மதம் மாறிய தலித்துக்கு ரிசர்வேசன் கூடாது கிறித்துவத்தில் ஜாதியில்லை - இல.கனேசன் # ஆனா கென் ஏன் இப்படி?
மார்க்ஸின் அப்பா : http://www.thiruvilaiyattam.blogspot.in/2012/09/blog-post.html
@Ken: இல கணேசனே சொல்லிட்டா மறுப்பேச்சு, கிறிஸ்துவ மடாலயங்கள், சர்ச்களில் பாதிரியாய், கன்னியாஸ்திரியாய் இருக்கிற தலித்களின் நிலையைப்பத்தி எதாச்சும் தெரிஞ்சிட்டு பேசச்சொல்லுங்க
மார்க்ஸின் அப்பா : http://www.thiruvilaiyattam.blogspot.in/2012/09/blog-post.html
@Ken: இல கணேசனே சொல்லிட்டா மறுப்பேச்சு, கிறிஸ்துவ மடாலயங்கள், சர்ச்களில் பாதிரியாய், கன்னியாஸ்திரியாய் இருக்கிற தலித்களின் நிலையைப்பத்தி எதாச்சும் தெரிஞ்சிட்டு பேசச்சொல்லுங்க
தலித், கிறிஸ்துவனாய் மட்டுமில்ல பிற மதங்களுக்குத்தாவினாலும் அங்கிருக்கும் கீழ் சாதிப்பிடிக்குள் மட்டுமே அமர இயலும்.
***
எங்கள் அலுவலகத்துக்கு, 2007இல் கமிஷ்னராய் சீக்கியரொருவர் வந்தார். அவர் தலித் சீக்கியர். சென்னைக்கு வந்து பதவி ஏற்றுக்கொண்டதும் அவரது முதல் வேண்டுகோள், பூந்தமல்லியில் இருக்கும் குருத்வாராவுக்கு செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. பூந்தமல்லியில் குருத்வாரா இருப்பதே அப்போதுதான் கேள்விப்பட நேர்ந்தது. அலுவலகப் PRO நண்பன் என்னைக் கேட்டான். உடனே கூகுளில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.நிறையபேரைத் தொடர்புகொண்டபின் பைபாசில் இடது பக்கம் இருப்பதாகத் தெரியவந்தது. நந்தனத்தில் இருந்து தி.நகர் இரண்டு கிலோமீட்டர்கள் கூட இல்லை. பிரபலமான இந்த குருத்வாராவை விட்டு அவர் ஏன் பூந்தமல்லி செல்ல வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. யாரைக் கேட்பது? கீழ்க்கண்ட பஞ்சாபிய ஹிந்தியில் இருக்கும் இந்த வீடியோ ஒன்றும் புரியவில்லை எனினும் இதற்கு வந்துள்ள கமெண்ட்டுகளைப் படித்தால் ஓரளவு புரிகிறது.
http://www.youtube.com/watch?v=ufFeAPPyqOg
இந்த வீடியோவில் வரும் ஆங்கில துணைத் தலைப்புகளையும் பார்த்தால் கென் சொல்லும் //தலித், கிறிஸ்துவனாய் மட்டுமில்ல பிற மதங்களுக்குத்தாவினாலும் அங்கிருக்கும் கீழ் சாதிப்பிடிக்குள் மட்டுமே அமர இயலும்.// என்பது என்னவென்று மட்டுமல்ல ஏன் சீக்கிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு விரிவாக்கப்பட்டுள்ளது என்பதும் புரியக்கூடும். இது பற்றி அகாலிகளுடன் கூட்டு வைத்திருக்கும் இல. கணேசன் அவர்களால் நன்றாக விளக்கமுடியும். அவருக்கு நேரமில்லையெனில் இருக்கவே இருக்கிறார் ஜெயமோகனின் தமிழ் ஹிந்து ஜடாயு அவர்கள்கூட செவ்வணே விளக்கலாம்.
http://www.youtube.com/watch?v=msbnLwlo6e0
//அன்றைய ஜூம்மாவுக்குப் பிறகு அவர் கைக்கூலிப்பிரச்சனையைப் பற்றிக் கடுமையாகச் சாடினார்//
//வேற்றுத்தெருவைச் சேர்ந்த ஒருவர் என் தந்தையைப் பார்த்துத் தகாத சொற்களால் ஏதேதோ பேசினார். என்ன பேசினார் என்று என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ‘ஜூம்மா முடிந்தபின் இவற்றையெல்லாம் பேசுவதற்கு நீ யார்?’ என்பதுதான் அவர் கூச்சலிட்டதன் சாரம்சம். என் தந்தை அமைதியாக பதில் சொல்ல முயன்றார். ஒரு மருத்துவக் குடியில் பிறந்த ஒருவர் கைக்கூலிப் பழக்கத்தையெல்லாம் கண்டிக்க முன்வரலாமா? என்பதுதான் அவரின் கோபத்திற்குக் காரணம்.//
//என்னதான் சமமாகப் பழகினாலும் பிரச்சினை என்று வந்துவிட்டால் பிறந்த குடியையே இழிவுபடுத்தும் சூழல் அவர் நம்பிக்கைகளைத் தோற்கடித்தது என்று கருதுகிறேன். என் தந்தை, என் அண்ணன், நான் என்று இந்தச் சமூக இழிவை ஏதோ ஒரு வகையில் கடந்து வந்தவர்கள்தாம்.//
//தந்தை திருஉத்தரசோசமங்கை கோயிலிலும் இரண்டொரு முறை சித்தர் பாடல்களைப் பற்றிப் பேசினார். அன்று எனக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தளத்தில் ஒரு இசுலாமிய சித்த மருத்துவரை அழைத்துப் பேசவைத்துக் கேட்ட அம்மக்களின் பெருந்தன்மை, மதச்சகிப்புணர்வு முதலியவற்றை இன்று நினைத்துப் பார்த்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.//
//கீழக்கரையிலிருந்து என் தந்தை வெளியேறியதன் பொருளை ,சித்தர் பாடல்கள் பற்றி கைலாசபதி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தபோதுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கட்டுரையில் கைலாசபதி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.
