயென
ஒத்திகை பார்க்க
தலையை
சிலுப்பிக் கொண்டார் எழுத்தாளர்.
போட்டோவில் சிந்தனையாளனாகவும்
தோன்றுமேயென
ஒத்திகை பார்க்க
தலையை
சிலுப்பிக் கொண்டார் எழுத்தாளர்.
10 December 2012
சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் கேள்வியும் பதிலும்
|
10:22 AM (10 hours ago)
| |||
|
அன்புள்ள விமலாதித்த மாமல்லன்,
சின்மயி புகார், அது தொடர்ந்த கைதுகள் குறித்த தங்கள் அனைத்து blogகளையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
05 December 2012
இவை புத்தகமாய் வந்தால் புழல் விருது கிடைக்குமோ?
Tuesday, November 13, 2012 தீபாவளியன்று ரிலீஸான பிராமணர்களா வாமனர்களா வுக்கு இரண்டே நாட்களில் Thursday, November 15, 2012 அன்றே
03 December 2012
கட்டத்துரை என நம்பவைத்த கைப்புள்ளைக்கு
ஷோபா சக்தியின் கப்டன் கதையைப் படித்து அசந்துபோய் ஷோபா சக்தி என்றாலே அடேங்கப்பா என்று நினைத்துவிட்டது என் தவறாகத்தான் இருக்க வேண்டும்.
01 December 2012
29 November 2012
இந்தப் பிரபலங்க பண்ற லொள்ளு தாங்கலப்பா
’மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த’ சின்மயி ஸ்ரீபாதா அவர்களின் தமிழர் நலன் தமிழ்ச்சமூகம் பற்றிய அறிவார்ந்த புரிதல் தமிழாபிமானம் சாதிபேதம் பாராட்டா நல்லியல்பு ஆகிய உயர்குடி குணநலன்கள் பற்றி, பிஎச்டி ஆராய்ச்சி செய்யும் மாணவனின் தீவிரத்தோடு இணையத்தை அலசிக்கொண்டிருக்கையில் வீடியோ சுட்டியைக் கொடுத்திருந்த ட்விடொன்று காணக் கிடைத்தது. சின்ன நடிகர்தானே என்று நினைத்தார் போலும் யாருடைய வீடியோ என்கிற விபரம்கூட கொடுக்கவில்லை.
27 November 2012
முதுகெலும்பற்ற அறச்சீற்ற அடலேறு
நானுண்டு என் வேலையுண்டு என வேலைக்கும் போய்க்கொண்டு தொழிலாய் இணையத்திலும் எழுதிக்கொண்டு இருப்பவனுக்கு எங்கிருந்தெல்லாம் விருந்து அழைப்பு வருகிறது என்று பாருங்கள்.
23 November 2012
அசோகமித்திரனுக்கும் பாடகி பிரச்சனைக்கும் ஷோபா சத்தி போடும் தந்திர முடிச்சு
2011ல் பிராமின் டுடேயில் வெளியான நேர்காணலை, பாடகி பிரச்சனையுடன் ஃபேஸ்புக்கில் தந்திரமாக முடிச்சு போடுகிறார் எழுத்தாளர் ஷோபா சக்தி.
18 November 2012
ஸ்ரீபாதா பிணாகபாணி என் தாத்தாவாய் இருந்திருக்கக்கூடாதா!
ஸ்ரீபாதா பிணாகபாணி என்னுடைய தாத்தாவாய் இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கிறது லலிதா ராமின் இந்த நேர்காணல்
ஸ்ரீபாதா பிணாகபாணி - லலிதா ராம்
16 November 2012
11 November 2012
கலைஞனும் குமுறலும்
மேதைகளுக்குள் பொது அம்சம் கிறுக்குத்தனம் என்றாலும் ஒவ்வொருவரிடமும் அது ஒவ்வொருவிதமாக வெளிப்படும்.
07 November 2012
கொடுத்தால் மரணஅடி கொடு! இல்லையேல் மன்னித்துவிடு!
எஸ்.வி.ராஜதுரையும் ஜெயமோகனும் அவதூறு செய்ததாய் பரஸ்பரம் குடுமிப்பிடி சண்டையில் இருக்கும் தற்காலச் சூழலில், இணையத்தில் நான் ஈடுபட்ட பல சண்டைகளில் ஒரு குழாயடியைப் பதிவுசெய்திருப்பது நினைவுக்கு வந்தது. புதிய வாசகர்களின் வசதிக்காக, அதை அப்படியே கீழே பிரசுரித்து இருக்கிறேன். அந்த சண்டையின் பின்னணி பற்றி தெளிவுபடுத்தவே இந்த முன்னுரை.
03 November 2012
ஜெயமோகன் பற்றிய பெருங்கவலை
<Court slams anti-Kudankulam agitators for protests>
கிடைத்தது மைக் என்று, நாளை நடக்கவிருக்கும் ராஜபாளையம் நாற்று கூட்டத்தில், கடுப்பை சிம்மில் வைக்காமல், ஓவராய் அறச்சீற்றத்தில் பொங்கி, கோர்ட் அவமதிப்புக்கு ஆளாகிவிடாமல், என் உயிர் நண்பர் ஜெயமோகன் உசாராய் பேசவேண்டுமே என்று, மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.
