அந்த நூற்றாண்டு நாயகன் ....!!!
சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட ஆண்டு அவருடைய பிறந்த நாளையொட்டி டெல்லியில்விழா எடுத்தார்கள்! அதில் பங்கு கோள்ளச் சென்றிருந்தேன்!
எனது பால்ய கால நண்பர் மத்திய அரசு தலமைச் செயலகத்தில் பணியாற்று கிறார் ! அவ்ரப்பார்க்க செயலகத்திற்கு நடந்து சென்றேன்!
உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஒரு வயதானவர் தள்ளாடிதள்ளாடி வந்து கொண்டிருந்தார்! அவருடைய மகள் 30 வயது ! கடுமையான நோயில் படுத்து இருக்கிறாள் அவளுக்கு அரசு உதவி கேட்டு வந்திருக்கிறார்! திக்கு தெரியாமல் அலைந்து கொண்டிருந்தார்!பாவமாக இருந்தது! அவரை என் நண்பரிடம் அழித்துச் சென்று விவரம் கேட்டு அனுப்ப முடிவு செய்தேன்!
நண்பர் under secretory ! முதியவரிடம் விசாரித்தார் ! "ஐயா! குறந்தது மூன்ரு நான்கு மாதம் ஆகும்! விசாரிப்பார்கள் ! நீங்கள் சொல்வது உண்மையா என்று பார்ப்பார்கள்! யாரவது எம்.பி யை தெரிந்தால் அவருடைய சிபாரிசு இருந்தால் விரவு படுத்தலாம்! " என்றார் !
"கமிஷன் கேட்கிறார்கள் " முதியவர் !
நண்பர் என்னைப் பார்த்தார்!
பிரதமரின் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டார் !
பின்னர் என்னிடம் " இதனை முடிவு செய்பவர்கள் பிதமர் அலுவலகத்தினர் தான்! போலியான கோரிக்கை களை நிராகரிக்க விசாரணை நடத்துகிறார்கள்!"
"வேறு வழியே இல்லையா!"
நண்பர் யோசித்தார்!
பெரியவரே ! ஒருகாரியம் செய்யுங்கள்! அசோகா ரோடு 14 ம் எண்ணில் ஒரு அலுவலகம் இருக்கிறது! அங்கு ஒரு எம்.பி இருப்பார் ! அவரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்! அவர் சிபாரிசு செய்தால் உடனே கொடுப்பார்கள்! "என்று முதியவரை அனுப்பினார்!
அது மார்க்சிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அலுவலகம்!
அவர் சிபாரிசு செய்தால் விசாரணை இல்லாமல் உடனடியாக கொடுக்க பிரதமர் உத்திரவிட்டிருந்தார் !
அப்போது பிரதமடாயிருன்தவர் இந்திராகாந்தி அம்மையார் !
அந்த எம்பியின் பெயர் சமர் முகர்ஜி!
வீர வணக்கம் தோழா!
http://www.facebook.com/syamalam.kashyapan/posts/555143514549079
//சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட ஆண்டு அவருடைய பிறந்த நாளையொட்டி டெல்லியில்விழா எடுத்தார்கள்! அதில் பங்கு கோள்ளச் சென்றிருந்தேன்!//
//சப்தர் ஹஷ்மி கொல்லப்பட்ட ஆண்டு//
1989
காஸியாபாத் முனிசிபல் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில் ’ஹல்லா போல்’ (உரக்கச் சொல்) தெரு நாடகத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் ரவுடிகளால் தாக்கப்பட்டு அவர் படுகாயமடைந்த தினம் January 1, 1989 இறந்த நாள் January 2, 1989
//அவருடைய பிறந்த நாளையொட்டி டெல்லியில்விழா எடுத்தார்கள்! அதில் பங்கு கோள்ளச் சென்றிருந்தேன்!//
சப்தர் ஹஷ்மி பிறந்த நாள் April 12. அதாவது 1989 April 12யையொட்டி டெல்லியில் எடுக்கப்பட்ட விழாவுக்கு தமிழகத்திலிருந்து நம் தோழர் சென்றிருக்கிறார்.
http://en.m.wikipedia.org/wiki/Safdar_Hashmi
சதம் கண்டு சமீபத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சமர் முகர்ஜியின் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் அவர்மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் எனினும் பிரதமர் கொண்டிருந்த மதிப்பையும் விவரிக்கும் நெகிழ்வான நிகழ்ச்சி வருகிறது. அதன்முத்தாய்ப்பாய்,
//அவர் சிபாரிசு செய்தால் விசாரணை இல்லாமல் உடனடியாக கொடுக்க பிரதமர் உத்திரவிட்டிருந்தார் !
அப்போது பிரதமடாயிருன்தவர் இந்திராகாந்தி அம்மையார் !
அந்த எம்பியின் பெயர் சமர் முகர்ஜி! //
1984 அக்டோபர் 31ல் படுகொலை செய்யப்பட்டு இறந்துவிட்ட இந்திரா காந்தி, 1989 ஏப்ரலில் காங்கிரஸ் ரவுடிகளால் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்ட சப்தர் ஹாஷ்மியின் பிறந்த நாள் விழாவுக்கு நம் தோழர் டெல்லி சென்றிருந்த சமயத்தில், அப்போது CPI(M) எம்.பியாக இருந்த சமர் முகர்ஜியின் பரிந்துரைக்கு மதிப்பளித்து விசாரணையின்றி உத்தரவிட்டிருக்கிறார்.
இதுபோன்ற த.மு.எ.ச மார்க்ஸிஸ்ட் தோழர்களும் எஸ்.ராவும் இருக்கும்வரை தமிழில் மாய யதார்த்தவாத எழுத்துக்குப் பஞ்சமே இல்லை.
//வீர வணக்கம் தோழா!//
ஆமா அட்ட கிளாஸுலேந்து ஒண்ணாப் படிச்சாப்புல ஒரசிக்கிறதுல ஒண்ணும் கொறைச்சல் இல்லை.
பி.கு: இந்தப் பதிவை தோழர் ஒருவர் ஷேர் வேறு செய்திருக்கிறார். டோலர்னு கூப்புட்டா மட்டும் கோச்சுக்குறீங்க!