31 January 2012

காந்தி - டால்ஸ்டாய் கடிதங்கள் - பேராசிரியர் எஸ்.ராவின் பார்வைக்கு


என்று எழுதிய முகூர்த்த விசேஷம், தகவல்களாய் வந்து கொட்டுகின்றன. முடிந்தவரை எனக்கு வந்த அனைத்தையும் எல்லோருக்கும் பயன்படக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இங்கே தொகுக்கிறேன். குறிப்பாக, 

பேராசிரியர் எஸ்.ரா

இடிச்ச புளியாய் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொல்லாமல் இருக்கும்வரை இவரும் புத்திசாலிதானோ என்று தோன்றும். அதுவும் பளபளக்கும் முன்மண்டை வாய்க்கப்பட்டால் படித்தே முடிகொட்டிப் போனத்ற்கு சாட்சியமாய் அசப்பில் பேரறிஞர் பெர்னார்ட் ஷாவோ என்றுகூடத் தோன்றும். இது போதாதென்று மைக்கையும் பிடித்து சப்ளாக்கட்டையும் இல்லாமல் இலக்கிய உபன்யாசம் வேறு கொடுத்தால் கேட்கவே வேண்டாம் ஆழ நீள அகலத்தில் அசல் இலக்கியவாதி இவர்தான் என்று தோன்றிவிடுவதில் என்ன ஆச்சரியம்.

28 January 2012

காசு - விலிருந்து வந்த காசோலை

மனதுக்குப்பிடித்த சந்தோஷமான காரியமே தொழிலாகவும் அமைவதென்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி. 
- லால்குடி ஜெயராமன்

இதுதான் என் பெயர் - சக்கரியாவின் முன்னுரை

இந்தச் சிறுநாவல், மொழிபெயர்ப்பாளரான திரு.சுகுமாரனின் கைகளினூடே தமிழ் வாசகர்களை அடைவது என்னை மிகவும் மகிழ்ச்சிகொள்ளச் செய்கிறது.

25 January 2012

எஸ்.ராவுக்கெதிரான அவதூறுக்கெதிராகக் கண்டணம்

இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தம் பெயரில் வெளியிட்டிருப்பவர் என்கிற பெருமைக்கு உரியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அறந்தை நாராயணன் வாரந்தோறும் வயதாகிறது என்று நடிகையைப் பற்றி எழுதியதைப்போல வாரந்தோறும் விருதாகிறது என்பதையே தம் வாழ்நாள் இலக்கிய சாதனையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். அவரது இலக்கிய சாதனையைப் பாராட்ட ரஜினியும் வைரமுத்துவுமே வாயில்தேடி வருமளவுக்கு மதிப்பு மரியாதையுடன் இலக்கியமாய் வாழும் ஒருவரைப்போய் அவதூறு செய்யலாமா? அப்படி செய்யப்படும் அவதூறை இலக்கிய உலகம் கண்டிக்காமல் விடலாமா? ஊர்பேர் தெரியாத ஒருவர் கிசுகிசு பாணியில் அவதூறு செய்தால் அதை பார்த்துக்கொண்டு எழுத்தாளர்கள் தமிழில் எழுதும் பாவத்திற்காக சும்மா இருக்க வேண்டுமா? 

22 January 2012

எண்ணிகையற்ற ஏணிகள்

நடந்துமுடிந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கியதை விடவும் வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். நின்றும் அலைந்தும் வேடிக்கை பார்த்ததைவிட உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததே ஜாஸ்தி. உட்கார விரும்பியதும் உட்கார முடிந்ததுமான ஒரே இடம் தமிழினி. வசந்தகுமாரின் அருகில்தான். அவன் 81லிருந்து நண்பன். எந்த காலத்திலும் வெளிச்சத்திற்கே வரவிரும்பாதவன். அவனது இலக்கிய ரசனைக்கும் எனக்கும் ஒத்தே வராது. பல சமயங்களில் அவனது அபிப்ராயங்கள் முட்டாள்தனமாகக்கூடத் தோன்றும். வாதத்திற்கே வராமல் கட்டைப் பஞ்சாயத்தாக ஒற்றை வார்த்தை ஒரு வரியில் அடித்துவிட்டுப் போய்விடுவான்.

வார்த்தையும் சாரமும்


20.10.10க்கும் 20.01.12க்கும் இடையில உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா? குறிப்பாக 2010ல் ’உதிர்த்ததால்’ என்பதையும் 2012ல ‘வேலியோர’ என்பதையும் பாருங்கள் எந்த வகையான இலக்கியம் என்பது புரியலாம். சுலபத்தில் புரளுகிற நாவல்ல இது. 

19 January 2012

எந்துண்டி வஸ்தி?

நகுலன் எழுதிய எல்லாவற்றிலும், இல்லாத அர்த்தங்களை இட்டு நிரப்பி தமக்குத்தாமே இலக்கிய டோப்பா மாட்டிக்கொண்டு இளிக்கும் போலிகளை சுளுக்கெடுக்கும் பிரமிளின் விமர்சனக் கவிதை இது.

15 January 2012

கலையின் வேலை

இரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒன்று ஏன் கலையாக இருக்கிறது பிரிதொன்று ஏன் ஆகவில்லை என்று விளக்க முற்படுவதைப்போல சிரமமான காரியம் இலக்கியத்தில் வேறு இல்லை.