02 November 2012
விதைகளும் வதைகளும்
புஷ்பவனம் குப்புசாமி ஆரம்ப நாட்களில் சாஸ்தரீய சங்கீதம் கற்றுக்கொள்ள கர்நடக சங்கீத வித்வானிடம் சென்ற போது, உனக்கெல்லாம் சங்கீதம் வராது அல்லது சொல்லித்தர முடியாது (இது போன்ற அர்த்தத்தில்) கூறிவிட்டார் என்று, அவர் கொடுத்திருந்த பத்திரிகை செய்தி/பேட்டியைப் படித்திருப்போருக்கு, இன்றைய விஜய் டிவி நிகழ்ச்சியில் பூவே செம்பூவே பாடலின் இசைக்கோர்வை பற்றி சிலாகித்துவிட்டு அதை ஸ்ரீராம் பாடுகையில் அவர் நெகிழ்ந்து அழுததோ அப்புறம் அந்த மேடையிலேயே இளையராஜாவுக்கு மானசீகமாக சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ததோ மெலோடிராமாவாகப் படாது.
20 October 2012
அறியாத முகங்களை அறிந்த முகங்கள்
இந்த வசதி எனக்கு இல்லை என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த காலம் பற்றி இஷ்ட்டத்துக்கும் நான் அள்ளிவிட முடியாது.
30 September 2012
24 September 2012
ரைட்டரின் ராயல்டியும் பதிப்பாளரின் ராயல் டீயும்
’நாம் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அவர்கள் வாழும்போதே பட்டினி போட்டுக் கொல்லத் தயங்காதவர்கள்’ - மனுஷ்ய புத்திரன் # ”ராயல்டி அளிக்காமல்” என்கிற சொற்கள் விட்டுப் போயினவோ?
18 September 2012
உலை
உலை என்றால்
புகையும் கொதிக்கும் கசியும்
இன்றில்லை எனினும் என்றேனும் ஒருநாள்
உயிருக்கே ஆபத்து
எனவே மூடு!
புகையும் கொதிக்கும் கசியும்
இன்றில்லை எனினும் என்றேனும் ஒருநாள்
உயிருக்கே ஆபத்து
எனவே மூடு!
16 September 2012
பெரிய கடவுளுக்கு சிறிய காணிக்கை
காசு கண்ணன் மீது உயிர்மை மனுஷ்ய புத்திரன் அவதூறு வழக்கு போடவேண்டும்.
13 September 2012
07 September 2012
பாசும் பெயிலும்
<Only three out of the 38 persons killed in the blast at the fireworks unit near Sivakasi were identified as employees of the unit. All the remaining deceased are said to be people from neighbouring areas who rushed to the spot as soon as they heard an initial explosion>
இன்றைய நாளிதழில் இந்த செய்தியைப் படித்தபோது, பள்ளிப்பருவ நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது.
அமெரிக்கா தனது 200ஆம் சுதந்திர தினத்தைக் கொண்டாட 1976ல் சிவகாசியிலிருந்து பட்டாசு வாங்கப்போகிறது என்கிற செய்தி பத்திரிகைகளில் பரவசத்துடன் வெளியாகி இருந்தது.
03 September 2012
நகராட்சி அலுவலகத்திற்குப் போகிறார் தொட்ட மன்னா ராவ்
நமஸ்காரா பாவா. சந்நாகி இத்திரா?
சந்நாகி இத்தனெ. நிமிக ஏன் பிராப்ளம்? உமா ஹேளித்ளு.
சந்நாகி இத்தனெ. நிமிக ஏன் பிராப்ளம்? உமா ஹேளித்ளு.
இல்ல பாவா வருணி பர்த் சர்ட்டிஃபிகேட்னல்லி அவுரு ஹெசுரமத்தரவே இதெ. நன்ன ஹெசுரு இல்லா. அம்மன ஹெசுரு கண்டித்தா பேக்குந்தெ. அது இத்தரெதான பாஸ்பொர்ட் சிக்காதுந்த.
சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
22 August 2012
20 August 2012
18 August 2012
எமூர்
அன்று மாலை கிண்டி ரயில் நிலையத்தில் உயரதிகாரியை சந்திக்கவேண்டி இருந்தது. தூரல் மழையாகுமுன் வண்டியை விரட்டிக்க்கொண்டு சென்றேன். முதற்பார்வைக்கே நிழலுருவங்களாய் வரிசை நீண்டிருப்பது தெரிந்தது. நடைமேடை சீட்டு வாங்க எப்படியும் ஒரு மணிநேரம் ஆகும்போல் தோன்றவே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பாலத்தின் படிக்கட்டுகளில் ஏறினேன். நடைமேடைக்கு இறங்காமல், பறந்துகொண்டிருந்த பயணிகளுக்கு இடைஞ்சலின்றி நடுவழியிலேயே சுவரோரம் நின்றுகொண்டேன். மண்ணின் மைந்தர்தம் வாய்த்திறம் வெள்ளை டைல்ஸ் சுவரை ஓவியங்களாய் அலங்கரித்திருந்தது. புட்டத்தில் ஓவிய நகல் பதித்துவிடாதிருக்க சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள நேர்ந்ததில், பரபரத்துக்கொண்டிருந்தவர்களின் முழங்கைமுட்டிகள் தொப்பையைப் பதம்பார்த்துக்கொண்டிருந்தன. இனிபொறுப்பதில்லை தொப்பையைக் குறைக்க ஏதாவது செய்தாக வேண்டும். குறைந்தபட்சம் பேப்பரையாவது அந்த காலம்போல் தரையில் குந்தி உட்கார்ந்து படிக்க வேண்டும்.
