29 November 2012

இந்தப் பிரபலங்க பண்ற லொள்ளு தாங்கலப்பா

மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த’ சின்மயி ஸ்ரீபாதா அவர்களின் தமிழர் நலன் தமிழ்ச்சமூகம் பற்றிய அறிவார்ந்த புரிதல் தமிழாபிமானம் சாதிபேதம் பாராட்டா நல்லியல்பு ஆகிய உயர்குடி குணநலன்கள் பற்றி, பிஎச்டி ஆராய்ச்சி செய்யும் மாணவனின் தீவிரத்தோடு இணையத்தை அலசிக்கொண்டிருக்கையில் வீடியோ சுட்டியைக் கொடுத்திருந்த  ட்விடொன்று காணக் கிடைத்தது. சின்ன நடிகர்தானே என்று நினைத்தார் போலும் யாருடைய வீடியோ என்கிற விபரம்கூட கொடுக்கவில்லை.
சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்டான சின்மயி ஸ்ரீபாதா அவர்களைப்போல்  வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் கொள்ளுப்பேரனாக, பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வராமல், ஊர்பேர் தெரியாத கடப்பா கிருஷ்ணாராவ் அவர்களின் பேரனாகப் பிறந்து சி.கே.சக்ரபாணி ராவ் அவர்களின் மகனாக திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பித்திரியில்  குழந்தை மாறிப்போயிருக்கலாம் என்கிற ஹேஷ்யத்தின் காரணமாகவோ என்னவோ எனக்கு தில்லக்கேணி மூத்திர சந்து மராட்டி மட்டுமே தெரியும். சின்மயி போலவே எனக்கும் என் அப்பாவைத் துப்புரவாகப் பிடிக்காது என்பதால், எல்லா பிராமணர்களையும் போல அவருக்குப் பிடித்த ஆங்கிலமும் எனக்கு எட்டிக்காய். போதாக்குறைக்கு தமிழ்ப் பள்ளியில் படித்ததோடு கல்லூரியிலும் தமிழைப் படித்துத் தொலைத்து பெயிலும் ஆன பேரறிவாளன் ஆதலால் தரித்திரத்தனமாய் தமிழ் எழுத்தாளன் ஆனவன். ஆகவே சின்மயி குறிப்பிட்ட pertinent என்கிற பெரிய வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் போயிற்று. கூகுளாண்டவரை கும்பிட்டுக் கேட்டதற்கு Having logical precise relevance to the matter at hand என்று பதிலளித்தார். கையில் இருக்கும் சாமானுக்கு தர்க்கரீதியிலான தொடர்புடைமை என்று மொழிபெயர்த்துப் புரிந்துகொண்டேன், தவறு எனில் ஜா. ஜம்புலிங்கேஸ்வர ஐயரின்  மற்றும் ரீயன்னா ரிச்சர்ட் புனுவலின் பேத்தியோ பேரனோ திருத்தவும்.

அடடே லாஜிக் த்ர்க்கம் என்றதும் துள்ளிக் குதித்தேன். ஆக என் போன்ற படிப்பறிவற்ற பொது புத்திக்காரனுக்கும் புரியும்படியாக அப்படி என்ன இருக்கிறது என்று வீடியோவைப் பார்க்கத் தலைப்பட்டேன்.
அடடே நம்ப நாசர். The Stepfather (1987) படத்தைப் பார்த்துவிட்டு, நண்பனான கேமராமேன் ஸ்ரீதரனிடம் படம் பற்றிக்கூறப்போய், அதை அப்படியே தமிழ் பேசும் ஆங்கிலப்படமாகக் கிண்டிய உப்புமாவின் ஏண்ட்டி ஹீரோவாய் நடித்தவராயிற்றே, நாம் இலக்கியத்திலிருந்து லீவில் இருந்த காலங்களில்  அவர் பாவம் அறிவுஜீவி ஆகிவிட்டதாகக் கேள்விப்பட்டோமே. அந்த நாசர் என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று உற்சாகம் பொங்க பார்க்க உட்கார்ந்தேன்.

