இங்க இருந்த கம்ப்யூட்டர் எங்கடாப் போச்சி?
எனக்குத் தெரியாது சார்
அடிங்! இங்க எல்லாமே நீதாங்கறாங்க. இப்ப உண்மையைச் சொல்லப்போறியா இல்லையா?
உடனே ஆவேசமாய்ப் பாய்ந்தெழுந்து,
யூ கென்னாட் இல் ட்ரீட் மை வொர்க்கர். ஹி ஈஸ் எஸ்ஸி-எஸ்டி. ஐ வில் லாட்ஜ் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் என்றார், மோசடியாய்த் தயாரித்த ஏகப்பட்ட இறக்குமதி ஆவணங்கள் பிடிபட்ட, பெங்களூரில் செட்டிலான மராட்டிய முதலாளி
நடந்ததைக் கதையாக எழுதியதற்காக நான் வாங்கிய அடி, மொழி கடந்து மாநிலம் கடந்து அவருக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியமாய் இருந்தது.
நிறம் [சிறுகதை] http://www.maamallan.com/2011/08/blog-post_06.html
எதிரியை அடிக்க எதைக் கையில் எடுக்கவேண்டும் அதை எப்படித் திரிக்கவேண்டும் என்பதில் முதலாளிப் பாரம்பரியத்துக்குச் சற்றும் சளைத்ததன்று கம்யூனிஸ்ட் பாரம்பரியம்.
இதைத்தான் 'பிராமின் கன்னிங்னஸ்' என்று ஒரு காலத்தில் சுயமரியாதை இயக்கத்தினர் கூறினர்.