28 December 2013

அறத்தின் அற்பமுகம்


லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரசு அதிகாரியை சிபிஐ கைது செய்தது என்கிற தலைப்புடன் இந்தப் படத்தைப் பார்க்கும் எவருக்கும் உடனடியாகத் தோன்றக்கூடியது என்னவாக இருக்கும்? பார்ரா, கத்தை நோட்டுடன் கையும் களவுமாய் பிடிபட்டு இருக்கிறார்.

இந்தப் படம் ஹிண்டு ஆன்லைனில் வந்த 07/03/2012 அன்று, இதன் கீழே சிறிய எழுத்தில் C. Rajan, Additional Director General, Directorate of Revenue Intelligence. File photo என்று போட்டிருந்தது. File photo என்றால் என்ன பொருள்? வேறு எதற்காகவோ எடுத்த பழைய புகைப்படம் என்பது பத்திரிகை படிப்பவர் எவருக்கும் தெரியும். ஆனால் படம் ஈர்க்கும் அளவுக்கு ஃபைன் பிரிண்டுகள் எவரையும் ஈர்ப்பதில்லை. ஐஐடி ஆம் ஆத்மி மேதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காணும் அறிவிலிருந்து குறிப்பாக அறச்சீற்ற மேதைகளுக்கு எப்போதுமே விதிவிலக்கு உண்டு என்பது அன்றாடக் காட்சிதானே.


இதை அப்படியே எடுத்து India Against Corruption அறிவு சீவிகள் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டுக்கொண்டனர். இந்துவே இந்தப் படத்தை நைசாக மாற்றிக்கொண்டாலும் ஜன் லோக் பால்காரர்களிடம் இன்றும் அது அப்படியே இருக்கிறது. மேற்படி சுட்டியைப் போய்ப்பாருங்கள் இன்றுவரை 87 பேர் இதைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

முதல் கமெண்ட்டைப் பாருங்கள்.


Ghanghas Vikas ipad bhi tecnical prsn
March 7, 2012 at 11:07am

ஏர் கஸ்டம்சையும் ஸீ கஸ்டம்சையும் பார்த்து இரண்டையும் கண்காணிக்கும் DRIயின் அதிகார உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருக்கும்  மனிதருக்கு, இரண்டுமுறை காஃபிபோஸாவில் உள்ளே போய்வந்தவனிடம்தான் லஞ்சமாக ஐபேட் கேட்கவேண்டும் என்று தலையெழுத்து பாருங்கள். எதோ படித்தவன்கள் என்று பார்த்தால் ஆம் ஆத்மி இவ்வளவு தற்குறிக் கூட்டமா?

சரி தொடங்கிய கதைக்கு வருவோம். 

இந்து இந்த செய்திக்குக் கொடுத்த தலைப்பு என்ன? எங்கும் தேட வேண்டாம். இண்டியா எகென்ஸ்ட் கரப்ஷன் நேர்மையாளர்கள் லஞ்ச ஒழிப்பைப் பரப்ப பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்காமல் திரு. ராஜன் அவர்களின் படத்தை அழுத்தினாலே 2012ல் இந்து வெளியிட்ட செய்திக்குக் கொண்டு செல்ல ஹைப்பர் லிங்க் கொடுத்திருக்கிறார்கள்.

அது போய் சேருமிடத்தில் இருக்கும் திரு. ராஜன் அவர்களின் படத்தைப் பாருங்கள். Top DRI official held on graft charge செய்தி வெளியிட்ட 07/03/2012 அன்றே, சில மணி நேரங்களிலேயே இந்துவுக்கு மனசாட்சி உறுத்தியதோ இல்லை அதன் சட்ட ஆலோசகர்கள் எச்சரித்தனரோ என்னவோ திரு. ராஜன் அவர்கள் கையில் இருக்கும் ’லஞ்ச’ப் பணத்தை வெட்டி படத்தை சுருக்கிக் கொண்டனர். ஆனால் அதன் கீழ் இருக்கும் File photo அப்படியே இருப்பதைப் பாருங்கள். 
முதலில் வெளியிட்டதும் சிலமணி நேரங்களில் வெட்டிச் சுருக்கியதும் அதே படம் முடிச்சுருள் சுவரில் விழும் நிழல் உட்பட அப்படியே இருப்பதைப் பாருங்கள்

லஞ்சம் வாங்கும்போது, இந்த அதிகாரியை  'லபக்'கென்று பிடித்தது எங்கு என்று சொன்னது சிபிஐ?



