பாரதி மணியிடம் நலம் விசாரித்து இன்று நிறைய அழைப்புகளாம். வழக்கமான எள்ளலுடன் அதைப் பதிவாகப் போட்டிருக்கிறார் https://www.facebook.com/bharati.mani/posts/10203742830880401 அதற்கு 120 லைக்குகள், வாழ்த்தும் நையாண்டியுமாய் 55 கமெண்டுகள். அவற்றுள் படு நக்கலாய் ஐந்தாறு கமெண்ட்டுகளுக்கு உபயதாரர் பாரதி மணியே.
விஷயம் இதுதான். பாரதி மணி அளவுக்கு பிரபலமோ பிரமுகரோ அல்லாத மணி பாரதி https://www.facebook.com/bharathi.mani.9 என்பவர் இன்று இறந்திருக்கிறார். இந்தப் பெயர்க் குழப்பமே அத்தனை அழைப்புகளுக்கும் காரணம். இந்த விஷயத்தை, இரண்டாவது மூன்றாவது கமெண்ட்டிலேயே இறந்தவரின் பெயராகவும் ஃபேஸ்புக் சுட்டியாகவும் கூட ஓரிருவர் தெரிவித்துவிட்டார்கள். இதை பாரதி மணி கண்டுகொண்டதாகக்கூட காட்டிக்கொள்ளவில்லை. செத்தது ஊர் பேர் தெரியாத ஏதோ ஒரு அற்பஜீவிதானே ஆகவே அய்யா அறிவுஜீவிக்கும் 55 கமெண்டன் கமெண்டலி வாசகஜீவிகளுக்கும் என்ன ஆச்சு. எவனோ செத்தான் மயிரே போச்சு. ஒப்புக்கு ஒரு உச்சுக் கொட்டல்கூடக் கிடையாது.
ஜெயகாந்தனின் சுமைதாங்கி கதையில் http://www.sirukathaigal.com/கிரைம்/சுமைதாங்கி/ சிறுவனொருவன் விபத்தில் அடிபட்டு மாண்டிருப்பான். அதை ஒவ்வொரு வீடாக ஏறி உங்க வீட்டுப் பிள்ளையா உங்க வீட்டுப் பிள்ளையா என கதவைத் தட்டிக் கேட்டாக வேண்டிய துர்பாக்கிய நிலையிலிருக்கும் போலீஸ்காரன், அந்தக் குழந்தை இந்த வீட்டுக் குழந்தையாய் இல்லாதிருக்கட்டுமே என வேண்டிக்கொண்டே ஒவ்வொரு வீட்டுப் படியாக ஏறுவான். இதுதான் இலக்கியம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி என்றெதுவும் அறியாத அற்பஜீவிகளிடம் இருக்கும் இயல்பான சென்ஸிடிவிடி.
இதையெல்லாம் ஃபேஸ்புக் பிரபல பிரமுகர்களிடமோ அல்லது ஃபேமஸானவர் போடுவதெல்லாம் சந்தனம் எனப் பூசிக்கொண்டு லைக்பண்ணும் பெருமித சொம்புகளிடமோ எதிர்பார்ப்பது நம் அறிவீனம்.
பாரதி மணி வயதில் மட்டுமே பெரிய மனிதர் என்பது இன்று தெரிய வந்தது.
என்னால் முடிந்தது அவரை அன்ஃபிரெண்டு செய்வதுதான். அதைச் செய்திருக்கிறேன்.