ஸ்ரீபாதா பிணாகபாணி என்னுடைய தாத்தாவாய் இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கிறது லலிதா ராமின் இந்த நேர்காணல்
சங்கீத டாக்டருடன் ஒரு நாள் – Interview – Part I திசெம்பர் 6, 2009
ஸ்ரீபாதா பிணாகபாணி - லலிதா ராம்
இந்த நேர்காணலில் தொடக்கத்திலேயே குருவைப்பற்றி வருகிறது. அதைப் பார்த்ததும் நண்பர் ஜெயமோகன்தான் நினைவுக்கு வந்தார். இலக்கிய உலகையே மடமாக மாற்றி, ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஜாதகத்தில் மட்டுமின்றி நிஜத்திலும் குரு இருக்க வேண்டும். அந்த குருவானவர் ஜாதகம் போலவே ஐந்தாம் பார்வையாகவோ அல்லது ஏழாம் பார்வையாகவோ பார்த்தால்தான் எழுத்து சித்திக்கும் படைப்பூக்கம் ஓங்கி நிற்கும் என்கிற லெவலில் அல்லவா எழுதிக்கொண்டு இருக்கிறார். எனவேதான் அவர் நினைவு வந்தது.
எழுத்தாளனுக்கு எழுத வரவேண்டுமென்றால் மண்டை சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தேவை. ஆனால் குருவை வைத்துக்கொண்டு சித்தர்களைப்போல குண்டலினி சித்தித்து நெற்றி நடுவுக்கு அதை ஏற்றி எழுத்தில் ஆன்மீக வாடை அடித்தால்தான் அது இலக்கியமாகும் என்கிற புதிய புருடாவை தமிழிலக்கியத்துக்கு அறிமுகப்படுத்திய மலையாள மாந்த்ரீகர் அல்லவா அவர். எனக்கெல்லாம் குரு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வேர்க்குரு அடுத்தது ஜெயமோகந்தான்.
இலக்கியம் மானசீகமாக நடக்கிற காரியம். முன்னோடிகளைப் படித்து மூழ்க மூழ்க நம்மைத் தன்னால் மேலேற்றக்கூடிய சமுத்திரம் அது.
சங்கீதம் பெரும்பாலும் இலக்கியம் போன்ற ஏகலைவ காரியமன்று. விதிவிலக்கான மேதைகள் சிலரை விலக்கிவிட்டுப் பார்த்தால் பெரும்பாலும் குரு சிஷ்ய பரம்பரை இல்லாமல் முறையாக ஒரு ஆசிரியரிடம் சொல்லிக்கொள்ளாமல் நீய முடியாத சாகரமே சாஸ்த்ரிய சங்கீதம்.
கர்நாடக சங்கீதம் பிராமணர்களுக்குள் நிகழும் குடும்ப நிகழ்ச்சி போலத்தான் இன்றும் இருக்கிறது. தமிழைசையே பாடப்பட்டாலும் அதைக் கேட்கவும் தமிழ் பிராமணர்கள்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.
குடும்பத்திற்குள் பெரியவர்கள் சொல் கேளாதவனாக யாருமே இருக்க முடியாது இல்லையா அது மட்டுமல்ல, வீட்டுப் பெரியவர்களின் நிறைகுறைகளை யாராவது விமர்சிக்க முடியுமா? பிராமணர்கள் என்றில்லை எந்த சாதியை எடுத்துக்கொண்டாலும் சரி. சரி தப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. பெரியவர்கள் என்றால் அவர்கள் சொன்னதுதான் சரி. அவர்களை விமர்சனம் செய்வது மனதிலும் எண்ணிப்பார்க்க முடியாத குற்றம். மஹா பாவம்.
குடும்பப்பெரியவர்களுக்கே இத்துனை கெடுபிடி என்றால், சங்கீதத்தில் குருவின் நிலை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. அதுவும் பொது வெளியில் , குரு என்றாலே தங்கள் பக்தியை, தாங்கள் பணிவானவர்கள் என்கிற பிம்பத்தை உலகின்முன் கட்டமைத்துக்கொள்ள, குருவை ஜாக்கி வைத்து உயர்த்தி கடவுளிடம் கொண்டுசேர்ப்பதே உலக இயல்பு.