நவரசங்கள் மட்டுமின்றி  பத்தாவதாக அறிவு ரசம் கொப்புளிக்க கொப்பளிக்க 13.38 நிமிடங்களில் இதுவரை சின்மயி போன்ற 1,80,101 அறிவாளிகள் கண்டிருக்கும் மாபெரும் ஹிட்டு படமான இதன் முதற் பகுதியில்  அறிவுஜீவி பாத்திரமேற்று நடிக்கும் நாசர் கேட்கும் கேள்வி,

<பண்டிகைகளுக்குள் என்ன வேறுபாடு ஏன் வாழ்த்தணும்? பொங்கல் தமிழருக்கானது மட்டுமில்லை, ஆந்திரா கர்நாடகாவிலும் இது ஷங்கராந்தி என்று கொண்டாடப் படுகிறது, >

அப்ப மகாராஷ்ட்டிராவில் என்ன மங்கராந்தி பெங்காலில் பெங்கராந்தி அஸ்ஸாம்ல அங்கராந்தியா? ஓ நீங்க நடிச்சது தமிழ விட்டா தெலுங்கு கன்னடம்  ஆகவே சிறந்த இலக்கிய இண்டலெக்ச்சுவலாக அனுபவ எல்லையைத் தாண்டமல் அறிவை சுவாசிக்கிறீர்கள்.

தேசிய ஒற்றுமையைக் குலைத்தவர் பால் டாக்கரே அதனால நான் அஞ்சலி செலுத்தமுடியாது என்று தொடங்குகிற கட்டுரையை முப்பது கோடி முகமுடையாள் என்று பாரதி மேற்கோளுடன் தொடங்கிகிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு அவர்கள். பொங்கலு வாழ்த்து சொல்லமாட்டேன் என்று அலட்டிக்கொள்ளும் நாசருக்கு,‘செப்புமொழி பதினெட்டுடையாளான’ இந்தியா முழுமைக்குமானது பொங்கல் என்பது தெரியாதாமோ.




இப்படியே ஏன் வாழ்த்தணும் ஏன் வாழ்த்து சொல்லணும் அங்க என்ன இங்க என்ன என்று என்று மூன்றரை நிமிடங்களுக்கு இழுத்திழுத்து இந்துஸ்தானி ஆலாபணை.

அப்புறமாக ஒரு அறிய முத்துச் சிதறல்.

<எல்லாத்துக்கும் நடிகன்தானா? இது உழவன் சம்பந்தப்பட்டது என்பதனால ஏன் நீங்க எம்.எஸ் சுவாமிநாதனையோ நம்மாழ்வாரையோ ஏன் நீங்க பேட்டி எடுக்க முற்படலை?>

இந்தக் கேடுகெட்ட தமிழ் சினிமாவிலும் இப்படி ஒரு தியாக துருவமா என்று சிலிர்த்து சின்மயி இதற்கு சுட்டி கொடுத்ததில் ஆச்சரியமே இல்லை. பின்பக்க மூளை மட்டுமே வேலை செய்பவனுக்குக்கூட எம்.எஸ்.சுவாமினாதனும் நம்மாழ்வாரும் நேரெதிர் துருவங்கள் என்று தெரிந்திருக்குமே. என்னைப்  போன்ற கூகுள் இமேஜஸில் மட்டுமே வயல் பார்த்த மெட்ராஸ் மடையர்களுக்கே முன்னவர் அமெரிக்க கம்பெனிகளின் உரத்தரகர் பின்னவர் இயற்கை விவசாய விஞானி என்று நன்றாகத்தெரியுமே.

