07 January 2012

வெட்கங்கெட்டப் பூனா

முகநூல் நண்பர் வேண்டுகோளை எப்படி ஏற்க வேண்டும் என்பதுகூடத் தெரியாதவன் உதயா என்கிற எழுத்தாளன்.

<எல்லாவற்றையும்விடக் கொடுமை என்னவென்றால், உதயாவின் எழுத்தில் தீவிர அக்கறையும் வ்ருப்பமும் கொண்ட வாசகர்களில் சிலர்கூட ‘இதெல்லாம் உண்மையா? உண்மையா?’ என்று கேட்டதுதான். எதெல்லாம் உண்மையா? ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒத்து செக்ஸ் உரையாடல் செய்கிறார்கள்.

அதை உண்மையா என்று கேட்டால் என்ன அர்த்தம்?>

எக்ஸைல் பக்கம் 153

நிஜத்தில் சாட் உரையாடல் சம்பவம் நடந்தபோது, உதயாவின் எதிர்வினை என்ன?



Charu Nivedita
மூன்று தினங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தால் என் மீது ஒரே அவதூறு. ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். யார் மீது வேண்டுமானாலும் யாரும் இப்படி ஒரு போலியான உரையாடலை உருவாக்கி நெட்டில் உலவ விட முடியும். நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை. ஷோபா சக்தி மீது அவதூறு செய்தார்கள். இப்போது என்னைப் பிடித்திருக்கிறார்கள். அவதூறுகளுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி அலுப்பாக இருக்கிறதுJune 20, 2011 at 10:14pm

இதற்கு ”முதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.” என்பவரின் எதிர்வினை என்ன?

<தமிழச்சி எழுதியிருப்பதையும் யூ ட்யூபில் இருக்கும் வீடியோவையும் பார்த்துவிடுங்கள். 

சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர் ஒரு வாசகியிடம் பொறுக்கித்தனமாக நடந்திருக்கிறார். அந்தப் பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தும் சரியான காரியத்தை அந்தப் பெண் செய்திருப்பதாகவே கருதுகிறேன்.

சாருவின் செயல்களுக்கு சற்றும் குறையாத வகையில் இந்தப் பொதுப்புத்தி மோரான்களில் செயல்கள் இருக்கின்றன. இவர்களுக்கெல்லாம் உணர்ச்சி என்பது லவலேசமாவது இருக்குமா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அந்தப் பெண் பேசியிருக்கக் கூடாதாம், முதலிலேயே கட் செய்திருக்க வேண்டுமாம், இப்போது அவர் போடுவது சீனாம். ஐயா, அது சீனாக இருக்கட்டும் அல்லது தேனாக இருக்கட்டும், ஏண்டா செய்தே என்று ஒற்றை வார்த்தை கேட்கத் துப்பில்லை (அதான் எல்லாரும் கேக்கறாங்களே, நான் வேற தனியா கேக்கணுமான்னு ஒரு எஸ்கேப்!). முள் சேலை என்று டி ஆர் பாணி உவமைகள் வேறு!

இதுல இன்னும் சிலரோட அராஜகம் அதிகம். ஒன்னு, கையைப் பிடிச்சு இழுக்கணும், இல்லாட்டி அவன் கிருபானந்த வாரியார்னு நக்கலடிக்கப் படுவான். ஐயா சாமீகளா, இந்த திடீர் குபீர்னு நீங்க கொடுக்கற பட்டத்தையெல்லாம் நீங்களே வச்சுக்குங்க.>

இப்படிப் பொங்கலோ பொங்கல் எனப் பொங்கியெழுந்தது இறுதியில் தளர்ந்து பொங்கி முடிந்தது எப்படி?