குடும்பப்பெரியவர்களுக்கே இத்துனை கெடுபிடி என்றால், சங்கீதத்தில் குருவின் நிலை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. அதுவும் பொது வெளியில் , குரு என்றாலே தங்கள் பக்தியை, தாங்கள் பணிவானவர்கள் என்கிற பிம்பத்தை உலகின்முன் கட்டமைத்துக்கொள்ள, குருவை ஜாக்கி வைத்து உயர்த்தி கடவுளிடம் கொண்டுசேர்ப்பதே உலக இயல்பு.
போதாக்குறைக்கு அப்பாவோ அம்மாவோ தங்களுக்கு முதல் குருவாகவும் அமைந்த இசைக் கலைஞர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். பைசாசங்களால் சூழ்ந்த இந்த உலகத்தில் சகல உத்தம குண நலன்களின் ஒட்டுமொத்தமாக உருவெடுத்து உதித்த குத்துவிளக்கே என் அம்மாதான் என்று குழந்தைகள் கூவிக்கொண்டே கிடந்தாக வேண்டியது கட்டாயம். மறுபக்கம் என்னவென்று பார்வைக்கே தட்டுப்படாவண்ணம் அன்பு மதிலாயெழ சிறைபடுத்தப்பட்ட பாவங்கள்.
கடந்த ஏழு வருடங்களாய் படுத்த படுக்கையாய் இருக்கும் இவரை, புதல்வரான திரு. ஸ்ரீபாதா காமேஸ்வர ராவ் அவர்கள்தான் பக்தி சிரத்தையுடன் பார்த்துக்கொள்கிறார்.
கடந்த ஏழு வருடங்களாய் படுத்த படுக்கையாய் இருக்கும் இவரை, புதல்வரான திரு. ஸ்ரீபாதா காமேஸ்வர ராவ் அவர்கள்தான் பக்தி சிரத்தையுடன் பார்த்துக்கொள்கிறார்.
உங்கள் குருநாதரின் சிட்சை முறையைப் பற்றிக் கூறுங்களேன்.
எனது குரு மைசூரில் இசை பயின்றவர். அவர் ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம் போன்றவற்றில் சிறந்து விளங்கவில்லை என்ற போதும் நிறைய அரிய கிருதிகளை நன்கறிந்திருந்தார். எது நல்ல இசை, எது நல்ல இசை அல்ல என்று தீர்மாணிப்பதில் அவர் சிறந்து விளங்கினார்.
சம்பிரதாயமான பூசிமொழுகலே இல்லை. இதுதான் இந்த நேர்காணலையே என்னைத் தொடர்ந்து படிக்க வைத்தது. லலிதா ராமின் ராஜம் ஆவணப்படத்தை சில நாட்கள் முன்பாகத்தான் பார்த்தேன். அந்தத் தாத்தாவும் இப்படியேதான். யார் என்ன நினைப்பார்கள் என்கிற எந்தவித ‘ஜாக்கிரதை’ உணர்வும் இல்லாத தாத்தாக்களை அடைய பூர்வ ஜென்மத்தில் தவமிருந்திருக்க வேண்டும் இவர்களின் பேரன் பேத்திகள்.
காக்கிநாடாவில் சரஸ்வதி கான சபை அன்றே வெகு பிரபலமாய் விளங்கியதே.
......ஆந்திர வித்வான்களில் கச்சேரிகளை விட தமிழ்நாட்டு வித்வான்களின் கச்சேரிகள், கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆந்திர வித்வான்கள் பாடும் போது சுமாராக வந்த கூட்டம், தமிழ்நாட்டு வித்வான்கள் பாடும் போது அரங்கை நிறைத்தது. இதனால், இள வயதிலேயே எனக்கு தஞ்சாவூர் பாணி என்றழைக்கப்படும் தென்னாட்டு இசை முறையே என்னை வெகுவாகக் கவர்ந்தது.....