கவிஞரென ஆகிவிட்ட மனுஷ்ய புத்திரன் அரசியல் பேசினாலும் தம் கவிதை வார்ப்பு இல்லாமல் பேசமுடியுமா # தமிழையே கதிகலங்கடித்த வைரமுத்துவால் எப்படி விரலாட்டி மிரட்டாமல் பாராட்டகூட முடியாதோ அதுபோல
(கவிஞரென...)
***
கடைசியில் வருத்தமே மிஞ்சியது
நமது நிழல்கள்
வரத் தயங்கும் இடங்களுக்கு
நம்மோடு வந்தவர்களோடும்
நமது வாக்குறுதிகளுக்காக
தம்மைப் பணயம் வைத்தவர்களோடும்
நம்முடைய கனவுகளுக்காக
தம்முடைய கனவுகளை எரித்துக் கொண்டவர்களோடும்
நமது குற்றங்களின் விசாரணை நாளில்
நமக்காகப் பொய் சாட்சியம் அளித்தவர்களோடும்
நாம் வழிதவறிய பாதைகளையும்
நம்முடைய பாதைகளாக்கியவர்களோடும்
கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபோது வந்து
கதவு தட்டியவர்களோடும்
நம் புறக்கணிப்புகளை
மன்னித்தவர்களோடும்
நமது துரோகங்களை
அறியாதது போல நடித்தவர்களோடும்
தம் தசையினை
தின்னக் கொடுத்தவர்களோடும்
தம் குருதியினை மனமுவந்து
பருகக் கொடுத்தவர்களோடும்
கடைசியில் வருத்தமே மிஞ்சியது
- மனுஷ்ய புத்திரன்
***
சன் நியூசில் வாசித்ததாய் மனுஷ்ய புத்திரன் அறிவித்த அரசியல் கவிதை
ஜெயலிதா எப்படி
தன்னுடைய அமைச்சர்களை நடத்துகிறாரோ
அதேபோல
மாநில முதலமைச்சர்களை
ரப்பர் ஸ்டாம்பாக நடத்தும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜெயலிதா சட்ட சபையில்
எதிர்க் கட்சிகள் பேச எந்த அளவு அனுமதிக்கிறாரோ
அதே அளவுக்கே
மாநில முதல்வர்கள்
தேசிய மாநாடுகளில் பேச அனுமதிக்கப்படும் போக்கையும் கண்டிக்கிறேன்.
***
தமிழ் மூன்றெழுத்து
மனுஷ் மூன்றெழுத்து
கவிதை மூன்றெழுத்து போல
பொது மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி, சந்து முனைகளில் ஆழமான அரசியல் பேசினால்தான் டெப்பாசிட்டைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்
பி.கு: அப்பா காலத்திலிருந்து அதே துணியை உபயோகிப்பதுதான் ராயர் கபே இட்லி ருசியின் ரகசியம் என்றொரு பேச்சு உண்டு. சந்தேக நிவர்த்திக்கு சாருவை அணுகவும்.