இணையத்தை வெட்டியாய் மேய்ந்துகொண்டிருக்கையில் எஸ்.ராவின் முத்துநவ ரத்தினமொன்று கிடைத்தது http://www.facebook.com/Geethappriyan/posts/10151770833486340
பாலாவின் பரதேசி
//பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன்,//
பார்த்தேன் அல்லது பார்த்துவிட்டு வந்தேன் என்று எழுதினால் சாதாரணர். ’திரும்பினேன்’ என்று எழுதினால்தான் தேசாந்திரி.
//தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல்//
நந்தலாலா! மிஷ்கின் பற்றியும் இதுபோல சொன்னதெல்லாம் நொந்தலாலா!
//நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி,//
அப்ப பீரியட் படம்னு பாலா சொல்றதுலாம் உடான்ஸா?
நாங்க பாண்டிபஜார் பக்கத்துல இருக்கற நாயர் கடைல அன்றாடம் குடிக்கும் ஆறு ரூவா தேநீர் போட யூஸ் பண்ற மெட்ரோ வாட்டர் இல்லியா? இப்புடியொரு சோகமா? ஓ மை காட்!
தண்ணீர் கண்ணீர்லாம் தேநீர்ல கலந்துருக்குனு கூவினா கொஞ்சம் முற்போக்குக் கவிதெ நடைல இருக்கும். தேநீருக்குப் பின்னாடி கலந்துருக்குனு சொன்னா அதை மனிதாபிமான மேஜிக்கல் ரியலிசமா புரிஞ்சிக்கணுமா பாஸ்?
காலங்களைக் கடந்த எழுத்துங்கறது இதானா பாஸ்.
//தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல அவலங்களுடன், கண்ணீருடன் நிஜமாக சித்தரிப்பு செய்திருப்பதே இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்//
பீரியட் படம்தான் கரெக்டா நூல பிடிசிட்டீங்க. அதென்ன சித்தரிப்பு செய்திருப்பதே. ஓ ’சித்தரித்திருப்பதே’னு எழுதிட்டா சாதா தமிழா?
//சாளுர் என்ற எளிய, சிறிய கிராமம்,//
அந்த காலத்துல கிராமம் எளியதாகவும் சிறியதாகவும்தான் இருந்திருக்கணும். பின்ன OMR மேரி அடுக்குமாடி ஐடி பில்டிங்லாம் இல்லாத கிராமம்னு அழுத்தி சொல்ல வறீங்களோ?
//அந்த கிராம வாழ்க்கைக்குள் தான் எத்தனை விதமான மனிதர்கள், உணர்ச்சிகள்,//
பாஸ்! கதைகளுக்கு எழுதற டெம்பிளேட் பாராட்டையேதான் சினிமாவுக்கும் யூஸ் பண்ணுவீங்களா? பரதேசி பீரியடை விடுங்க. இன்னிக்குக்கூட நீங்களும் நானும் உங்களைப் படிக்கிற ஒவ்வொருத்தரும் எத்தனை விதமான மனிதர்கள், ஒவ்வொருத்தருக்கும் எத்தனை விதமான உணர்ச்சிகள்.
//ஒட்டுபொறுக்கி எனும் ராசா கதாபாத்திரமாக அதர்வா வாழ்ந்திருக்கிறார், அடிபட்டு கால் நரம்பு துண்டிக்கபட்டு, எல்லாவற்றையும் இழந்து குழந்தையுடன் வெறுமை தோய்ந்த கண்களுடன் அவர் திரும்பி பார்க்கும் ஒரு பார்வை போதும் அவருக்குத் தான் இந்த ஆண்டின் தேசிய விருது என்பதற்கு, அதர்வா உங்கள் சினிமா வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொண்டீர்கள்,//
தேசிய விருது படமா? அப்ப டீவில போட்ருவாய்ங்கனு சொல்லுங்க.
//வாழ்க்கைக்கு உண்மையாக உள்ள கலை எப்படி இருக்கும் என்பதற்கு பரதேசி ஒரு உதாரணம்,//
அப்ப ’அவன் இவன்’ ’இவன் அவன்’லாம் டகால்டினு சொல்றீங்க!
//டேனியலின் எரியும்பனிக்காடு நாவலின் உந்துதலில் உருவாக்கபட்டிருக்கும் இப்படம் உலகத்தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது,//
நாவல் உலகத்தரமா இல்லியானு கமிட் பண்ணிக்கவே இல்ல! அது சரி, டேனியலா நமக்கு வசன சான்ஸ் குடுக்கப்போறவரு!
