03 January 2015

தூக்கமும் துக்கமும்

கீழ்க்காணும் FB பதிவில், ஆர்வக்கோளாரில் நிகழ்ந்திருந்த காமெடியை நேற்று பகிர்ந்திருந்தேன். ஆனால் இதை எழுதியுள்ள மனிதர் தெளிவானவர்தான். தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் மட்டுமல்லாது எதையெதையெல்லாம் எதிர்க்கிறோம் என்பதைத் தனித்தனியே சொல்லுகிற அளவுக்குத் தெளிவானவர்தான். இந்தப் பதிவின் மூலமாக, அந்த ஓரிடம் தவிர்த்து, இந்த மனிதர் எவ்வளவு விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார். இவை குறித்து யாரேனும் ஏதேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே காத்திருந்தேன். எதிர்வினைகள் ஏதுமற்ற காரணத்தால் இதை எழுதவேண்டிதாயிற்று.
https://www.facebook.com/jmbatcha/posts/10203335538498414?pnref=story

//பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்ற‌ அப்துல் காலிக்- அவர்களுக்கு கீழக்கரையில் திருமணம் நடைபெற்றது.// 
இதை கீழக்கரை டைம்ஸ் சொல்லிவிட்டது. அதை வெறும் செய்தியாய் பகிர்வது அல்ல இவரது நோக்கம். 
//ஆன்மீகப் பாரம்பரிய சூஃபியிச பின்புலம் கொண்ட ஜமாத் தலைவர்களோடு சிறப்பான முறையில் திருமணம் செய்துகொண்ட கண்ணியம் இந்த புகைப்படங்களிலேயே தெரிகிறது..// 
இதை, எல்ஐசி நரசிம்மன்/கெளண்டமணி/செந்தில் - நின்னுக்கோரி வர்னம் -  காமெடியாய் மட்டுமே கடந்துபோய்விட்டால் நஷ்டம் நமக்குதான்.
//யுவன் நல்ல வேளை அடாவடித்தனமும், ஆன்மீகப்பின்புலம் இல்லாத மற்றும் விரிவான புரிதல்களும்இல்லாத வெறும் வெற்று உணர்ச்சிவசப்படுத்தும் வீணான நவீன கூட்டத்தோடு சேராததில் மிக மகிழ்ச்சி.. // 
உங்களோட வாய்க்கா தறாருல இருக்கற இந்த நவீன முஸ்லீம் கூட்டம் 'மிடில பாதிக்குமேல படிக்கமிடில ஓவர் கன்பீசன்ஸ்
https://en.m.wikipedia.org/wiki/Shia –Sunni_relationsனு புலம்பற அளவுக்கு இருக்கற இவங்கள்ல யாருண்ணே சும்மா ஓப்பனா சொல்லுங்கண்ணே
//அப்படி சேர்ந்திருந்தால் அவர் இஸ்லாத்திற்கு வந்ததிலேயே அர்த்தம் இல்லாது போயிருக்கும்.// 
ஓ! அப்படினா அந்த நவீன கூட்ட இஸ்லாம் நம்ம பிராண்டு இல்லேங்கறீங்க. அப்ப உங்க பிராண்டாச்சியும் என்னான்னு சொல்லுங்கண்ணே
//ஏ.ஆர்.ரஹ்மானைப் போன்ற விரிவான ஆழமான புரிதலோடு கூடிய அன்பின் சூஃபியிஸம் சார்ந்த ஆன்மீக அணுகுமுறை இருந்தால் இவரின் உயரமும் இமயம் தொடும். // 
இது சோசியமாண்ணே. இல்லே, போனா வராது பொழுதுபோனா கிடைக்காதுங்கறாமேரி இது என்ன அல்லாஹ் ஆடித் தள்ளுபடியா?