‘நமக்குப் பிடிக்காத சபையிலிருந்தும் நாம் எழுந்து போய்விடுவது போல நமக்குப் பிடிக்காத சமூகத்திலிருந்து ஒதுங்கி தனி வாழ்வு நடத்தினர் தாவோயிகள். நீதாம் கூறுவதுபோல அவர்கள் அவ்வாறு விலக்கிகொண்டதே ஆட்சேபத்தைத் தெரிவித்ததற்குச் சமானமாகும்’//
வெளிநடப்புச் செய்தவர் - தமது தந்தையைப் பற்றி இன்குலாப் எழுதிய கட்டுரை http://abedheen.blogspot.in/2013/08/blog-post_7.html
// என் தந்தை, என் அண்ணன், நான் என்று இந்தச் சமூக இழிவை ஏதோ ஒரு வகையில் கடந்து வந்தவர்கள்தாம்//
இன்குலாப் அவர்களின் கைபேசி எண்ணுக்காக ஏகப்பட்ட பேரைத் தொடர்புகொண்டேன். கடைசியாக கவின் மலரிடம்தான் கிடைத்தது. கல்லூரிக் காலங்களிலும் பரீக்ஷாவில் இருந்தபோதும் பிறகும் நெருங்கிய பழக்கத்தில் இருந்தவர்தான் இன்குலாப். பல்லாண்டு இடைவெளிக்குப் பின் பாமாவின் ‘மொளகாய்ப் பொடி’ நாடகத்தில் இன்குலாப்பை சந்தித்தது.
இன்குலாப்பிடம் ’வெளிநடப்பு’ கட்டுரையில் இந்தப்பகுதி பற்றிக் கேட்டேன்.
இன்குலாப்பிடம் ’வெளிநடப்பு’ கட்டுரையில் இந்தப்பகுதி பற்றிக் கேட்டேன்.
ஆமாம் அது காக்கைச் சிறகினிலேவில் வந்த கட்டுரை. ’சித்த மருத்துவர்கள்’ தலித் போல ’தீண்டாமை’யுடன் நடத்தப்படுவது இல்லை. ஆனால் எங்களூர் சபையில், நமக்கு இணையாக வந்து உட்கார்ந்திருக்கிறானே என்கிற உள்ளார்ந்த புழுக்கம் ’பெரிய மனிதர்களிடம்’ ஓடிக்கொண்டே இருக்கும் என்றார்.
80களில் தராசு பத்திரிகையில் வெளியான அவரது - பள்ளிவாசலில் வர்க்கபேதம் இருப்பது பற்றிய கட்டுரையைக் குறிப்பிட்டு அதில் சாதியம் தலித் போன்றவை பற்றி குறிப்பிட்டிருந்ததாகவும் அதற்கு எதிராய் இஸ்லாமியரிடமிருந்து பலத்த எதிர்ப்புகூட கிளம்பியதாக நினைவு என்றும் கூறினேன்.
ஆமாம். அந்தக் கட்டுரைக்கு எதிராய், ’அடியார்’ பொங்கி எழுந்தார் என்றார். அந்தக் கட்டுரை, அகரம் வெளியீடான ’ஆனால்’ என்கிற கட்டுரைத் தொகுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். இன்குலாப் கூறியதன் சுருக்கம் இது.
இஸ்லாத்துக்கு மதம் மாறிய தலித்துகளான கட்டிடத் தொழிலாளர்கள், சங்கம் வைத்து கூலி உயர்வு கேட்கின்றனர். எல்லோரும் ஒன்றுகூடி தொழும் வெள்ளிக்கிழமையன்று, தொழுகைக்குப்பின், கூலி உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்காக, கூட்டம் கூட்டப்படுகிறது. கட்டிடத் தொழிலாளர்கள் சார்பாகப் பேசுவதற்காக ஒருவர் பெரும்பான்மையான மரைக்காயர்கள் மத்தியில் அமர்ந்திருக்கிறார். ஏன் கூலியை ஏற்றுகிறீர்கள் என்கிற கேள்வி எழுபப்படுகிறது அந்தக் கூட்டத்தில். அதற்கு அந்தக் கட்டிடத் தொழிலாளி, மண்ணெண்ணைய் விலை ஏற்றப்பட்டட்டது அப்போது ஏன் ஏற்றினீர்கள் என்று கேட்டீர்களா? நாங்கள் கூலியை ஏற்றும்போது மட்டும் ஏன் என்று கேட்பது முறையா என்கிறார். பளிச்சென்று எழுந்தது எதிர்கேள்வி.
பறையன் என்னடா முறையைப் பற்றிப் பேசுவது?