31 July 2012
27 June 2012
சமரசம் உலாவும் இடமே!
அன்னா ஹசாரேவும் திவாலாயிட்டாரு!
ஓஷோ உப்புமாவைக் கிண்டிப்பாத்தும் புக்கா தேறலை!
பிசியோபிசி சினிமா டிஸ்கஷன் ஷெட்யூலுக்கு நடுவுல ஒரு நாள் கூடங்குளத்தை எட்டிப்பாத்ததுல களப்பணியாரம் எதுவும் கெடைக்கலை!
பயணம் பல்லி விழுந்த பலன் ரேஞ்சுல எதை எழுதியும் ஒண்ணும் ஒப்பேறலை! ஒருத்தனும் கண்டுக்கிடலை...
28 March 2012
பெரியார் கொடுத்த விபூதி - நித்ய தடித்தன சதி
<நித்ய சைதன்ய யதி துறவு பூண முடிவெடுத்தபோது நடராஜகுருவின் ஆணைப்படி நேரில்சென்று ஈ.வே.ரா. அவர்களிடம் விபூதி வாங்கி ஆசி பெற்றார் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.>
15 March 2012
அனைவருக்கும் நன்றி.
முகப்பேரிலிருந்து நந்தனத்திற்கு மாற்றலாகிவந்த இருபத்தியேழே நாட்களில் திரும்ப முகப்பேருக்கே மாற்றப்பட்டப் பழிவாங்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகவே ஜூலை 2010ல் லீவ் எழுதிக்கொடுத்து வீட்டில் உட்கார்ந்தேன். சும்மா உட்கார்ந்திருக்க முடியாமல் இணையத்தைத் துழாவத்தொடங்கினேன். ஆகஸ்ட் 16 2010 முதல் தட்டுத்தடுமாறி தமிழ் தட்டச்சக் கற்றுக்கொண்டு இணையத்தில் எழுதத்தொடங்கினேன்.
09 March 2012
07 March 2012
எளக்கியத்த வளக்கப்போறோண்டி விஸ்தாரமா விவாதிச்சி...
<இந்த விவாதங்களையும், ஜோக்கர் கதையையும் ஒரு சேர புத்தகமாகப் போடலாம் என்று தோன்றுகிறது. யாராவது பத்ரியிடம் என் சார்பாகப் பேசுங்களேன்…>
பின் நவீனத்துவ நந்தனார்
சிதம்பரம் போகாமல்...
இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
பல்லவி
சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்
06 March 2012
கேக்கூ விட்ட அபான வாயு 497
துறைக்குள்ளேயே எதிர்த்து நின்று முடிந்தவரைப் போராடிப்பார்த்து முடியாமல் போனதால் உதவி கேட்டுப்போனேனே தவிர எம்டிட்ரம் இளிப்பு காட்டுவதைப்போல ஒன்றும் ‘நல்ல’ போஸ்டிங் கேட்டுப் போகவில்லை.
05 March 2012
வட்டத்திற்கு வெளியிலும் ஒரு வட்டம்
ஆயிரம் வேலைகளை ஒரே நேரத்தில் இழுத்துப்போட்டுக்கொண்டு ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் இலக்கிய ஆசானுக்கு நம்மாலான கைங்கைர்யம்.
விருதுன்னா சும்மாவா?
இன்று காலையில் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தபோது, இணைப்பைப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி, உங்கள் நண்பருக்கு ஜனாதிபதி விருது கிடைத்திருக்கிறது, நீங்கள் சொல்லவே இல்லையே என்றாள்.
04 March 2012
தல சாமியாரின் பணிவிடை - [குட்டிக்கதை] - 499
சிலும்பியிலிருந்து உள்ளே போய் வெளியேறிய புகைமண்டலம் அந்த மாடி அறையையே கந்தர்வலோகமாய் ஆக்கிக்கொண்டிருந்தது. சிரிப்பும் கும்மாளமுமே அந்தப் பிராந்தியத்தின் தேசிய கீதம். அங்கே எவர் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கிண்டலடித்துச் சிரிக்கலாம். பிரதான தெய்வத்திற்குப் பிடித்தது எது பிடிக்காதது எது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மட்டுமே அவசியம்.