திலீப் ஏ.ஆர்.ரஹ்மானா ஆகறதுக்கு மின்னாடி கேட்ட, இந்து ஆன்மீக இளையராஜா பாட்டெல்லாம் செம்ம கடியா ஆயிடுச்சா பாஸ்?
ஐயிருக்கும் மத்தவனுக்கும் இன்னைக்கும் தனித்தனி ஹால்லதான் சோறு போடற ராகவேந்திரர் தர்காவான மந்த்ராலயத்துக்குப் போகாட்டாலும் மனசார ராகவேந்திரரைக் கும்புட்ற ரஜினி போயிருக்கிறது தமிழ்நாட்டுக்குள்ள எவரெஸ்ட் உயரமில்லீங்களா பாய் 
சாமியைக் கும்புடமாட்டேன்னு அடமா நிக்கிற கமல் ஹாஸன் என்ன கடல் அடியில வாழற குள்ளரா பாய்
//இன்னொன்றும் சொல்ல வேண்டும்.. இன்று தாய்மதத்திற்கு வாருங்கள் என கட்டாய மதமாற்றத்திற்க்கு வித்திடும் பாசிச சக்திகளில் குறிப்பாக எச்.ராஜாவோ, இல.கணேசனோ அல்லது சங்காராசாரியார்களின் குடும்பத்தில் உள்ளவர்களோ// 
அவங்களை ‘கவனிச்சுக்க’ நாங்க இருக்கறோம். உங்களை கவனிக்க யாராச்சும் இருந்தா சொல்லுங்க 
//இது போன்று ஒருவரை // 
பாய்! // இது போன்ற ஒருவரை // இதுக்கு அர்த்தம் என்னா பாய்! 
//தனது மகளுக்கோ மகனுக்கோ திருமணம் செய்து அவர்களில் ஒருவராக அவர்களின் பிராமணிய குடுமப்த்திலோ அல்லாது பிர உயர்ஜாதி குடுபத்திலோ எந்த ஒரு சாதிய உணர்வும் அற்று ஏற்றுக்கொள்வார்களா எனப்தை நடுநிலையில் உள்ள நண்பர்களே நீங்கள் பிராக்டிகலாக சிந்தனை செய்துபாருங்கள்.//
எங்க ஆபீஸ்லேந்து மட்டுமே பிராக்டிகலா நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கற எத்தனைப்பேர் லிஸ்ட்டு வேணும்?
ஐயங்கார் பொண்ணு வன்னியர் பையனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டன்னிக்கும் அடுத்து ஒரு வாரத்துக்கும் ஏதோ இவனோட சொந்த அக்காளோ தங்கச்சியோ 'ஓடிப்போயிட்டாப்புல' கூடிக்கூடி குசுகுசுனு ஒப்பாரி வெச்ச எங்க ஆபீஸ் அயிரு பசங்களுக்கு ஆப்போசிட் சைட்ல ஆரவாரிக்கிறீங்க பாய் நீங்க. அந்த அசடுகளுக்கும் உங்களை போன்ற அறிவாளிகளுக்குமான வித்தியாசம் நூலளவுதான் பாய். 
சொந்த விருப்பத்துல பெத்த தகப்பனைப் பகைச்சுகிட்டு உங்க மதத்துக்கு வந்தனை, மறைமுகமா அவன் ஜாதி பேரை சொல்லாம நல்லா வரவேற்கிறீங்க. இதன் மூலமா யுவன் சங்கர் ராஜாவை இன்சல்ட் பண்ணிகிட்டு இருக்கோம்னு நெஜமாவே உங்குளுக்குத் தெரியலையா பாய்? 
//சிறந்த புரிதலோடு இணைபிரியாது வாழ்க யுவன் தம்பதியினர்.// 
//சிறந்த புரிதலோடு// ஜாதி பேரை சொல்லாம சொன்னா மாதிரி, வேற எதையோ மறைமுகமா சொல்றாப்புல இருக்குது. இது வாழ்த்தா வார்னிங்கா? 
தனக்குக் கொஞ்சம்கூட சம்மந்தமே இல்லாத தனி மனிதன் மீது தமது லேபிளை ஒட்டாவிட்டால் இணையத்து இந்துத்துவர்களுக்கும் இஸ்லாமிஸ்ட்டுகளுக்கும் தூக்கமே வராதோ?