//சாலூர் என்ற சிறிய கிராமத்தில்//
ஏம்பா கொஞ்ச நேரம் மின்னாடி //சாளுர் என்ற எளிய, சிறிய கிராமம்,//னு சொன்னியே அது வேறையா? பரதேசிக்கு, சதுர வட்டை கூம்புத் தலை ஹிப்பித் தலைனு சாளூர் சாலூரா கண்டினூடி மிஸ்ஸானா எப்பிடி இருக்கும்னு ரோசிச்சுப் பாரு. நம்ம வாசகன் கேனப்பூதானே எல்லாம் அவனுக்கு இது போதும்னு எழுதப்பிடாது. கவனமா எழுதணும்னு ஆடு, உடான்ஸ் ஆடின காலத்துலையே உனக்கு சொல்லியிருக்கேன்ல.
//சாலூர் என்ற சிறிய கிராமத்தில் துவங்கி பச்சைமலையின் மொட்டை பாறை ஒன்றில் கைவிடப்பட்டவனாக உட்கார்ந்து கொண்டு நியாயமாரே என்று அலறும் அதர்வாவின் குரல்// (எனக்கு ஏண்டா மசாலா படத்துல வசன சான்ஸ் தரமாட்டேன்றீங்க என்று) //இதுவரையான வணிகரீதியான தமிழ்சினிமாவின் மனசாட்சியைக் கேள்விக்கு உள்ளாக கூடியது,//
//இதுவரையான வணிகரீதியான தமிழ்சினிமாவின் மனசாட்சியைக் கேள்விக்கு உள்ளாக கூடியது,//
தமிழ் சினிமாவின் மனசாட்சியைக் கேள்விக்கு உள்ளாக்கக் கூடியதா?
தமிழ் சினிமாவின் மனசாட்சியின் கேள்விக்கு உள்ளாகக் கூடியதா?
ரெண்டையும் மிக்ஸில உட்டு ஆட்டினாப்புல எழுதினா நாங்க எந்தக் கரிமாந்திரத்தைனு எடுத்துக்கறது?
//அதர்வாவின் ஆகச்சிறந்த நடிப்பு, தன்ஷிகா, வேதிகா இருவரின் உணர்ச்சிமயமான தேர்ந்த நடிப்பு, கங்காணியாக வரும் ஜெரி, ராசாவின் பாட்டி, கிராமத்து குடிகார கதாபாத்திரமாக நடித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்,//
வடிவமைக்கப்பட்டிருப்பது நடிப்பா? கதாபாத்திரங்களா? இப்புடி மிக்ஸட் ஃப்ரூட் மில்ஷேக்கா டிவிடிலேந்து சீன்களைத்தான் தமிழ் சினிமா உலகம் திருடுது. நீங்க செண்டன்ஸ்களையே பின்றீங்களே சார்!
//சிறப்பாக நடித்திருக்கிறார்கள்// உங்களை விடவா? முழுநேர எலுத்தான்களா ஆகி இப்புடி அல்லாடாதீங்கடானா எவன் கேக்கறான்?
//கிராமத்து திருமண நிகழ்வு, கங்காணி ஊர் மக்களை நைச்சியம் பேசி அழைத்துப்போவது, 48 நாட்கள் நடந்து செல்லும் மக்களின் வழித்துயரம், கங்காணி தனது கல்லாபெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கணக்கு முடிக்கும் காட்சி, விஷக்காய்ச்சலில் கொத்து கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் என்று இதுவரை தமிழ்சினிமா பார்த்தறியாத காட்சிகள் படத்தை வலிமையுள்ளதாக்குகின்றன,//
//இதுவரை தமிழ்சினிமா பார்த்தறியாத காட்சிகள் படத்தை வலிமையுள்ளதாக்குகின்றன//
தமிழ் சினிமாவில் நாம் பார்த்தறியாத காட்சிகள் என்பதை ‘கட்டடங்கள் கலக்கலக்கலாமா’ங்கற ரஜினி ஸ்டைல்ல சொல்றீங்களா எஸ்.ரா. நாம இல்ல பாக்கணும் எப்பிட்றா ’தமிழ் சினிமா பாக்கும்’னு எசகுபிசகா மண்டைய ஒடைச்சிகிட்டா அது எங்க தப்புத்தே.
சேம் சீன்ஸ், //படத்தை வலிமையுள்ளதாக்குகின்றன, மனதை துவளச்செய்கின்றன// இதுதான் நவரச எழுத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு
//முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம்//
எழுவாய் பயனிலை செயப்படுபொருள் என்று எந்த எழவுக்கும் கட்டுப்படாத எழுத்தாளர்யா நம்ம எஸ்.ரா.
கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நிறம், தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்
ஆனந்த விகடன் சப் எடிட்டர்கள்தான் இந்த ஆளையும் எழுத்தாளனா நடமாட ஹெல்ப் பண்ணிகிட்டு இருக்காங்க போல. இணையத்துல எழுதும் போது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் லெவல்ல இப்படி இளிச்சிடுது பாவம்.