03 March 2012
பாகிஸ்தானுக்கு ஆதரவாக விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்பாட்டம்
ஆர்.எஸ்.எஸ் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மற்றும் இந்திய தேசாபிமான அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றன என்றால்,இந்துக்களின் நலன் பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது இந்திய தேசத்திற்கு எதிரான காரியங்கள் ஏதேனும் நடந்திருக்கும் என்பதுதான் இதுவரையில் அவர்கள் உருவாக்கியிருந்த பிம்பம்.
01 March 2012
இந்தக் கடிதத்தை நான் பிரசுரிப்பதாய் இல்லை...
முதலில் இந்தக் கடிதத்தை நான் பிரசுரிப்பதாய் இல்லை... அதற்குக் காரணம் கடிதத்தின் இறுதியில் பி.குவாய் இருக்கும் இரண்டு வரிகள்.
இதயம் கூட ’உண்மை’ பேசுகிறது
இதயம் பேசுகிறது மணியன் மேல் எந்த காலத்திலும் எனக்குத் துளிகூட மரியாதை இருந்தது கிடையாது. மாறாக, கேள்விப்பட்டதை விஷயங்கள் காரணமாய் மட்டமான அபிப்ராயமே உருவாகி இருந்தது.
29 February 2012
ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் - பாகவதர் 2 - ’பாபா கொடுத்த பார்வை’ கடிதம்
R @ j e s h ***@gmail.com 10:32 AM (2 hours ago)
to me
Dear Mamallan,
28 February 2012
27 February 2012
26 February 2012
யாகாவராயினும் புக்காக்க
ஆன்லைன் விளையாட்டுக்களை ஆடிக்கொண்டிருந்த எதிர் வீட்டுக் குட்டிப்பையன் திடீரென காண்ட்-கண்ட், தெர்தா-சர்தா, ஃபூக்கோ-பூக்கோ என தொடர்ந்து கத்தத்தொடங்கிவிட்டான். அந்த வீட்டுக்காரர்கள் என்னமோ ஏதோ என அரண்டுபோயினர். குடும்ப கெளரவத்துக்கு பங்கம் வந்துவிடாத வண்ணம், கமுக்கமாய் அம்மன் கோவில் பூசாரி முதல் 24மணிநேர கிளினிக்கின் ஈயோட்டி மருத்துவர் வரை எல்லோரையும் முயற்சித்துப் பார்த்தனர். ஏது செய்தும் அவன் கத்தலை நிறுத்த முடியாமல் போகவே, இதுபோன்ற கிறுக்கிருக்கும் வீடு என நினைத்தனரோ என்னவோ தம் கவலையை மெல்ல என் மனைவியிடம் பகிர்ந்துகொண்டனர்.
24 February 2012
பொறுக்கிமொழி அவதூறு மூடனுக்கும் விருது
தெரிதா தெர்தா என்று என்னைப்பார்த்து மெட்ராஸ்காரர் யாரேனும் கேட்டால் தெர்லியே என்று சொல்லக்கூடிய நிரக்ஷரகுக்ஷி நான்.
23 February 2012
தோழர்களை சுளுக்கெடுக்கும் ஜெயமோகன்
காவல் கோட்டம் என்கிற நாவலை என் ஆயுளில் படிக்க முடியுமோ முடியாதோ அப்படியே உயிரைக்கொடுத்துப் படித்தாலும் அது எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதைப் பற்றி எனக்குத் தெரிந்த மாதிரி எழுத மீதி ஆயுள் இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒன்று நிச்சயம் ஜெயமோகனின் காவல்கோட்டமும் தோழர்களும் என்கிற இந்த சுளுக்கெடுப்பு கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இந்த ஒரே காரணத்திற்காகவே காவல் கோட்டம் எழுதிய சு.வெங்கடேசனுக்கு பரிசளித்த சாகித்திய அகாதெமிக்கும் இரண்டுவருடம் கழித்து திடீரென முழித்துக்கொண்டு நேற்றுதான் அனைத்தும் கவனத்துக்கு வந்ததான பாவனையில் சுறுசுறுப்பாய் சாடிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தோழரே
நீங்கள் எங்கே வாழ்கிறீர்
நாங்களெல்லாம் குழியிலே
அந்தக் குழியும் தோழரே
மாற்றான் தோளுக்கடியிலே
- ஞானக்கூத்தன் (நினைவிலிருந்து எழுதியது. தவறிருப்பின் திருத்தவும்)
ஆனந்த்! உங்கள் தேசம் மலாவி இல்லைதானே?
On Wed, Feb 22, 2012 at 8:30 PM, Anandh Kumar <***@gmail.com> wrote:
அன்புள்ள மாமல்லன்,
'சிறுமி கொண்டுவந்த மலரி' லிருந்து உங்கள் எழுத்துக்களை தீவிரம்மாக படித்து வருகிறேன் (இதுவரை வலைப்பக்கத்தில்தான்) நேற்று தங்கள் வலைப்பதிவில், 'ரோஸ் மில்க்' படிக்க நேர்ந்தது. அருமையான விவரிப்பு. ஆனால் கடைசியில் ஒரு சிறு குழப்பம். நான் அந்த காட்சிக்குள்ளேயே இருந்ததால் அந்த இல்லாத வரி சரியான நேரத்தில் என்னை கொஞ்சம் அந்நியாமாக்கிவிட்டது.