ஐயங்கார் இல்லை என்பதால் சின்மயிக்கு நம்மாழ்வார் தெரியாமற் போனதில் வியப்பில்லை.ஆனால் நாசர் போன்ற இண்டலெக்ச்சுவலுக்குக்கூட நம்மாழ்வாருக்கும் சுவாமிநாதனுக்கும் வித்தியாசம்  தெரியாமற் போனதுதான் வருத்தமாக உள்ளது. Nammazhvar 'converts' farmers to 'poison-free' ways of raising crop 

இந்தியாவை இணைத்துக்கட்டு தேசிய ஒருமைப்பாட்டு பிரச்சார இயக்கத்துக்காக கன்யாகுமரியிலிருந்து கஷ்மீருக்குச் சென்ற சைக்கிள் பயணத்தில் என்னுடன் பயணித்த இயற்கை விவசாய ஆராய்ச்சியாளனான் என் நண்பன் ஜேக்கப் நல்லித்தானம் பற்றி எழுதிய வென்றவன் சொல்வதே வேதம் என்கிற கட்டுரையில் கிளாட் அல்வரிஸ் அவர்களின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்கிலியில் வெளியான கட்டுரைக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். அதைப் படித்தாலே எம்.எஸ்.சுவாமிநாதனின் நிஜமுக தரிசனம் கிட்டிவிடும்.

எதையுமே ஆழமாகவோ முழுமையாகவோ படிக்க முடியாத, ஆனால் சூரியனுக்குக் கீழ் அனைத்தைப் பற்றியும் கருத்து வைத்திருக்கும் இணைய மொக்கைகளின் உதவிக்காக கிளாட் அல்வரிஸின் கட்டுரையின் தொடக்கத்தை இங்கே தருகிறேன். ஹிட்ச்காக் படத்தின் முதல் சில ஷாட்களிலேயே கொலை நிகழ்ந்து ஓப்பன் சீக்கிரெட்டாகப் படம் ஓட்டும் பாணியில் தலைப்பிலேயே சுவாமினாதனுக்கு மண்டகப்படி ஆரம்பம்.


The Great Gene Robbery
(First published by the Illustrated Weekly of India in its issue dated March 23, 1986

In 1982, Dr M S Swaminathan withdrew from his position as Chairman of the Scientific Advisory Committee to the Cabinet (SACC) and deputy chairman of the Planning Commission – he was also earlier secretary to the Ministry of Agriculture – and defected to join the International Rice Research Institute (IRRI) based at Los Banos in the Philippines as Director-General. The word ‘defected’ is used here on purpose: in no other country of the world, would a scientist in such a strategically important position, privy to all the country’s scientific secrets particularly of those related to food, be permitted to leave and overnight become the employee of an institution controlled by two private foundations so closely allied to American capitalism and US foreign policy interests.

சுவாமியாழ்வார் நம்மநாதன் என்பதுபோல இருவரையும் குழப்பிக்கொண்டு தெரியாமல் உளறிவிட்டார். இங்கிலீசு மீடியத்தில் படித்த சின்மயிக்கு இண்டலெக்சுவல் என்றால் யார் என்று தெரியாமலா சுட்டி கொடுத்திருப்பார்?அட்லீஸ்ட் அடுத்து வருவதிலாவது நல்லகருத்து சொல்கிறாரா நாசர் என்று பார்ப்போம் என்று பார்த்தால்,

<உழவர்கள் கிட்ட உழவாட்றதோ> 

என்கிறார் நாசர். இது காமெடியா இல்லை ஜெயமோகன் போல கலைச்சொல்லைத் தமிழுக்குக் கொடையளித்திருக்கிறாரா இல்லை பொதுவாக நாசருக்கு உரித்தான ’நாக்குல தர்ப்பை’ பிரச்சனையா என்று பிடிபடவில்லை.

அடுத்துத்தொடங்கிறார் தமது வீடியோ கேம்ஸின் சரமாரித் தாக்குதலை. 

<நுங்கம் பாக்கத்துல லேக் ஏரியான்னு ஒன்னு இருக்கு கோடம்பாக்கத்துல லேக் ஏரியானு ஒன்னு இருக்கு லேக்  எங்க இருக்கு?>

கோடம்பாக்கத்தில் ஏதடா லேக் ஏரியா? மாம்பலத்தைத்தான் கோடம்பாக்கம் என்கிறாரோ என்று மண்டை காயத்தொடங்கிற்று.

