காவல் கோட்டம் என்கிற நாவலை என் ஆயுளில் படிக்க முடியுமோ முடியாதோ அப்படியே உயிரைக்கொடுத்துப் படித்தாலும் அது எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதைப் பற்றி எனக்குத் தெரிந்த மாதிரி எழுத மீதி ஆயுள் இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒன்று நிச்சயம் ஜெயமோகனின் காவல்கோட்டமும் தோழர்களும் என்கிற இந்த சுளுக்கெடுப்பு கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இந்த ஒரே காரணத்திற்காகவே காவல் கோட்டம் எழுதிய சு.வெங்கடேசனுக்கு பரிசளித்த சாகித்திய அகாதெமிக்கும் இரண்டுவருடம் கழித்து திடீரென முழித்துக்கொண்டு நேற்றுதான் அனைத்தும் கவனத்துக்கு வந்ததான பாவனையில் சுறுசுறுப்பாய் சாடிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தோழரே
நீங்கள் எங்கே வாழ்கிறீர்
நாங்களெல்லாம் குழியிலே
அந்தக் குழியும் தோழரே
மாற்றான் தோளுக்கடியிலே
- ஞானக்கூத்தன் (நினைவிலிருந்து எழுதியது. தவறிருப்பின் திருத்தவும்)