தொண்டு நிறுவனங்களைப் பற்றி இப்படியா அவதூறு செய்வது?
NGOs: The Self-Appointed Altruists
By: Dr. Sam Vaknin
Written October 2002
Updated March 2005, August 2011
Their arrival portends rising local prices and a culture shock. Many of them live in plush apartments, or five star hotels, drive SUV's, sport $3000 laptops and PDA's. They earn a two figure multiple of the local average wage. They are busybodies, preachers, critics, do-gooders, and professional altruists. They are parasites who feed off natural and manmade disasters, mismanagement, conflict, and strife.
22 February 2012
கைவீசம்மா கைவீசு
National Folklore Support Centre இவாள அழுத்தினா
- Nari Kurava Archives இவா வருவா, இவாள அழுத்தினா
Digital Community Archive in Tamil Nadu இவா வருவா, இதுல
Narikuravar Children's Games இவாள அழுத்தினா ஸ்லைட் ஷோ படம் காட்டுவா
19 February 2012
கேட்டேளே அங்கே அதப் பாத்தேளா இங்கே - சாருண்ணா! அட சைக்கோண்ணா!
ரோஜா முத்தையா நூலகத்தில் பல சிரமங்களுக்கு இடையில் கடுமையான ஆராய்ச்சி செய்து எழுதிய ’தீராக்காதலி’ என்கிற புத்தகத்தைத் தாழ்ந்த தமிழகம் கண்டுகொள்ளவில்லை என்று எழுத்தாளர் புலம்பியதால்தான் ஆராய்ச்சியின் லட்சணம் என்ன என்கிற கேள்வியை எழுப்ப நேர்ந்தது.
18 February 2012
17 February 2012
சாரு பிழிந்த சாறு
<சரி, புத்தகம்தான் விற்கவில்லை. அதற்கு ஏதாவது மதிப்புரையாவது வந்ததா என்றால் அதுவும் இல்லை. இப்போது ரஜினியைக் கொண்டாடும் அளவை விட மிகப் பெரிய அளவில் தமிழ்நாடே கொண்டாடிய எம்.கே.டி.யைப் பற்றி எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அந்தமான் சிறைக்குச் சென்று திரும்பி, சொத்தையெல்லாம் இழந்து, கண் பார்வையும் பறிபோய் அவர் ஒரு அம்மன் கோவிலில் அமர்ந்து இருந்த போது ‘யாரோ குருட்டுப் பிச்சைக்காரன்’ என்று அவர் மடியில் காசு போட்ட சம்பவம் பற்றி அந்த நூலில் எழுதியிருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகம் இங்கே தமிழக வரலாற்றில் நடந்தேறிய சம்பவம் அது. அழுது அழுது, உருகி உருகி என் உயிரே கரைந்து போன நிலையில் எழுதினேன். ஒரு காலத்தில் தமிழக மக்களின் கடவுளாக இருந்தவர் எம்.கே.டி. அப்படிப்பட்டவருக்கு அந்த நிலை! >
14 February 2012
ஆத்தர் சாவடிச்சா... அது ராங்காப் போறதில்லே
//author is dead//
அட! இதெல்லாம் கேழ்க்க நன்றாகத்தான் இருக்கு.
பாபாவின் சீடன்
atul sharma 5:16 PM (2 hours ago)
Dear friends,
Please find attached herewith the photographs of Mud- Block- House constructed at Kosurla village 35 k.m. from wardha. Smt. Sindhubai wankar, mentally challenged women, abandoned by her in-laws was staying in the shed with her 13 year old daughter. Two years ago her aged mother died in the same shed.
10 February 2012
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
@mdmuthuM.D.Muthukumaraswamy
இலக்கிய விழாக்கள் என்ற வியாபாரம் 'பிசினஸ் வேர்ல்ட்' கட்டுரைbusinessworld.in/businessworld/…
17 Jan via web Favorite Retweet Reply
Retweeted by writerpayon and 1 other
இலக்கிய விழாக்கள் என்ற வியாபாரம் 'பிசினஸ் வேர்ல்ட்' கட்டுரைbusinessworld.in/businessworld/…
17 Jan via web Favorite Retweet Reply
Retweeted by writerpayon and 1 other
09 February 2012
சுயபாரம் சுமந்து...