<பாரம்பரிய விவசாயத்தையே நாம்ப வந்து கொழப்பிவுட்டோம்>

ஐயா அறச்சீற்ற ஐயாசாமி அவர்களே! பாரம்பரிய விவசாயத்தைக் கொழப்பி விட்டது மொதல்ல பொங்கல் வாழ்த்து சொல்லச்சொல்லி டிவிக்காரரோட மல்லுக்கட்டினீங்களே  சாட்சாத் அந்த எம்.எஸ்.சுவாமிநாதனேதான். இப்புடி சேம் சைட் கோல் அடிக்கிற மேட்ச்சைப் பாத்துதான் சின்மயி சிலிர்த்து பெர்டினெட் கொய்ஸ்ட்சின்ஸ் பாருன்னாய்ங்களா? அடக் காமெடிப் பீசுங்களா?

கலையழகோட லாரையுதிர்ந்து செங்கல் தெரியும் பாழடைந்த பில்டிங்கா தேடிப்புடிச்சி குந்திகினு இருக்கற நாசருக்கு பொங்கல் கவியரங்கத்துல கவிதை படிக்கிறாப்புல நெனப்போ. எல்லாத்தையும் ரெண்ட்ரெண்ட் தடவை ரிபீட்டடிக்கிறாரு!

<அரசாங்கம் என்ன சொல்லுது? ஐஆர்8 போடு நீ வந்து யூரியா போடு நீ வந்து  பாஸ்பரஸ் போடுன்னு சொல்லுது.>

இதுல்லாம் என்னங்கையா? புதுசா கோலிவுட்டுக்கு வந்துருக்கற ஹாகிவுட்  நடிகைங்களா? ஐஆர்8ங்கறது நெல்லு வெரைட்டி. யூரியா பாஸ்பரஸ்லாம் உரங்கள்ளோட தொடர்புடையவை. ஏதோ தெரிஞ்ச வார்த்தையெல்லாம் ஏழாங்கிளாஸ் பையனாட்டம் சொல்லீட்டீங்க. சமீபத்துல எதுனா உர விளம்பரத்துல நடிச்ச வசனத்தை மாட்னாண்டா மைக்கோட கேமராவோடனு இப்புடி உட்டு சாத்தறீங்க.

<அதே அரசு வந்து இந்த கட்சி அந்த கட்சி எல்லாம் வேணாம். அரசு வந்து ஒரு இருவது வருஷம் இருவத்தஞ்சி வருஷம் கழிச்சி, அவன் சொல்றான், மண்ணு வந்து மலட்டுத்ததன்மை அடைஞ்ச பெறகு இந்தப் பாஸ்பரசு யூரியாவெல்லாம் போடாதீங்க. நீங்க வந்து திரும்பியும் வந்து தழைச்சத்து பாரம்பரிய வழிமுறைக்கு போடான்றாங்க.>

எம்.எஸ்.சுவாமினாதனும் அரசாங்கமும் ஒருநாளும் கெமிக்கல் உரங்களைப்போடாதேன்னு சொல்லலே. இருக்கற கம்பெனியெல்லாம் அப்பறம் என்னா ஆவரது? 

இதையெல்லாம் சொல்றவரு பாரம்பரிய விவசாயத்துக்குப்போங்கன்னு சொல்ற நம்மாழ்வார் <He is available to any farmer 'big or small' urban or rural 'who wants to move away from fertiliser- and chemicals-driven agriculture.He is available to any farmer'big or small' urban or rural'who wants to move away from fertiliser- and chemicals-driven agriculture.>

ஒரே நேரத்துல ஃப்ரெஞ்சு இட்டலி ஸ்பானிஷ்னு கலந்து துப்புறீங்களே சார். அதான் சின்மயி போன்ற சினிமாக்காரங்களுக்கு எவ்ளோ அரிய கருத்து சொல்றார்னு அட்ராக்ட் பண்ணுது போல.