அவரது வீட்டில். 

நான் சொல்லவில்லை மேற்கண்ட செய்தியில் இந்து சொல்கிறது. அவர் வீட்டில் வைத்துப் பிடித்ததாக சிபிஐ சொன்னதாக இந்து சொல்கிறது. 

“After ensuring that the packet containing the money and iPad was taken into the house, the team moved in and apprehended Mr. Rajan and his car driver.”

சிபிஐ சினிமாவைப் பிற்பாடு பார்ப்போம் இப்போது இந்துவின் நேர்மையைப் பார்ப்போம்.

திரு. ராஜன், 500 ரூபாய் கட்டுடன் இருக்கும் படத்தை நன்றாகப் பாருங்கள். வீடுபோல் தோன்றுகிறதா அல்லது அவரது அலுவலக அறைபோல் தோன்றுகிறதா? வீட்டில் கூட கோட்டு டையுடன் உட்கார்ந்திருக்க அவரென்ன விஜய் டிவி கோட்டு கோபிநாத்தா?



இப்போது இது போட்டோவுக்குக் கொடுத்த போஸ் எனறு படவில்லையா? எனில், வாசகர் சுவாரசியத்துக்காகவும் பரபரப்புக்காகவும் லஞ்சச் செய்திக்கு சற்றும் சம்மந்தமற்ற படத்தை வைப்பதுதான் INDIA'S NATIONAL NEWS PAPER SINCE 1878 என்று நெற்றியில் சாற்றிக்கொள்ளும் இந்து பாரம்பரியமா?

திரு. ராஜன் கையில் இருக்கும் இந்த 500 ரூபாய் கட்டு ’லஞ்சப் பணம் இல்லை’ எனில், அவர் அதைத் தொடவே இல்லை எனில் அவர் கையில் இருக்கும் பணம் எங்கிருந்து  வந்தது? அது, படமாக இந்து பத்திரிகையின் அலுவலக ஃபைலில் போய் எப்படி உட்கார்ந்தது?

அதற்கான பதில் தேடி எங்கும் போய் அலைய வேண்டாம். இந்துவிலேயே இருக்கிறது. 

திரு. ராஜனின் அலுவலகம் சுங்கச் சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்துக்கு உடபட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் துறையின் கீழ் வருவது ஆகும். 21/09/2010 அன்று போலி 500 ரூபாய் நோட்டுகளை எக்மோர் ரயில் நிலையத்தில் DRI பிடிக்கிறது. அதை இந்து நாளிதழ் 22/09/2010 அன்று செய்தியாக வெளியிடுகிறது.

நன்றி: பேராசிரியர் அன்பழகனார் ஆய்வு நூலகம்

இந்த செய்தியும் திரு. ராஜனின் கையிலிருக்கும் அந்த 500 கட்டும் ஒன்றுதான் என்று எப்படிச் சொல்ல இயலும் என்ற கேள்வியைத் தவறு என்று சொல்ல முடியாது. அதிலும் குறிப்பாக இந்து போன்றவர்கள் செய்திருப்பது அயோக்கியத்தனமான அவதூறு என்ற குற்றச்சாட்டை வைக்கும்போது எதிர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இரட்டிப்பாகிறது.

ஆக, போலி நோட்டு கடத்தலைக் கண்டுபிடித்து அதில் இருக்கும் வாட்டர் மார்க்கை திரு. ராஜன் சுட்டிக் காட்டுவதை, லஞ்சப் பணமாய் புரிந்து கொள்ளும்படி வெளியிட்டிருக்கிறது இந்து.