இலக்கியத்திற்காகவும் இலக்கியமாகவும் மட்டுமே தம் வாழ்நாள் முழுமையும் வாழ்ந்துகொண்டிருப்பதாய் புலம்புவதுபோலப் பீற்றிக்கொள்வதும் பீற்றிக்கொள்ளுவது போலப் புலம்புவதும் தமக்கு என்னென்ன் கெளரவங்கள் கிடைத்திருக்கின்றன,தாம் எங்கெங்கெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும் விருதுகளை சுமந்து கொண்டிருக்கிறோம் என்று சதா சர்வகாலமும் தங்களை இறக்கிவைக்க முடியாமல் சுயபாரம் சுமந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளின் கவனத்திற்கும் அவர்களது பல்லக்கை சுமப்பதே தம் வாழ்நாள் பாக்கியம் என்று அலையும் வாசகர்களின் பார்வைக்கும் ரமணரின் பதில் போன்ற இந்தக் கேள்வியைக் கொண்டுவருவது நம் கடமையல்லவா?
07 February 2012
ரஜினிக்கு சாரு வகுப்பெடுத்தால் சாருவுக்கு வாசகர் சுளுக்கெடுக்கிறார்
ரஜினிக்கு அறிவுரை கூறும் சாருவுக்கு, எவனையாவது அடிக்க வேண்டும் என்பதற்காகக்கூட ’அடித்து’ விடுவதை எப்போதுதான் விடப்போகிறார்களோ நம் எழுத்தாளர்கள் என்று வாசகரிடமிருந்து வருத்தமொன்று வந்திருக்கிறது. ஊரறிய அதை சாருவுக்கு அனுப்பி வைப்பது நம் தலையாய கடமையல்லவா?
05 February 2012
எஸ்.ராவும் தமிழ் நண்டுகளும்
எழுத்தாளரும் இல்லை சினிமாவில நுழைய முயற்சித்துத் தோற்றவரா என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் வாசகரும் பதிவருமான கோபிக்கு ஏனைய்யா எஸ்.ரா மேல் இத்தனை வயிற்றெரிச்சல்?
04 February 2012
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...
இலக்கிய எழுத்தாளர் ’கேளிக்கை சினிமா’ நடிகர் என இரண்டு பேர் ஒரு விழாவில் இரண்டு கதைகளைச் சொல்கிறார்கள். இரண்டுமே அவர்கள் படித்த (அல்லது கேள்விப்பட்ட) கதைகள் எனும்போது நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?
03 February 2012
ரஜினி அவர்களுக்குப் பாராட்டு விழா
கலைஞர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பதுதான் உலகம் முழுமையும் நம்பும் பொதுக் கருத்து. ஆனால் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய சாதனைகளைப் பாராட்டுவதைவிடவும் ஒருபடி மேலே போய், உச்ச நட்சத்திரத்தைப் உச்சி குளிரப் புகழ, உலக இலக்கிய வாசிப்பை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் உணர்த்தியது இந்த விழாவின் இன்னொரு சிறப்பு.
01 February 2012
ஹாஜி முராத் - டால்ஸ்டாயின் கடைசி நாவல் - சுகுமாரன்
''அப்போதுதான் உழுதுபோட்டிருந்த கரிசல் வயல்வெளிக்குக் குறுக்காகத்தான் வீட்டுக்குப் போகும் வழி.புழுதி படர்ந்த அந்த வழியாக நடந்தேன். உழவு முடிந்த அந்த வயல் ஒரு பெரிய நிலவுடைமையாளனுடையது.பாதையின் இருபுறமாகவும் எனக்கு முன்னால் தெரியும் குன்றின் அடிவாரத்திலுமாகவும் வயல் விரிந்து கிடந்தது. சீரான உழவு சால்களையும் சதுப்பான மண்ணையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.ஆழமாக உழவு செய்யப்பட்டிருந்ததனால் மண்ணில் புல்லையோ வேறு செடிகளையோ பார்க்க முடியவில்லை. எல்லாம் கறுப்பாக இருந்தது. உயிரற்ற அந்தக் கரிய பூமியில் உயிருள்ள ஏதாவது தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ' மனிதன்தான் எத்தனை நாசக்காரன். தன்னுடைய இருப்புக்காக உயிருள்ள வெவ்வேறான எத்தனை தாவரங்களை அழிக்கிறான்?' என்று யோசித்தேன். எனக்கு முன்னால் பாதையின் வலது பக்கத்தில் சின்னப் புதர் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது சற்று முன்பு, நான் அநாவசியமாகப் பறித்து வீசியெறிந்த நெருஞ்சி என்று தெரிந்தது. அந்தத் 'தார்த்தாரிய' தாவரத்துக்கு மூன்று கிளைகள் இருந்தன. ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கை போல ஒட்டிக்கொண்டிருந்தது. மற்ற இரு கிளைகளிலும் பூக்கள் இருந்தன.அவை முன்பு சிவப்பாக இருந்து இப்போது கருமையேறியிருந்தன. ஒரு தண்டு ஒடிந்திருந்தது. மறு பாதி நுனியில் அழுக்குப் புரண்ட பூவுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்த பூவும் கறுப்புச் சேறு படிந்து இருந்தாலும் நிமிர்ந்து நின்றிருந்தது. ஏதோ வண்டிச் சக்கரம் அந்தச் செடியின் மேல் உருண்டு போயிருக்க வேண்டும். ஆனாலும் செடி மறுபடியும் நிமிர்ந்து எழுந்திருக்கிறது. அதனால்தான் விறைப்பாக நின்றாலும், உடலின் ஒரு பகுதி பிய்த்து எடுக்கப் பட்டதுபோலவோ, குடல்கள் உருவப்பட்டது போலவோ, ஒரு கை முறிக்கப்பட்டதுபோலவோ, கண்கள் பிடுங்கப்பட்டதுபோலவோ அது ஒரு பக்கமாகத் திருகியிருந்தது. எனினும் தன்னுடைய சகோதரர்களை அழித்த மனிதனுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்றது.