<இந்த சூழ்நிலையில் நான் உழவர்களுக்கு என்ன பொங்கல் வாழ்த்து சொல்லுவது?>

இதுவே கவுண்டமணியாய் இருந்தால் சக்கரபொங்க வாழ்த்து சொல்லு விவசாயி சுகர் பேசண்டுகாரன்னா வெண்பொங்க வாழ்த்து சொல்லு. வாழ்த்து சொல்ல வாய் போதாதாக்கு. அட பல்லு வலின்னா கையத்தூக்கி வளமுடன் வாழ்கங்கறா மாதிரி காட்டு. என்னையவுட கொஞ்சம் நல்லா நடிக்கத் தெரிஞ்டிருக்கு தோலு கொஞ்சம் படிகாரத்துல தேச்சா மாதிரி கொஞ்சம் வெள்ளையா இருக்கு. நல்லா படிச்சுத் தெளிஞ்சா மாதிரி நடிக்கணுமாடா நீங்கள்ளாம் என்று கேட்டுவிட மாட்டாரா?

<எனக்கு செங்கல்பட்டுல வந்து ரெண்டு ஏக்கர் நெலம் இருக்கு. அங்கக் கிணற்றுச் சுவர் இருக்கு அந்த கிணற்றுச் சுவர்ல வந்து அரசமரம் இருக்கு அந்த சுவர்ல வந்து அப்பிடியே லேசா விரிசல் உடுது. அதனுடைய கேடேக்கர் முருகேசன். அவுருக்கு எப்பிடியும் வந்து 70 வயிசு இருக்கும். இத என்ன பண்றது முருகேசன் இது உடையுமே விழுந்துச்சினா ப்ராப்ளமாகுமே சரியுமேன்னு சொன்னா அவுரு சொல்றாரு.

அது ஒண்ணுமில்லே ரெண்டு பாட்டில் ஆசிட் வாங்கி ஊத்தினா செத்துருங்கறாரு.>

என்னா மெலோட்ராமா நாசர். முருகேசன் குரலில் நடித்துக்காட்டி ஜெயமோகனுக்கே சவால் விட்டு மிரட்டுகிறீர்களே. அடுத்து அறச்சீற்றப் பொங்கலைப் பொங்கோ பொங்கு என்று விவசாயி வாயில் ஆசிட் என்று வருவதா என்று போங்காகப் பொங்குவதற்காகத்தானே இவ்வளவு டிராமாவும்? 

நீங்கள் முருகேசனிடம் கவலைப்பட்டு என்ன செய்வதென்று கைபிசைந்தபடி கேட்டது அரச மரத்தைக் காப்பாற்றவா அல்லது கிணற்றுச் சுவரைக் கப்பற்றவா? கிணற்றருகில் நின்றது 
முதலாளி நாசர், கேமரா எதிரில் நிற்கிற நாசர் சமூக சாக்ரட்டீஸா?. 

எத்துனை முல்லைக்கல் மாதவன் நாயர்களை ஐயா இந்த உலகம் தாங்கும். அதனால்தான் ஜேஜே அற்பாயுளில் செத்துப்போனான். 

எப்படியும் மாமல்லன் உன்னை படாதபாடு படுத்தி இருக்கிறான் என்கிற செய்தி உங்கள் காதுகளை வந்தடையும். ஜேஜே சில குறிப்புகள் படித்தவர்தானே நீங்கள் எதற்கும் விவகாரங்களும் விகாரங்களும் தொடக்க இறுதிப் பத்திகளை மட்டுமாவது படித்துவிட்டு சுய விசாரணை செய்தபின் சின்மயி அவர்களைத் திட்டத்தொடங்குகள். சின்மயி மட்டும் இதை ரெக்கமண்டு பண்ணாவிட்டால் நான் ஏன் இதை சீந்தியிருக்கப்போகிறேன்.

இணையமே கண்டு நடுங்கம் சின்மயி என்பவர் உண்மையில் யார் அவர் என்னவிதமான ஆளுமை என்பதைப் பற்றிய ஆய்வில் இருப்பவனிடம் வந்து சேர்ந்தது உங்கள் விதி நான் என்ன செய்ய?

<மரத்தை தெய்வமாக வணங்குகின்ற உழவன்> 

ஓ வயக்காட்டுலதான் உழவன் மரத்தை வளர்த்து சாகுபடி செய்கிறானா இந்தப் பேருண்மை எனக்கு இப்போதுதான் பிடிபடுகிறது பாருங்களேன்.

