விமலாதித்ய மாமல்லன் ஐயா அவர்களுக்கு,
வணக்கம்!
நான் அபுதாபியில் வசிக்கிறேன். இங்கிருக்கும் இரு நண்பர்களுடன் உரையாடுகையில், (ஆன்லைனில் ஏற்கனவே பெரும்பாலான பதிவுகளை படித்திருந்த போதிலும்) புத்தகத்தை வாங்கி வாசிப்பதில் எங்களுக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்தோம்.
இன்று ட்விட்டரில் ’சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல்’ஆன்லைன் பர்ச்சேஸூக்கான டிஸ்கவரி புக்பேலஸ் லிங்க் கண்டேன். ஐந்து புத்தகங்கள் பதிவு செய்துள்ளேன். ஊர் சென்று திரும்பும் நண்பர்களை எடுத்து வரச்சொல்லி இருக்கிறேன்.
மற்றபடி தாங்கள் சரியான சமயத்தில் ’குரலெழுப்பி’யமைக்கு நன்றிகள் பல. சொல்லப்போனால் உங்களுடைய பதிவுகள்தான் இவ்விவகாரத்தை மேலோட்டமாக இல்லாமல் அனைவரையும் கூர்ந்து கவனிக்கச் செய்தது.
புத்தகத்தின் முக்கியத்துவம் சிலருக்கு இப்பொழுது புரியாமல் போகலாம். பிற்பாடு உணர்வார்கள்.
தங்கள் கடின உழைப்பிற்கும், பிரச்சினையின் மையத்தை தயங்காமல் பொதுவெளியில் வைத்த தைரியத்திற்கும் மீண்டுமொருமுறை எங்களது நன்றிகள்!
இங்ஙனம்,
வேல்முருகன் மற்றும் நண்பர்கள்
அபுதாபி
அன்பான வேல்முருகன்,
மிக்க நன்றி.
என் பெயர் விமலாதித்த மாமல்லன் :-)
***
அன்பான மண்குதிரை,
புத்தகத்தை அனுப்பப்போவது நானில்லை கிழக்கு ஹரன் பிரசன்னா. இன்று அனுப்பி நாளை உங்களுக்குக் கிடைக்கலாம். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் புத்தகம் கிடைக்கவில்லை எனில் ஹபி எண்: 94459 01234 94459 79797 # அவர் புத்தகக் கண்காட்சி கணக்கு வழக்கிலும் நான் அலுவலகப் பணியிலும் தீவிரமாக ஆழ்ந்துள்ளோம். இன்னும் ஐந்து நிமிடங்களில் நான் வேலைக்குக் கிளம்பியாக வேண்டும் கூடடைதல் என் கையில் இல்லை.
அன்பன்
விமலாதித்த மாமல்லன்