எஸ்.ரா! ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி
| 2:47 PM (3 hours ago) | |||
|
என்னுடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூன்று தமிழ் ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பதினோறு பேர் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நான்கு கல்லுரிகளிலும் இரண்டு பல்கலைகழங்களிலும் என்னுடைய படைப்புகள் பாடமாக வைக்கபட்டிருக்கின்றன.
31 January 2012
காந்தி - டால்ஸ்டாய் கடிதங்கள் - பேராசிரியர் எஸ்.ராவின் பார்வைக்கு
என்று எழுதிய முகூர்த்த விசேஷம், தகவல்களாய் வந்து கொட்டுகின்றன. முடிந்தவரை எனக்கு வந்த அனைத்தையும் எல்லோருக்கும் பயன்படக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இங்கே தொகுக்கிறேன். குறிப்பாக,
பேராசிரியர் எஸ்.ரா
இடிச்ச புளியாய் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொல்லாமல் இருக்கும்வரை இவரும் புத்திசாலிதானோ என்று தோன்றும். அதுவும் பளபளக்கும் முன்மண்டை வாய்க்கப்பட்டால் படித்தே முடிகொட்டிப் போனத்ற்கு சாட்சியமாய் அசப்பில் பேரறிஞர் பெர்னார்ட் ஷாவோ என்றுகூடத் தோன்றும். இது போதாதென்று மைக்கையும் பிடித்து சப்ளாக்கட்டையும் இல்லாமல் இலக்கிய உபன்யாசம் வேறு கொடுத்தால் கேட்கவே வேண்டாம் ஆழ நீள அகலத்தில் அசல் இலக்கியவாதி இவர்தான் என்று தோன்றிவிடுவதில் என்ன ஆச்சரியம்.
28 January 2012
காசு - விலிருந்து வந்த காசோலை
மனதுக்குப்பிடித்த சந்தோஷமான காரியமே தொழிலாகவும் அமைவதென்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி.
- லால்குடி ஜெயராமன்
25 January 2012
எஸ்.ராவுக்கெதிரான அவதூறுக்கெதிராகக் கண்டணம்
இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தம் பெயரில் வெளியிட்டிருப்பவர் என்கிற பெருமைக்கு உரியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அறந்தை நாராயணன் வாரந்தோறும் வயதாகிறது என்று நடிகையைப் பற்றி எழுதியதைப்போல வாரந்தோறும் விருதாகிறது என்பதையே தம் வாழ்நாள் இலக்கிய சாதனையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். அவரது இலக்கிய சாதனையைப் பாராட்ட ரஜினியும் வைரமுத்துவுமே வாயில்தேடி வருமளவுக்கு மதிப்பு மரியாதையுடன் இலக்கியமாய் வாழும் ஒருவரைப்போய் அவதூறு செய்யலாமா? அப்படி செய்யப்படும் அவதூறை இலக்கிய உலகம் கண்டிக்காமல் விடலாமா? ஊர்பேர் தெரியாத ஒருவர் கிசுகிசு பாணியில் அவதூறு செய்தால் அதை பார்த்துக்கொண்டு எழுத்தாளர்கள் தமிழில் எழுதும் பாவத்திற்காக சும்மா இருக்க வேண்டுமா?
22 January 2012
எண்ணிகையற்ற ஏணிகள்
நடந்துமுடிந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கியதை விடவும் வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். நின்றும் அலைந்தும் வேடிக்கை பார்த்ததைவிட உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததே ஜாஸ்தி. உட்கார விரும்பியதும் உட்கார முடிந்ததுமான ஒரே இடம் தமிழினி. வசந்தகுமாரின் அருகில்தான். அவன் 81லிருந்து நண்பன். எந்த காலத்திலும் வெளிச்சத்திற்கே வரவிரும்பாதவன். அவனது இலக்கிய ரசனைக்கும் எனக்கும் ஒத்தே வராது. பல சமயங்களில் அவனது அபிப்ராயங்கள் முட்டாள்தனமாகக்கூடத் தோன்றும். வாதத்திற்கே வராமல் கட்டைப் பஞ்சாயத்தாக ஒற்றை வார்த்தை ஒரு வரியில் அடித்துவிட்டுப் போய்விடுவான்.
வார்த்தையும் சாரமும்
20.10.10க்கும் 20.01.12க்கும் இடையில உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா? குறிப்பாக 2010ல் ’உதிர்த்ததால்’ என்பதையும் 2012ல ‘வேலியோர’ என்பதையும் பாருங்கள் எந்த வகையான இலக்கியம் என்பது புரியலாம். சுலபத்தில் புரளுகிற நாவல்ல இது.