<உழவனுக்கு எப்படி இந்த ஒரு மரத்தை ஆசிட் வைத்துக் கொல்லணுங்கர ஒரு எண்ணம் வந்துச்ச்சி>

சூப்பரா ஒக்காந்த எடத்துலையே நல்லா ஏத்த எறக்கத்தோட சின் முத்திரை எல்லாம் காட்டி மீசை மழித்த வைகோ மாதிரி பொளந்துட்டீங்க போங்க.

<அவன் விவசாயி. ஒரு செடிய வேரோட புடுங்க மாட்டான். ஒரு மரத்தை வேரோட புடுங்க மாட்டான். வெட்டிவெட்டிவெட்டி உடுவான். செடிங்களை புடுங்கிப் போடுவான் களைங்களைப் புடுங்கிப்போடுவான். ஆனால் ஒரு மரத்தைக்கூட வெட்டமாட்டான்>

நாசர் சார் இந்த அறுவடைனு அறுவடை ஒண்ணு சொல்லுவாய்ங்களே அது எப்புடி  பண்றான் சார் உழவன்? நாங்க உயிர்களைத் துன்புறுத்தறவங்க இல்லை வெட்டி சாப்புடறவங்களும் இல்லை சப்போர்ட்டர்ஸ் ஆஃப் பெட்டானு சின்மயி சொன்னாங்களே அது மாதிரி அகிம்சையோட ஒவ்வொரு நெல்லா செர்ரிப் பழம் பறிக்கிறாப்புல வலிக்காம கொள்ளாம கொய்து எடுப்பானோ உழவன்? அப்பறம் எதுக்குங்க கதிர் அரிவாள் வளைஞ்சு இருக்கு? 

ஒரு நூற்றெட்டு 
அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல்வெளியில்

இது என்னங்க கன்னி கவிதைல பிரமிள் சொல்லி இருக்கறதைப் பாத்தா வயக்காட்ல ஏதோ பெரிய போர் நடக்கறா மாதிரியில்ல இருக்குது. ஓ நீங்க முண்டாசு கட்டினதோட சரி இன்னும் விவசாயி ரோல் பண்ணினதில்லையோ? பரவல்ல அப்ப பாத்துக்கலாம். சினி கேமரா முன்னால மெத்த்ட் ஆக்டிங். வீடியோ கேமரா முன்னால ஒரு மெத்தேடோட ஆக்ட்டிங் குடுக்கறீங்களோ?

<ஒரு வயது முதிர்ந்த உழவன் ஆசிட் ஊத்தி கொல்லலாம்னு சொல்றான்னா அவனுடைய மனநிலையை மாற்றியது யார்?>

எக்கோ எஃபெக்ட்டு குடுத்துருந்தா இன்னும் எடுப்பா இருந்துருக்கும் இந்த எடம். அப்பிடியே ஒவ்வொரு எக்கோவுக்கும் மூஞ்சை 45 டிகிரி தூக்கி அக்கம் பக்கத்துல பாத்துருந்தா சூப்பரா ஒர்க்கவுட் ஆகியிருக்கும்.

<அவ்வளவு ஏன் பொங்கலை இன்னும் மண்பானைலதான் பொங்கறோம். மைரோவேவ் வந்துட்சி கேஸ் வந்துட்சி இண்டக்‌ஷன் ஸ்டவ் வந்துட்சி எவர்சில்வர் வந்துட்சி நான்ஸ்டிக்வேர் வந்துட்சி இன்னும் ஒரு பொங்கலை வாங்கினு வந்து நட்ட நடுவுல வெச்சி கும்ம்புடுன்னு சொன்னா விவசாயி சந்தோஷமாயிடுவானா...>

என்னாது பொங்கல வாங்கினு வந்தா? எங்க சரவணா பவன்லேந்து கேரியர்ல வாங்கினு வந்தா? நீங்க கிரேட்டு சார் அடுப்பு பானை அரிசி எதுவுமே இல்லாம இந்த பொங்கு பொங்கறீங்க?