நன்றாக இருக்கையில் நம்மோடு சேர்ந்து சிரிக்க நாலுபேரென்ன நாலாயிரம்பேர் வருவார்கள். நம் நிலை சற்றே சரிந்தால் முதலில் புரட்டிப்போட்டு மிதிப்பவர்களும் அவர்களாகத்தான் இருப்பார்கள்.


அது சரி பரபரப்புக்காகப் பத்திரிகையின் தர்ம சொம்பில் கொஞ்சம் சொட்டை விழுந்து நசுங்கியதைப்போய் பெரிதுபடுத்தி இவ்வளவு அக்கப்போரா? அந்தப் படத்தை விடும். திரு. ராஜன், லஞ்சம் வாங்கும்போது, கையும் களவுமாய் சிபிஐயால் பிடிபட்டது உண்மைதானே. அதை இல்லை என்று சொல்ல முடியுமா?

இந்து செய்தியின் கமெண்டில் ஒரு உத்தமக் கேள்வியாளர் கேட்டது he is honest? Then how come the money and iPad are touched by him? சான்சே இல்லை என்னா கேள்வி நாந்துகொண்டுதான் செத்தாக வேண்டும். வேறு வழியே இல்லை போங்கள் Ayyappa Posted on: Mar 8, 2012 at 06:10 IST ஆனால் இதை சிபிஐ தன் ரெக்கவரி மகஜரிலேயே குறிப்பிடாதது ஏன் என்றுதான் கேட்கிறார் நீதிபதி. "..........What is surprising is that there is no whisper at all in the entire mahazar as to whether the writ petitioner handled the money at all at any point of time......."

சமீபத்தில், சென்னை 'சுங்க இல்லம்' அலுவலகத்தில் அதிகாரியின் மார்பில் கராத்தே கிக் விட்டு கைது செய்யப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்டாமலே பெயிலில் விடுவிக்கப்பட்ட, வக்கீல் உடையில் அதிகாரிகளை பிளாக்மெய்ல் செய்யும் கடத்தல்காரன், சென்னை சிபிஐயே தன் கையில் இருப்பதான பந்தாவுடன், போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டு திரியும் வார்த்தை என்ன தெரியுமா? 

”ராஜன் கமிஷ்னரை சிபிஐயில் மாட்ட வைத்தது நான் தான்”

சிபிஐக்கு இதைவிடப் பெரிய விருதை யார் அளிக்க முடியும்?

லஞ்சம் வாங்கி சிபிஐயால் கையும்களவுமாய்ப் பிடிபட்டு ஜெயிலுக்குப் போய் பெயிலில் இருக்கும் அரசு அதிகாரிகளில் எத்துனைபேர், "என் கைது விவகாரத்தை இன்னும் தீவிர விசாரணைக்கு  உட்படுத்துங்கள்” என்ற கோரிக்கையுடன் உயர் நீதி மன்றத்தில் ரிட் போட்டு இருக்கிறார்கள்? இதுபோன்ற வழக்குகளில், அனுமதி நிலையிலேயே தள்ளுபடி செய்யப்படாமல் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள்தாம் எத்துனை?

தீர்ப்பின் முக்கியமான பத்திகளை எடுத்து ஒட்டத் தொடங்கி, முடிவில் பார்த்தால் கிட்டத்தட்ட முழு தீர்ப்பையும் ஒட்டியிருப்பது தெரிய வந்தது. இதற்கு தீர்ப்பின் சுட்டியைக் கோடுத்துவிடுவதே உத்தமம் என்று தோன்றிவிட்டது. 

Hon'ble Thiru. Justice V. Ramasubramanian
Born on 30.06.1958. Studied B.Sc. at Vivenkananda College, Madras. Enrolled as a member of the Bar on 10.02.1983 and practiced under Mr.K.Sarvabhauman and Mr.T.R.Mani, Senior Advocates. 
Appointed as Additional Judge of High Court of Madras on 31.7.2006.

44 பக்கங்களில் ஹிட்ச்காக் பட திரைக்கதை