20 January 2012
விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள்
On Thu, Jan 19, 2012 at 8:30 AM, Arul Victor Suresh <***@gmail.com> wrote:
19 January 2012
எந்துண்டி வஸ்தி?
நகுலன் எழுதிய எல்லாவற்றிலும், இல்லாத அர்த்தங்களை இட்டு நிரப்பி தமக்குத்தாமே இலக்கிய டோப்பா மாட்டிக்கொண்டு இளிக்கும் போலிகளை சுளுக்கெடுக்கும் பிரமிளின் விமர்சனக் கவிதை இது.
18 January 2012
15 January 2012
கலையின் வேலை
இரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒன்று ஏன் கலையாக இருக்கிறது பிரிதொன்று ஏன் ஆகவில்லை என்று விளக்க முற்படுவதைப்போல சிரமமான காரியம் இலக்கியத்தில் வேறு இல்லை.
12 January 2012
10 January 2012
அம்பி மாமா சீரீஸ் - பூர்வாங்கம் 101 (1)
அம்பி மாமா என்றதும் யாருக்கேனும் அம்புலி மாமா நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பன்று.
படத்தையும் படிக்கலாம்
Konangal Screening - Francesco Rosi's CHRIST STOPPED AT EBOLI
- WhenSunday, January 15, 2012
- Time5:30pm until 8:30pm
WherePerks Mini Theater, Perks School, Trichy Road ,
Description | Screening starts after 5.45 pm - more info at : http:// |
09 January 2012
பழைய ஜாடியும் புதிய முகமூடியும்
கெட்டவார்த்தை பேசறவன் எல்லாம் கெட்டவன் இல்லீங்க # பலபேருக்கு வயித்துல இருக்கற பல்லின் விஷம் வெளியில தெரியாது
07 January 2012
வெட்கங்கெட்டப் பூனா
முகநூல் நண்பர் வேண்டுகோளை எப்படி ஏற்க வேண்டும் என்பதுகூடத் தெரியாதவன் உதயா என்கிற எழுத்தாளன்.
06 January 2012
புவன்னா போன பூனா
புவன்னா கவிதைப்புகழ் நண்பர் பூனா போயிருக்கிறார்.
நானும் ரவுடிதான் என்று வாலிண்டியராக ஜீப்பில் ஏறி, எல்லாரும் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்குப் போறேன் ஜெயிலுக்குப்போறேன் என்பதுபோல, பூனா போவதை சொல்லிவிட்டுப் போனதைப் படிக்க நேர்ந்தது.
05 January 2012
படிக்காத மொக்கையும் படித்த மொக்கையும்
ramji Yahoo (Google+) noreply-a8e4858b@plus.google.com 9:32 AM (1 hour ago) to me
படித்த இளைஞன் சனி ஞாயிறில் கவிதை எழுதக்கூடும். அந்தப் ஊத்தைவாய் பான்பராக்காரனோ கவிதையாய் வாழ்ந்துகொண்டிருந்ததாய்ப்பட்டது. அவனுக்கு அந்தப் பொருட்கள் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றன என்பது கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யோசித்துப்பார்த்தால் தெரிந்திருக்கவேண்டிய அவசியமோ அக்கறையோகூடத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. தன் வேலயில் முழு ஈடுபாட்டுடன் முழு தேர்ச்சியுடன் அவர் ஆழ்ந்திருந்தார். இலக்கியத்திற்கான என் நேரத்தை இன்றைக்கு அளிக்கும் வல்லமை அவரிடமே இருக்கிறது.
04 January 2012
வேலை
மாலையில் போய் கண்டெய்னருக்கு சீல் வைக்கவேண்டி இருந்தது. தொழிற்சாலை இருக்குமிடம் வேடந்தாங்கலுக்கு எட்டு பத்து கிலோமீட்டருக்கு முன்பாக. செங்கல்பட்டிலிருந்து கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து கிலோமீட்டர் இருக்குமாயிருக்கும். என் வேலை அங்கே இருந்து கண்கணிப்பது. கண்காணிப்பு என்றால் கண்கொத்திப்பாம்பாக அன்று. அங்கே ‘இருந்து’ பரிசோதிக்க வேண்டும். தொழிற்சாலையின் ஊழியர் மூன்று மணிக்கே வந்து ஆவணங்களில் முத்திரைகள் இட்டு அமைதியாய் ஒரு பக்கமாய் அமர்ந்திருந்தார். எப்படியும் நான்கு மணிக்கு மின்வெட்டு உண்டு என்பதால் அதுவரை கொஞ்சம் பொறுங்கள் ஆன்லைன் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று அலுவலக வேலையில் மூழ்கினேன்.
03 January 2012
பிரவாகமான எழுத்து
Tropic of Cancer என்கிற இந்தப் புத்தகம் HENRY MILLER ஆல் 1934ல் எழுதப்பட்டதென்றால் நம்புவீர்களா?
Subscribe to:
Posts (Atom)