07 March 2012

பின் நவீனத்துவ நந்தனார்

சிதம்பரம் போகாமல்...

இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி

பல்லவி

சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்

சரணம்

பக்தியும் மனமும் பொருந்தின தங்கே
சத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே
ஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே
பேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே.

கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றியது நந்தனார் சரித்திரம். 
நந்தனார் கதையை நவீன காலத்தில் மீள் உருவாக்கம் செய்து இந்திரா பார்த்தசாரதி எழுதியது நந்தன் கதை என்கிற நாடகம்.
இதன் பின் நவீனத்துவ மறு உருவாக்கம்?

’சிதம்பரம்’ என்கிற சொல்லை, மெட்டு இடிக்காதவண்ணம், பிரான்ஸ் ஃப்ரான்ஸுக்கு, என மாற்றி, விமான டிக்கெட் புக்பண்ணிக் கொடுக்கும்வரை, அலயன்ஸ் ஃப்ரான்ஸேஸ், சென்னை பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்சுதுறை, ஏசியன் ஏஜ் (லண்டன் எடிஷன் ஒன்லி) போன்றவற்றின் முன்பாக, தொடர் கச்சேரிகள் செய்வதென முடிவெடுத்திருக்கிறாராம், எம்.கே.டி (அந்தமான்) புகழ் சாரு பாகவதர்.