02 March 2014

விருதாவல்ல விருது

ஜனாதிபதி விருது என்றால் என்னவென்றே அறியாதிருந்தும் அதைப் பற்றி ஏளனமாய் இளித்தார் சாரு. அதுவே என் இணைய நுழைவுக்கும் இலக்கியவாதிகளின் நிம்மதிப் பிடுங்கலுக்கும் முகாந்திரமாயிற்று.


இலக்கியம் பற்றி ஏபிசிடிகூடத் தெரியாத நீயெல்லாம் படைப்பைப் பற்றிக் கருத்துக் கூறுவதா என்கிற எழுத்தாளர்களின் இறுமாப்பு எத்துனை நியாயமானதோ அதே அளவுக்கு அவர்கள் அறியாத துறைகள் எனச் சில உண்டு என்பதும் அவை பற்றி அவையடக்கத்துடன் அவர்கள் மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதும் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் நியாயம்.

ஜெயமோகன் இதில் சுத்த சுயம்பிரகாசம். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்று ஒரு வரி எழுதிவிட்டால், எதைப் பற்றியும் பக்கம் பக்கமாய் எழுதும் தகுதி தமக்கு வந்துவிடுவதான தன்னம்பிக்கை கொண்டவர். 

சாரு வெள்ளந்திபோல் நடிக்கும் வெற்று முண்டம்.

எழுத்து மட்டுமன்று, ஒவ்வொரு துறையிலும் சாதனை சாதாரண முயற்சியில் கைகூடி விடுவதன்று என்கிற சாதாரண விஷயம் இந்த இலக்கிய சாம்பிராணிகளுக்கு ஒரு போதும் பிடிபடுவதில்லை. பதினாறு ஆண்டுகள் இந்தக் குழூஉக்குறி குற்றிலக்கியத்தை விட்டு விலகி இருந்ததற்கு இந்தக் கைப்பும் ஒரு காரணம். தானே தான் மட்டுமே உலகம் என்கிற மட மமதையால் பீடிக்கப்பட்டதுகள். அப்படியே சாதித்ததெல்லாம் கூட ஒடுக்கும் சிடுக்குமாய் ஒப்பேற்றப்பட்ட பண்டங்கள்தாம் என்பதை ஒன்றுக்குமேற்பட்டமுறை எழுதி வைத்திருக்கிறேன் என் பக்கங்களில்.

இவர்கள் இல்லாமல் உலகம் உய்த்துவிடும் ஆனால் பல துறைகளைச் சேர்ந்த பலரின் சில ஆயிரம் மாத சம்பளத்துக்கு வேலையாய்ச் செய்யும் அர்ப்பணிப்பின்றி சமூகம் தடுமாறிவிடும் என்பதே யதார்த்தம்.

ஹெராயின் போன்ற போதைப்பொருளைக் கடத்தும் கூட்டம் எதற்கும் துணிந்தது. காரணம் அதில் சம்மந்தப்பட்டிருக்கும் கோடிகள். மாட்டிக்கொண்டால் பத்து ஆண்டுகள் கேள்விமுறையே கிடையாது எனும்போது தன்னைத் தற்காத்துக்கொள்ள அவன் எதற்குதான் துணியமாட்டான்?

அவனைப் பிடிக்க வேண்டும் என்றால் மாதக்கணக்கில் அவன் பின்னாலேயே நின்றாக வேண்டும். அதுவும் தென்தமிழக சமூகவிரோதிகளின் வீரதீரப் பிரதாபங்கள் பற்றி சொல்லத்தேவையே இல்லை.

அவன் எதிர்பாரா தருணத்தில், பொது இடமெனில் கும்பல்கூடுமுன் அவனைப் பொருளுடன் அப்புறப்படுத்துவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கூட்டமாய்ப் போக முதலில் எண்ணிக்கையளவில் அதிகாரிகள் கிடையாது. பேருக்கு ஒருவர்  மிஞ்சிப்போனால் இருவர் மூவர். அதற்குமேல் போனால் சின்ன ஊர்களில் யார் என்ன என்று தெரிந்துவிடும். அவனோ உள்ளூர். நாமோ வெளியாள். 

இவ்வளவையும் தாண்டி, அவன் கையில் என்ன இருக்கிறது பையில் என்ன சாமான் வைத்திருக்கிறான் என்று பார்க்காமல் 20 கேஜி ஹெராயினைத் தூக்கி பைக்கு முன்னால் வைத்துக்கொண்டு அவனை இருவருக்கிடையில் வைத்து ஓட்டிக்கொண்டு அலுவலகத்துக்குத் தூக்கிக்கொண்டு வருவதென்பது, அதுவும் தூத்துக்குடியின் சுற்று வட்டாரத்தில் சாமானிய சாதனை அல்ல. 

மறுநாள் இதுபோலவொரு பெட்டிச்செய்தியாய் அது வெளியாகி இருக்கும்.
இது நடந்தது 2001லோ 2002லோ. இதைப்போல இதற்கு முன்னும் பின்னும் கணக்குவழக்கின்றி களத்திலும் பின்னணியிலும் நின்று எவ்வளவோ சாதித்திருப்பதற்குதான் இந்த அட்டை. முந்தைய வருட குடியரசு தினத்தில் அறிவிப்பு. இந்த வருட விழாவில் அளிப்பு.

வாழ்த்துகள் ஜெபாஸ்டின் சார்!
16. Shri A. Jebastin, Senior Intelligence Officer, Directorate of Revenue Intelligence, Chennai Zonal Unit, Chennai .
http://www.cbec.gov.in/rhs-misc/prez-awards-rday2013.htm