//என்று அந்த வாழ்வின் யதார்த்தத்தை தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்புறச்செய்திருக்கிறார் செழியன், அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டிற்குரியது, கேமிரா எளிய மக்களின் கூடவே நகர்ந்து பார்வையாளனை இன்னொரு உலகிற்கு அழைத்துப் போகிறது,//
நந்தலாலாவுல கூடத்தான் கேமரா கூடக்கூட போய்கிட்டு இருந்துது.
ட்ரெய்லரைப் பார்த்தாலே ‘அட’னு சொல்ல வைக்கிற படத்தை இப்புடி பொத்தாம்பொது மொக்கையா எழுதி ஜிம்பவும் எஸ்ராவுக்கிருக்கற எக்ஸ்ட்ரா தெறமை வேணும்.
//கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பு, ஜிவிபிரகாஷின் சிறந்த பின்னணி இசை, இரண்டும் படத்திற்கு தனிப்பெரும் பலம்,//
’தனி’னா ஒன்னு சார் இரண்டுனா ரெண்டு சார்! ஓரோன் ஒன்னு ஈரோன் ரெண்டு வாய்ப்பாடெல்லாம் எழுத்தளனுக்குத் தெரிஞ்சிருக்கணும்னு ஏண்டா எதிர்பார்க்கறீங்க?
//இயக்குனர் பாலா பஞ்சம் பிழைக்கப் போய்//
புது தகவலா இருக்கே. இதை பாலாவின் விக்கி பக்கத்துல சேக்க விட்டுட்டாய்ங்களோ?
//பஞ்சம் பிழைக்கப் போய் அகதியான மக்களின் வாழ்க்கையில் புதையுண்டு கிடந்த// (சொல்ல வந்த மேட்டர் முடியாம, அந்தரத்துல தொங்குது பாஸ், அதுக்குள்ள அடுத்த மேட்டருக்குத் தாவிட்டீங்களே செம பாய்ச்சல் நடைதான்) //உண்மையான, துணிச்சலுடன், அசாத்தியமான கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார்// (சொம்பறதை அர்த்தத்தோட சொம்பணும்னு எங்கடா எழுதி வெச்சிருக்கு?)
எழுதி முடிச்சப்புறம் ஒருக்கா திரும்பப் படிக்கக்கூட மாட்டேன்னு ஏண்டா தமிழ் மூஞ்சில எச்சி துப்புறீங்க?
//பச்சைமலைக்கு மட்டுமில்லை, இலங்கைக்கும் தேயிலை தோட்டவேலைக்கு தென்தமிழக மக்கள் சென்றார்கள், இது போல சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து இன்று அநாதரவான நிலையில் அகதிகளாக அலைகிறார்கள் என்ற சமகால உண்மை படத்தை மேலும் வலியுடையதாக்குகிறது//
//இன்று அநாதரவான நிலையில் அகதிகளாக அலைகிறார்கள்//
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று அநாதரவான நிலையில் அகதிகளாக அலைகிறார்களா? சொல்லவே இல்ல. ஜோதிகா ரிடையராயிட்டாங்கங்கறதுக்காக, அவங்க ரோலை வாலண்டியரா நீங்க எடுத்துக்கப்பிடாது.
ஈழ அகதிகள் ஆல் ஓவர் வேர்ல்ட் + மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் = இன்று அநாதரவான நிலையில் அகதிகளாக அலைகிறார்கள்
ஓல்டு மிக்ஸியை உடனே மாத்துங்க. இதைப் படிக்கிற சீமானின் ஈழ வேங்கை எதாச்சும் ஏகே 47னோட பிரபாகரன் தேயிலை பறிக்கிறாப்புல ஸ்டில்லு போட்டுறப்போவுது.
//கிரேட் வொர்க் .பாலா சார்//
கே.பி சாரின் கிளார்க்குத்தன வசனமா கிரேட் வொர்க்னு சொன்னாதான் கெத்தா தமிழ் சினிமா பாசைல பாலா சாருக்கு ஃபீல் ஆவும் இல்லியா எஸ்.ரா சார்?
//தமிழ்சினிமாவின் பெருமைக்குரிய நாயகர் நீங்கள்//
அடுத்த படத்தைப் பொங்கல் பண்ண மறவாது என்னையே அழையுங்கள் பாலா சார்.
எஸ்.ரா போன்றவர்களெல்லாம் எழுத்து ஆளர் என்று திரிகையில், சுஜாதா எழுத்துலகின் பிதாமகன் என்று ’அவரது’ வாசகர்களால் கொண்டாடப்படுவது ஓகேதானில்லையா?
பி.கு: சித்தரிப்பு என்பதை சித்திரிப்பு (சித்திரம் வேர்ச்சொல்) என்றே எழுத வேண்டும் என்பார் எஸ்.பொ - ட்விட்டரில் ஷோபா சக்தி
பி.கு: சித்தரிப்பு என்பதை சித்திரிப்பு (சித்திரம் வேர்ச்சொல்) என்றே எழுத வேண்டும் என்பார் எஸ்.பொ - ட்விட்டரில் ஷோபா சக்தி