//author is dead//
அட! இதெல்லாம் கேழ்க்க நன்றாகத்தான் இருக்கு.
ஆனால் புக்கை எழுதிக்கொண்டு இருக்கும்போதிலிருந்தே ஆரம்பித்து, புறமோசன் செய்கிறேன் பேர்வழி என்று புத்தகமே கொண்டாட்டம் கொண்டாட்டம் எனத் தானே சொல்லிக்கொண்டு, அச்சகத்த்கிலிருந்து கொண்டுவந்த புக்குகள் அரங்க வாயிலிலேயே அலுங்காமல் குலுங்காமல் அம்பாரமாய் அடுக்கப்பட்டுக் கிடக்க, கொண்டாட்டமாய் விழா நடத்தியதாய்க் கொண்டாடிகொண்டு, விமர்சனக் கூட்டம் என்கிற பெயரில் எட்டடிக்குச்சில் சதிராடியதை சவடாலாய் ’சர்வதேசம்’ என்று எழுதிக்கொண்டு, இப்படியாக அடுத்த புக்ஃபேருக்காக அடுத்த புக்கை ஆத்தர் எழுத ஆரம்பிக்கும்வரை தினம்தினம் அகப்பட்டு சாவது யாரு?
சாதாரன மனிதர்கள் வருடத்திற்கு ஒருமுறை சாவை நினைவுபடுத்திக்கொள்வதற்குப் பெயர் திவசம். ஆனால் இலக்கியம் என்கிற பெயரில் ஆத்தரிடமிருந்து வருடம் முழுக்க வாசகனுக்குக் கிடைப்பது சித்ரவதை.