<எத்தனை விளைநிலங்கள் இன்னிக்கிக் காணாமப் போய்க்கிட்டுருக்கு? நான் இவ்ளோ பேசறேனே வளசரவாக்கத்துல இருக்கற நான் வந்து வீடுகட்டும்போது சுத்தி வயல் வரப்புதான் இருந்துச்சி. இன்னிக்கிக் காணாமப் போயிடுச்சி. வளசரவாக்கத்துல ஒரு ஒரு ஒரு நூறு ஏக்கர் விவசாய நெலத்தை  அழிச்சி வீடு கட்டிட்டோம் அதுக்கு மாற்றா எங்கனா ஒரு நூறு ஏக்கர் காடழிச்சி விவசாய நெலம் உருவாக்கணும்னு சென்ஸ் இருக்கா நமக்கு?>

இப்ப பேசிகிட்டு இருக்கீங்களே இந்த செங்கல் பட்டு நெலம் நீங்க வாங்கறத்துக்கு முன்னாடி காடாதான் இருந்துதா சார். அந்தக் காட்ட அழிச்சிதான் இப்ப இருக்கற விவசாய நிலமா பண்ணிதான் கெணத்து செவுரு விரிசல் உட்டுருச்சேன்னு கலங்கிகிட்டு இருந்தீங்களா? பாத்து சார் இவ்ளோ ஓவரா பொங்கினீங்கனா ரெண்டு பாட்டில் ஆசிட் வாங்கி அரசமரத்துக்கு ஊத்தறத்துக்கு பதிலா உங்கொடைச்சல் தாங்கமுடியலைனு உம்மேல ஊத்திரப்போறான். நீ அவுனுக்கு பொங்க வாழ்த்தே சொல்ல மாட்டேன்னு இம்மா நேரமா அடம் புடிக்கிறே. பொங்க காசு எங்க குடுக்கப்போறே. அவன் காண்டாயிடாமப் பாத்துக்க.

<நான் கேக்கறேன் சார் ஒரு மனிதனுக்கு உணவை விட வீட்டைவிட உடையை விட முக்கியமானது சுதந்திர உரிமை. என்னிக்காவது ஒரு இண்டிபெண்டன்ஸ் டேவுக்கு யாராவது ஒரு ஒரு நடிகனுக்கு ரிலீசாகற படத்துக்கு இருக்கற மூடுகூட இண்டிபெண்டன்ஸ் டேவுக்கு இருக்குதா?>

சுதந்திரம் பத்தி மட்டுமில்லே கருத்து சுதந்திரம் பத்தியும் நல்லா எடுத்து சொல்லு இந்த சின்மயிக்கும் அவங்க அம்மாவுக்கும். அவங்க மாத்திரம் அவங்களை வாழவெக்கிற தமிழகத்து சேரிக்காரன்லேந்து மீனவன்லேந்து தலித்துலேந்து அல்லாத்துமேலையும் சுதந்திரமா வாந்தியெடுக்கலாமாம். அதைப் பாத்து காண்டாயி மத்தவனுங்க அவங்க மேல வாந்தியெடுக்க சுதந்திரம் இல்லியாமா. எவனெவனோ  பண்ணினதுக்கு குறிவெச்சி பொறிவெச்சி புடிச்சி எல்லார் தப்பையும் அவன்மேல சுதந்திரமா போட்டு உள்ள தள்ளிருவாய்ங்களாம். இந்த சொதந்தரம் பத்தி ட்விட்டர் பக்கம் அண்டவிடாம இதேமேரி இவுங்குளுக்கு டக்கரா டெய்லி ஒன்னவர்  கிளாஸ் எடு சார். எங்குளுக்குக் குடுத்த இந்தப் பதிமூனு நிமிச டார்ச்சருக்கு அதுதான் உனக்கு பனிஸ்மெண்ட்டு.

