ஊர் உலகமெல்லாம் சுற்றி எவிடென்ஸ் திரட்டுகிறவர் மாலனின் தவறான பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பல அடுக்கு தீசீஸே எழுதிவிட்டார் :)))
//புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் மாலன்.அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு.ஆனால் அவரது எழுத்தின் மீதும் நிர்வாக திறமையின் மீதும் நிறைய விமர்சனம் உண்டு.குறிப்பாக தலித்துகள் மீது நடக்கும் வன்கொடுமைக்கு எதிராக அவரும் சரி..அவரது பத்திரிகையும் சரி..எழுதியது இல்லை.அவர் ஒரு புத்திசாலி.தமிழ் என்கிற அடையாளத்தை முன்னிறுத்தி சாதி கொடுமை குறித்து வெளியே தெரியாமல் செய்து விடுகிற தந்திரத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.சாதி கொடுமைக்கு எதிராக கொஞ்சம் கூட சீற்றம் கொள்ளமாட்டார்.பிராமணர்கள் மூன்று பிரிவுகளாக இருகின்றனர்.ஒன்று..தீவிர பிராமண ஆதரவு கொண்டவர்கள் .இரண்டு பிராமணியத்தை எதிர்ப்பது போன்று எதிர்த்து, இடைநிலை சாதியினருக்கு ஆதரவாக இருபவர்கள் .மூன்று தலித்துகளுக்கு ஆதரவாக இருபவர்கள் .முதல் மற்றும் மூன்றாம் நிலை பிராமணர்களை கடுமையாக இடைநிலை சாதியினர் எதிர்ப்பு காட்டுவார்கள்.முதல் வகை சோ.இரண்டாம் வகை மாலன். மூன்றாம் வகை இந்து ராம்.இந்த இரண்டாம் நிலை பிராமணர்கள் மிகவும் தந்திரகாரர்கள்.இங்கு உள்ள பெரும்பான்மை ஆதரவினை தக்கவைக்க அவர்களுக்கு பிடிக்காத தலித்துகள் கண்டு கொள்ளமாட்டார்கள்.தமிழகமே கொந்தளிகிறது எப்படி மாலன் சார்..உங்களால் அமைதியாக இருக்க முடிகிறது.//
https://www.facebook.com/kathir.vincentraj/posts/709399729189755
நரசிம்மன் என்றால் ஐயங்காராய்தான் இருக்கவேண்டும் என்று அடித்து விட்ட வீரமணியின் வழித்தடத்தில் நாராயணன் என்று இருப்பதால் மாலன் பிராமணராய்தான் இருக்கவேண்டும் என்று எவிடன்ஸ் கதிர் உட்பட பலர் நினைப்பது பேஸ்புக் தவிர்த்த யதார்த்த சமூகத்தின் மேல் படிநிலைகளில் சாதகமானது என்பதால் இயல்பிலேயே அமைதியான மாலன், பிராமணன் என்று தவறாய் கருதுபவர்கள் கருதிக்கொண்டு போகட்டுமே என அநாதிகாலமாய் அமைதி காத்துவிடுவார்.
விக்ரமாதித்யன் என்கிற நம்பிராஜன் சரக்கடி உச்சத்தில் ஆங்கிலம் பேசுவார். அதுபோன்ற ஒரு தேவ கணத்தில் 'புதுமைப்பித்தன் ஈஸ் மோர் தேன் பிராமின்' என்றார்.
பொதுவாகவே அமைதியின் சொரூபமான திருநெல்வேலி சைவ பிள்ளைமார்களுக்கு, தாம் பிராமனர்களைவிட ஒஸ்தி என்கிற உள்ளார்ந்த கர்வம் உண்டு.
எவ்வளவு குடி போதையிலும் நம்பிராஜனின் இலையில் ஆம்லேட்டை வைத்துவிட்டால். 'தம்பி என்ன இது எடுங்க எடுங்க' என்று பதறி விடுவார்.
ஏன்யா நீரு கண்டதையும் குடிச்சிட்டு கண்ட எடத்துக்கும் போறீரு ஆனா முட்டையில மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக்கும் என்று நம்பியை வண்ணநிலவன் ஒருமுறை கிண்டலடித்தார்.
இதையெல்லாம் வைத்து புதுமைப்பித்தனிலிருந்து எல்லா பிள்ளையும் ஜாதி வெறியன் என்கிற முடிவுக்கு வருவதும் தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும் சரியன்று எனக் கண்டிப்பாய் கூறலாம்.
பிள்ளைமாரைக் கண்டுபிடிக்க, கைபேசியில் சாரு சொன்ன எளிய டெக்னிக், நைட் பன்னெண்டு மணியானாலும் ரெண்டு மூனு இலக்கியவாதி ஒன்னா வந்தான்னா, அதுல ஒருத்தன் ஊரறிஞ்ச பிள்ளையா இருந்தா கண்டிப்பா மத்தவன்களும் அதேதான்.
வெள்ளையா இருக்கிறவன்லாம் பிராமணன் என்பதும் அபத்தம்.
நம்பள மாதிரி நார்த்தாற்காட் பிராமணனையெல்லாம் ஆத்துக்காரியை வெச்சுதான் பிராமணன்னு தெரிஞ்சிக்கனும் என்று அலுவலக நண்பர் ஶ்ரீராம் சுய எள்ளலுடன் சொல்லுவார்.
கையில் கிடைக்கும் எதை வேண்டுமானாலும் வைத்து பிராமணர்களை அடிக்கலாம், நமக்கெதுக்கு வம்பு என ஒருத்தனும் வாயைத் திறக்கபோவதில்லை. அதும் ஒரு தலித் அடிக்கிறார் என்றாலோ தலித் பற்றிய விவாதம் என்றாலோ, வாயை மட்டுமா வாசக்கதவையும் சாத்திண்டு பேசாம உள்ளே கிட என்பதுதான் பிராமணர்களின் பாலிசி.
கறி சாப்பிடுவதை எதிர்க்கும் உரிமை, பிறப்பால் கறி தின்னும் சூழலில் பிறந்து, கொள்கையால் கறி உண்பதைத் தவிர்த்தவனுக்கு மட்டுமே உண்டு என பேஸ்புக்கில் ஒருவரிடம் மல்லுகட்டிக்கொண்டிருந்தேன். அப்படி என்றால் புலால் உண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவனை மறுக்கிறீர்களா என்றபடு வந்து மடக்கினார் மாலன். வள்ளுவனின் புலால் உண்ணாமை, அவரது சமணப் பின்னணியிலிருந்து வருவதால் அதைப் பெரிதாய் பொருட்படுத்த மாட்டேன் எனக் கூறியதோடு, சம்மனில்லாமல் ஆஜராகி, சைவப் பிள்ளைமார் இதைச் சொல்வதில் வியப்பென்ன என்கிற பொருளில் நக்கலடித்ததிலிருந்துதான் மாலனோடு ஷண்டை.
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்ஸ் ஆர் வெறி வெறி சென்ஸிடிவ் தேன் பிராமின்ஸ் யு நோ.
தக்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சத்தால் அறியப் படும்
அறியப்படவேண்டும் ஜாதியாலன்று.