பிரார்த்தனை

கடுப்படிக்கிறது இந்தக் கண்ணாடி
இறைவா
என்னைச் சுற்றிக் கண்ணாடியே இல்லாமல்
பார்த்துக்கொள்

12 January 2012

ரோசனை

உனக்கென்ன தோணுது

ரூலுக்கு மாறாக ஆபீசர்கள்
லஞ்சத்தை லட்சத்தில் கேட்கலாமோ?

10 January 2012

அம்பி மாமா சீரீஸ் - பூர்வாங்கம் 101 (1)

அம்பி மாமா என்றதும் யாருக்கேனும் அம்புலி மாமா நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பன்று. 

படத்தையும் படிக்கலாம்

Konangal Screening - Francesco Rosi's CHRIST STOPPED AT EBOLI
Description
Screening starts after 5.45 pm - more info at :
http://konangalfilmsociety.blogspot.com/

09 January 2012

பழைய ஜாடியும் புதிய முகமூடியும்


தித்த மாமல்லன்

விமலாதித்த மாமல்லன்'s profile photo
கெட்டவார்த்தை பேசறவன் எல்லாம் கெட்டவன் இல்லீங்க # பலபேருக்கு வயித்துல இருக்கற பல்லின் விஷம் வெளியில தெரியாது

07 January 2012

வெட்கங்கெட்டப் பூனா

முகநூல் நண்பர் வேண்டுகோளை எப்படி ஏற்க வேண்டும் என்பதுகூடத் தெரியாதவன் உதயா என்கிற எழுத்தாளன்.

06 January 2012

புவன்னா போன பூனா

புவன்னா கவிதைப்புகழ் நண்பர் பூனா போயிருக்கிறார். 

நானும் ரவுடிதான் என்று வாலிண்டியராக ஜீப்பில் ஏறி, எல்லாரும் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்குப் போறேன் ஜெயிலுக்குப்போறேன் என்பதுபோல, பூனா போவதை சொல்லிவிட்டுப் போனதைப் படிக்க நேர்ந்தது. 

05 January 2012

படிக்காத மொக்கையும் படித்த மொக்கையும்


ramji Yahoo (Google+) noreply-a8e4858b@plus.google.com 9:32 AM (1 hour ago) to me

படித்த இளைஞன் சனி ஞாயிறில் கவிதை எழுதக்கூடும். அந்தப் ஊத்தைவாய் பான்பராக்காரனோ கவிதையாய் வாழ்ந்துகொண்டிருந்ததாய்ப்பட்டது. அவனுக்கு அந்தப் பொருட்கள் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றன என்பது கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யோசித்துப்பார்த்தால் தெரிந்திருக்கவேண்டிய அவசியமோ அக்கறையோகூடத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. தன் வேலயில் முழு ஈடுபாட்டுடன் முழு தேர்ச்சியுடன் அவர் ஆழ்ந்திருந்தார். இலக்கியத்திற்கான என் நேரத்தை இன்றைக்கு அளிக்கும் வல்லமை அவரிடமே இருக்கிறது.

04 January 2012

வேலை

மாலையில் போய் கண்டெய்னருக்கு சீல் வைக்கவேண்டி இருந்தது. தொழிற்சாலை இருக்குமிடம் வேடந்தாங்கலுக்கு எட்டு பத்து கிலோமீட்டருக்கு முன்பாக. செங்கல்பட்டிலிருந்து கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து கிலோமீட்டர் இருக்குமாயிருக்கும். என் வேலை அங்கே இருந்து கண்கணிப்பது. கண்காணிப்பு என்றால் கண்கொத்திப்பாம்பாக அன்று. அங்கே ‘இருந்து’ பரிசோதிக்க வேண்டும். தொழிற்சாலையின் ஊழியர் மூன்று மணிக்கே வந்து ஆவணங்களில் முத்திரைகள் இட்டு அமைதியாய் ஒரு பக்கமாய் அமர்ந்திருந்தார். எப்படியும் நான்கு மணிக்கு மின்வெட்டு உண்டு என்பதால் அதுவரை கொஞ்சம் பொறுங்கள் ஆன்லைன் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று அலுவலக வேலையில் மூழ்கினேன்.

03 January 2012

பிரவாகமான எழுத்து

Tropic of Cancer என்கிற இந்தப் புத்தகம் HENRY MILLER ஆல் 1934ல் எழுதப்பட்டதென்றால் நம்புவீர்களா?

02 January 2012

வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் சாரல் விருது



நினைவுச் சிற்பம்


07- 01- 2012 -சனிக்கிழமை
மாலை - 6 00 மணி
இடம் - தேவநேயப் பாவணர் நூலக அரங்கம், 
அண்ணா சாலை, சென்னை-600 002.

பங்கேற்போர்
நாஞ்சில்நாடன் | பா. ஜெயப்பிரகாசம் | எஸ். ராமகிருஷ்ணன்
நா. முத்துக்குமார் | ஜேடி-ஜெர்ரி

இணையத்தில் புற்றுநோய்க்கெதிராக இலக்கியப் போட்டிகள்


SUNDAY, 1 JANUARY 2012

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்