<சமீபத்துல நடந்த மழையினால கடலூர் பாண்டிச்சேரி விவசாயிகள் ரொம்ப துக்கத்துல இருக்காங்க. என்னுடைய பெரும் சமூகத்துல ஒரு பகுதி துக்கத்துல இருக்கும்போது நான் வாழ்த்து சொல்லிக்கொண்டால் எனக்கு சரியில்லை. அவர்கள் துக்கத்துல நான் பங்குகொள்கிறேன்.>

இது இன்னா நான்கூட மீனவனை ஆதரிச்சேன்னு காட்டிக்க சொம்மானாச்சுக்கும் நாலு ட்விட்டு போட்டு சின்மயி ஒப்பேத்தினாப்புல ஒரு எபிசோட் அளவுக்கு செம டான்ஸ் ஆடிட்டு எண்டுல நான் சோகத்துல இருக்கேன்னு டைட்டில் கார்டு போடறே.

உங்களது சோகம் அரிதாரப் பூச்சற்றது என்றால் கேமரா முன்னால் வராமலே அல்லவா மறுத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கடைசியில் கமல் போல் மென்று முழுங்கி யாருக்கும் கேட்காமல் முணுமுணுக்கும் இரண்டு வரிகளை மட்டுமே சொல்லிவிட்டுப் போயிருந்தால்தானே உங்கள் சோகம் உண்மையானது. ஜெயமோகன் போல வளவளா கொளகொளாவென்று எல்லா ராமாயணமும் பேசி நானும் ரவுடிதான் என்று இண்டலெக்ச்சுவல் அவதாரம் எடுத்து மூஞ்சை சீரியசாக வைத்துக்கொண்டு சமூகத்தின் ஒரு பகுதி ’நடந்த மழை நின்ன மழை ஓடிய மழை இவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கையில் வாழ்த்தா என்றால் அசின் நடித்த ’காஸ்ஸா’ என்கிற மிராண்டா விளம்பரம் போலல்லவா இருக்கிறது. இந்தப் பொங்கல் விளம்பரம் உழவனுக்கா உங்களுக்கா நாசர். 

எல்லா பண்டிகைகளிலும் வாழ்த்தென்பது ஒருவருக்குச் சொல்வதில்லை. ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வது. 

பொங்கலுக்கு என்றால் உழவனுக்கு வாழ்த்து, தீபாவளி என்றால் கிருஷ்ணருக்கு வாழ்த்து என்றா சொல்லிக்கொள்கிறோம். 

குரங்குக் குல்லா போட்ட இந்த குட்டிக் கமல் வேஷம் தேவையா? 

நீங்கள் உங்கள் அளவிலேயே சிறந்த நடிகர். நடிகன் நடிகனாக இருந்துவிட்டுப்போனால் என்ன குறைந்துவிடப்போகிறது?பாடகி பாடகியாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் ட்ரான்ஸ்லேட்டர் ட்ரான்ஸ்லேட்டராகவும் இருந்துவிட்டுப்போனால் என்ன குறைந்துவிடப்போகிறது?அதுவும் தலித் மட்டும் தலித்தாகவே இருக்கவேண்டும் என்று ட்விட்டு ரீட்விட்டு எல்லாம் செய்கிறவர்கள் தாம் மட்டும் எல்லாமாகவும் இருக்க வேண்டும் என்று எவருக்கும் எந்த இடத்தையும் கொஞ்சம்கூட ஒதுக்கிக்கொடுக்கவே மாட்டேன் என்று ஆக்கிரமிப்பது நியாயமா?

படுத்துவது என்றால் கூட ரஜினி விஜய் போன்ற அரிதாரம் பூசுபவர்கள் இண்டலெக்ச்சுவல் அவதாரம் எடுத்து படுத்தாமல் மொக்கையாய்ப் எடுக்கும் படங்களில் மட்டுமே படுத்துகிறார்கள். மூளையைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு படம் பார்த்தபின் வீட்டுக்கு வந்து திரும்ப மாட்டிக்கொண்டால் போயிற்று. எந்ததொந்தரவும் இல்லை. 

இப்படி வீடுபுகுந்து என் வீட்டு டிவியில் வந்து என் மூளையைப் பிராண்டுவது எந்த விதத்தில் நியாயம்? சின்மயி தமது கருத்து ட்விட்டுகளால் தமிழகத்து இணையத்தையே கதிகலங்க அடிப்பதைப் போலல்லவா இருக்கிறது இது.