10 December 2012

சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் கேள்வியும் பதிலும்

Tn Elango
10:22 AM (10 hours ago)
to me
அன்புள்ள விமலாதித்த மாமல்லன்,

சின்மயி புகார், அது தொடர்ந்த கைதுகள் குறித்த தங்கள் அனைத்து blogகளையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.

இது குறித்து சின்மயி தரப்பிலிருந்து இத்வரை எந்த விளக்கமோ/மறுப்போ வெளி வராதது ஆச்சரியமாக இல்லை, ஏனெனில் அப்படி விளக்கமளிக்க அவர்களுக்கு எந்தவொரு வாதத்திற்கான வாய்ப்பையும் தாங்கள் விட்டு வைக்கவில்லை.

ஆனால் நான் ஆச்சரியப் படும் ஒரு விஷயம், மீடியாக்களின் பங்களிப்பு பற்றி. இந்தக் கைதுகளின் போதும், அதற்குப் பின்னரும் இதில் நடந்துள்ள அநியாயம் பற்றி எந்தவொரு பத்திரிகையோ/(தமிழ்/ஆங்கிலம்) தொலைக்காட்சி சேனலோ பகிரங்கமாக கவலையோ அதிர்ச்சியோ தெரிவிக்கவில்லை.

ட்விட்டரில் வெளிவரும் ட்விட்களை இரண்டு பக்கங்கள் நிறைத்து வியாபாரம் செய்யும் பத்திரிகைகள் கூட மேலோட்டமாக செய்தி வெளியிட்டனவே தவிர, தாங்கள் வெளிப்படுத்திய அளவு, நடந்த சதியின் நோக்கத்தை வெளியிடவோ, கண்டிக்கவோ செய்யவில்லை.

எங்கு இப்படி நடந்தாலும் அது கண்டிக்கப்படவேண்டும் என்பது உண்மையாக இருப்பினும், மும்பை நிகழ்வின்போது மீடியாக்கள் காட்டிய ஈடுபாட்டை ஒப்புமைப் படுத்திப் பார்த்தால், ராஜன்-சரவணகுமார் கைதில் மீடியாக்களின் மௌனம் ஆச்சரியாமாக இருக்கிறது. 

மும்பை நிகழ்வையும், ராஜன் நிகழ்வையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது என்றாலும், திட்டமிட்ட சதி என்ற ஒரு கோணத்தில் சென்னை நிகழ்வு இன்னும் ஆபத்தானது என்பது என் கருத்து.

மீடியாக்களின் போக்கு குறித்து (இந்த நிகழ்வை மையமாக வைத்து) தங்கள் கருத்தையும் தங்கள் blogல் பகிர்ந்து கொள்வீர்களா?

அன்புடன்
இளங்கோ

Vimaladhitha Maamallan <madrasdada@gmail.com>
7:40 PM (1 hour ago)
to Tn
இணையத்தில் இருப்பதாய் பேர்பண்ணும் எழுத்தாளர்களுக்கே சூழ்ச்சி பற்றிய அறியாமை. புத்தகம் வெளியானால் ’மீடியா’வுக்குப் பார்வை கிட்டலாம்.

உங்கள் கேள்வியை
உங்கள் பெயருடன் / பெயர் தவிர்த்து வெளிடவா வேண்டாமா ஒன்றுமே வேண்டாம் என்றாலும் ஓகே. ஆனால் பதில் பிளீஸ்

Tn Elango
8:18 PM (1 hour ago)
to me
தாராளமாய் பெயருடன் வெளியிடலாம்