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - சாரு ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது :

/மூன்று தினங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தால் என் மீது ஒரே அவதூறு. ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். யார் மீது வேண்டுமானாலும் யாரும் இப்படி ஒரு போலியான உரையாடலை உருவாக்கி நெட்டில் உலவ விட முடியும். நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை. ஷோபா சக்தி மீது அவதூறு செய்தார்கள். இப்போது என்னைப் பிடித்திருக்கிறார்கள். அவதூறுகளுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி அலுப்பாக இருக்கிறது/

இதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. பின்னூட்டப் பெட்டியை மூடுகிறேன். நன்றி.
Jun 21, 2011 12:42:57 PM>

நிஜத்தில் நடக்கும்போது பொங்காமல் போனால் இணையத்து குருபீடம் கேள்விக்குறியாகிவிடும், எனவே எல்லோரையும் முந்திக்கொண்டு பொங்க வேண்டும். 

”நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை.” என்று குருஸ்ரேஷ்டர் டபாயலாய்க் கூறுவார்.

இதற்காகவேக் காத்திருந்தவர்போல், தலைமை சிஷ்யர் நேற்று தான் எடுத்த வாந்தியில் சறுக்கிவிடதபடிக்கு, ஓஹோ அப்படியா, ஐயோ பாவம் என்று அப்பாவியாய் குரு வார்த்தையை அப்படியே உண்மையாய் எடுத்துக்கொண்டு, 

<இதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. பின்னூட்டப் பெட்டியை மூடுகிறேன். நன்றி.> 

என்று மங்களம் பாடி முடித்துவிடுவார். 

எழுத்தாளனின் வார்த்தையைப் பிடித்துக்கொண்டு வாசகன்தான் எப்போதும் தொங்கியாக வேண்டும். வாசகனுக்காகவே வாழ்வதாய் நடிக்கும் எழுத்தாளர்களுக்கு வாசகன்மேல் உண்மையான அக்கறை துளிகூடக் கிடையாது.

ஜேப்படி எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, வாசகன் ஜேப்பியோடு திரியும் கேனையன் அவ்வளவே.

காசுகொடுத்து புத்தகம் வாங்கும் பொதுப்புத்தியுள்ள எந்த வாசகனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெந்ததோ வேகாததோ விற்றால் போதும் என்கிற பதிப்பகங்கள் எதையும் போடும்.கூடவே கார்ப்பொரேட் காருண்யத்துடன் லாபநோக்கமேயின்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஹசாரேவை அடிமாடாக அடக்கவிலைக்குக் கொடுத்தால் சனீஸ்வர சாந்திக்குப் பீடைத்துணி தானம் கொடுத்ததாகவும் ஆயிற்று. 

<எல்லாவற்றையும்விடக் கொடுமை என்னவென்றால், உதயாவின் எழுத்தில் தீவிர அக்கறையும் வ்ருப்பமும் கொண்ட வாசகர்களில் சிலர்கூட ‘இதெல்லாம் உண்மையா? உண்மையா?’ என்று கேட்டதுதான். எதெல்லாம் உண்மையா? ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒத்து செக்ஸ் உரையாடல் செய்கிறார்கள்.

அதை உண்மையா என்று கேட்டால் என்ன அர்த்தம்?>

நிஜத்தில் நிகழ்ந்தபோது அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று சொல்லிவிட்டு, அதே விஷயத்தை நாவலில் நியாயப்படுத்துவதற்குப் பெயர்தான் இலக்கியமா? இதுதான் பின் நவீனத்துவப் புனைவுதரும் சுதந்திரமா? இல்லை எளிய தந்திரமா?


ஜ்யோவ்ராம் சுந்தர்
பல விதமான கதை சொல்லும் முறைகளைக் கட்டவிழ்க்கும் நாவல் எக்ஸைல். நான் இதை சர்வ நிச்சயமாக நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.


விமலாதித்த மாமல்லன்
சாட்டில் நாவால் நக்கினால் அறச்சீற்ற கண்டணப் பொங்கல் அதை நியாயப்படுத்தி நாவலில் நக்கினால் ஆஹாவென இலக்கியப் பொங்கல் # வெக்கங்கெட்ட பூனா

தொடர்புடைய பதிவுகள்