04 April 2015

உன் சோலும் என் மைண்டும் சந்தித்தால்

https://www.facebook.com/AOLUniverse/photos/a.157877484236715.33042.154033551287775/967197809971341 

Today is Hanuman Jayanti! Here is Sri Sri Ravi Shankar's message:

It is said that the Ramayana is happening in your own body. Your soul is Rama, your mind is Sita, your breath or life-force is Hanuman, your awareness is Laxmana and your ego is Ravana. When the mind was stolen by Ravana (the ego) then the soul got restless. Now the soul cannot reach the mind on its own, it has to take the help of the breath - the prana. With the help of the prana, the mind got reunited with the soul, and the ego vanished. This is the spiritual significance of the story.

Otherwise Hanuman was a monkey, and in those days the monkeys were also very intelligent and very devoted. Devotees are much more powerful than the master himself. This is a fact. Real devotees are much more powerful than God.

<It is said that the Ramayana is happening in your own body.>
இன்னைக்குக் கிண்டின உண்டசோறு இதானா பாஸ்

<Your soul is Rama, your mind is Sita, your breath or life-force is Hanuman, your awareness is Laxmana and your ego is Ravana.>
கேரெக்டரைசேஷன்லாம் ஓகே. ஆனா சப்போர்ட்டிங் கேரெக்டர்களான ஹனுமான்ஜி லக்ஷ்மண்ஜியைத் தவிர மீதி எதுக்குமே உருவமில்லியே ஸ்கிரீன்ல எப்பிடித் தெரியும். அதுவுமில்லாம சோலும் மைண்டும் பாடில எந்த பார்ட்டுல பாஸ் இருக்கு. ரெண்டுமே அனுமானத்துல கவித்துவமா ஓட்டிகிட்டு இருக்குற மேட்டராச்சே.

<When the mind was stolen by Ravana (the ego) then the soul got restless.>
எங்குளுக்குலாம் இல்லாத மைண்டு உனக்கு ஸ்பெசலா இருக்குதுன்னுதான பாஸ் நீயே ஈகோவுல நட்டுகினு திரியறே. அதாலதான பாஸ் உன் சோலு டிரஸ்டு சவுக்கியமா வரி விலக்குல சொத்து சேத்துகினே போவுது.

<Now the soul cannot reach the mind on its own,>
ஏன் பாஸ் ஏன்
சோலால மைண்டைத் தனியா ரீச் பண்ணமிடியாதுனு சொன்னா என் எதுக்குன்னு சும்மா தொணதொணத்தாம கேட்டுக்கணுமா சரி பாஸ் என் மைண்டைக் களட்டி வெச்சிடறேன்

<it has to take the help of the breath - the prana. With the help of the prana, the mind got reunited with the soul, and the ego vanished.>
பாஸ் எப்பவும் போலதான மூச்சை இசுத்து விட்டுகினுக்றோம். இந்த ட்விஸ்ட்டு எப்ப நடந்துச்சி பாஸ். பிக்ச்சரைக் கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிக் காட்டுங்க பாஸ். உசுரோட இருக்கச்சவே உசுரோட உதவியால சோலும் மைண்டும் ஒன்னா சேந்துடுச்சா. அப்பால ஏன் இந்த வெட்டி சோமாரிங்கலாம் நீதான் சோலுக்கும் மைண்டுக்கும் கப்ளிங் பொட்டுக் குடுப்பேனு உங்கிட்ட லைன் கட்டி நிக்கிறானுங்க

<This is the spiritual significance of the story.>
ஓ இதான் மேட்டரா. அதான் ஊராமுட்டு துட்டை ஒக்காந்து நறுவிசா சொரண்டித் துன்றவன்லாம் உங்கிட்ட ஸ்பிரிச்சுவல் என்லைட்டன்மெண்ட் தேடி வரானா

<Otherwise Hanuman was a monkey, and in those days the monkeys were also very intelligent and very devoted.>
ஆக மொத்தத்துல இப்பவும் நம்மகிட்ட வர குரங்குகள் மிகவும் புத்திசாலி அடிமைகள்

<Devotees are much more powerful than the master himself.>
ஆத்தாடி இதைக் கேட்டப்பறமும் எந்தக் கொரங்காச்சும் துட்ட அவுக்காம இருக்குமா. அதுவும் போனஸா, அவுக்கற டொனேசனுக்கு 80G வரி விலக்கு வேற கெடைக்கும்போது.

<This is a fact. Real devotees are much more powerful than God.>
அடி. போட்டீங்களே பாஸ் ஒரே போடா. இனி எந்த கொரங்கால பாஸ் எந்திரிக்க முடியும்.

ஆமா டிஸ்கசன் ஆரம்பத்துல அவேர்னஸ்னு ஒரு லட்சுமணன் கேரெக்டரை இன்ட்ரட்யூஸ் பண்ணிட்டு அதை அப்பிடியே அம்போனு விட்டுட்டீங்களே பாஸ். அவேர்னஸ்ஸை எங்கிட்டோ அடகுவெச்சி அது முளுகியும் போனதாலதான் இந்தக் குரங்குங்களே இங்க வந்துருக்குங்கறீங்களா அதுவும் சரிதான் பாஸ்

ஆனா பாஸ் இதே மேட்டரை மாம்பலம் அயோத்தியா மண்டபத்துல கன்னத்துல போட்டுகிட்டுக் கதையா சொல்றவனுக்கு அஞ்சும் பத்தும் கெடைக்கிறதே பெரிய விசயமா இருக்குது பாஸ்.

ஆனா சும்மா சொல்லக்கூடாது செம லக்கு பாஸ் உங்குளுக்கு. அதனாலதான் இந்த ரீலையெல்லாம் இங்கிலீசுல பெங்களூர்ல சுத்தரீங்க. நீங்க கண்டி பெரியார் பொறந்த மண்ல மொளச்சிருந்தீங்கனா, உங்களைப் பின்னிப் பெடலெடுத்துருப்பாரு உங்களமேரியே டிரஸ்டு பிஸினஸ் நடத்துற எங்க மானமிகு வீரமணி சார்