<Only three out of the 38 persons killed in the blast at the fireworks unit near Sivakasi were identified as employees of the unit. All the remaining deceased are said to be people from neighbouring areas who rushed to the spot as soon as they heard an initial explosion>
இன்றைய நாளிதழில் இந்த செய்தியைப் படித்தபோது, பள்ளிப்பருவ நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது.
அமெரிக்கா தனது 200ஆம் சுதந்திர தினத்தைக் கொண்டாட 1976ல் சிவகாசியிலிருந்து பட்டாசு வாங்கப்போகிறது என்கிற செய்தி பத்திரிகைகளில் பரவசத்துடன் வெளியாகி இருந்தது.
அன்று எங்கள் ஆசிரியர் அடித்த கமெண்ட் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது
”வெள்ளைக்காரன் எவ்ளோ உசார் பாத்தியா? அடுத்தவனைக் கொல்ற அணுகுண்டை தானே செஞ்சிக்குவான். மத்தவனை செய்யவும் விடமாட்டான். ஆனா பட்டாசை தான் செய்ய மாட்டான். செய்யும்போதே எங்க வெடிச்சிருமோன்னு பயம். நம்பள மாதிரி மனுச உசுருக்கு மதிப்பே இல்லாத பஞ்சப் பரதேசிங்ககிட்ட ஆர்டர் குடுப்பான். பட்டாசு வெடிக்ககூட விசா குடுத்து அமெரிக்காக்காரன் இங்கேந்து ஆளுங்களைக் கூப்புட்டாலும் ஆச்சரியமில்லை”.
இப்போதிருக்கும் ஆசிரியர்களிடம் மாணவர்களுடன் இப்படியெல்லாம் விவாதிக்கிறீர்களா என்று கேட்டால், இது பாடத்திட்டத்தில் இருக்கிறதா என்று பதில்கேள்வி வருமோவென பயமாக இருக்கிறது.
சென்ற தலைமுறையின் பெரும்பாண்மை பெயிலாகி பாசானதற்கும் இந்த தலைமுறை பாசாகி பெயிலாவதற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்னவோ!
சென்ற தலைமுறையின் பெரும்பாண்மை பெயிலாகி பாசானதற்கும் இந்த தலைமுறை பாசாகி பெயிலாவதற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்னவோ!
நாம் சொல்ல நினைப்பவற்றையெல்லாம் அடிபடாமல் சொல்ல நம் பள்ளிக்கூட வாத்திமார்தான் எவ்வளவு உதவியாக இருக்கிறார்கள்.