22 August 2015

ஒரு நாள்

நேற்றிரவு 2 மணியளவில் தூக்கம் போய்விட்டது. காலை 6.20க்குதான் தூங்கப்போனேன். 9.04க்கு நன்றாக இருக்கிறது என்று அலுவலகத் தோழரிடமிருந்து வந்த வாழ்த்து SMSல் விழிப்பு வந்தது. கண்ணாடி அணிந்து கைபேசியைப் பார்த்தால் காலை 7.39க்கே முதல் வாழ்த்தை அனுப்பியிருந்தார். 

20 August 2015

எடிட்டர் சுஜாதா என் கதையை எடிட் பண்ண முயற்சித்த கதை

1989ல் நிழல் கதையை எழுதி நீளமாகப் போய்விட்ட அதைப் பிரசுரிக்கச் சிறு பத்திரிகை எதுவுமின்றிச் சும்மா கிடந்தது. 90-91ல் சுந்தர ராமசாமி காலச்சுவடு சிறப்பிதழ் கொண்டுவருவதாகக் கூறிக் கதை கேட்டார். அதை அனுப்பி வைத்தேன்.

11 August 2015

படம்

அலுவல் ரீதியாக, முக்கியமான அந்த அரசு அலுவலகத்துக்குச் செல்லவேண்டி இருந்தது. அடையாள அட்டையைக் காட்டினாலும் அவ்வளவு சுலபத்தில் அனுமதி கிடைக்காத அலுவலகம். சந்திக்கவிருக்கும் அதிகாரியிடம் அடையாள அட்டை கொண்டுசெல்லப்பட்டு, அவர் ஒப்பிய பின்னரே அனுமதிக்கப்படும் அளவுக்குக் கெடுபிடி நிறைந்த அலுவலகம். கெடுபிடிகளுக்குக் காரணம், பிரமுகர்களின் சிபாரிசுத் தொல்லையாகவும் இருக்கலாம் அல்லது சில்லுண்டிகளால் உருவாகும் ஏஜென்சி பயமாகவும் இருக்கலாம். 

07 August 2015

சுடர்

பூக்கடை அருகில் வண்டியை விட இடம் கிடைக்க ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாய் அமைந்திருக்க வேண்டும். அடுத்த ஜென்மத்தில்கூட அதற்கான வாய்ப்பு அபூர்வம் என்பதால் எப்போதுமே எனக்கு இடம் கிடைக்காது. போதாக்குறைக்குக் கண் எதிரிலேயே,  பைக்குகள் வேன் சவாரிக்கு முரட்டுத் தனமாய் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. தண்டம் செலுத்தி மீட்கபட்டாலும் பைக்குளின் கழுத்துச் சுளுக்கெடுக்க மெக்கானிக்கைத் தேட வேண்டி இருக்கும். கருக்கத் தொடங்கியிருந்த அந்த மாலையில் கண்ணுக்கெட்டிய நூறடி தூரத்தில் பஞ்சர் கடைகூடத் தட்டுப்படவில்லை. திடீரெனத் தோன்றிற்று, அரசு வேலையாய் வந்திருக்கையில் அரசுக் கட்டிடத்தில் வண்டியை விடுவதில் அப்படி என்ன தவறு இருக்கமுடியும் என்று. பொய் சொல்லப்போவதில்லை - எப்படியும் அதை, போகிற இடத்தில் மூட்டை மூட்டையாய் அவிழ்த்து விடுவதுதான் வேலையே, எனவே இங்கே உண்மையைச் சொல்லி இடம் கேட்டால் என்ன. 

02 August 2015

கருப்பர் நகரத்தில் பாப் மார்லி


கடுமையான வெயிலில் மதிய நேரத்துப் பசியும் டெபிட் கார்டு வசதி இல்லை என்று அந்த சிறு உணவகத்தில் சொல்லப்பட்டதும் குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் தேடி அலைந்த எரிச்சலும் சேர்ந்து நெடுந்தூரம் பைக்கில் பயணப்பட்டு அலுவலாய் வந்தவனிடம் கடுப்பேற்றிக்கொண்டு இருந்தன, கருப்பர் நகரத்தின் ஏதோவொரு ஏடிஎம்மின் குறு வரிசையில் காத்திருந்தேன். எதிரில் ஷார்ட்ஸ் அணிந்த டி சர்ட்டில் தெரிந்த பாப் மார்லி வறண்டிருந்த மனதில் சுவாரசியத்தை உண்டாக்கினார். 

01 August 2015

செய்தி

சென்னையின் பகட்டு ஏரியாக்களில் பெரிய பெரிய அரசியல் கட்சிகள் அஞ்சலி பேனர் வைப்பது பெரிய விசயமில்லை. கருப்பர் நகரத்தில் சின்னச்சின்ன தலித் கட்சிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தின் நற்பணி மன்றங்கள் சர்ச்சுகள் இந்துக் கோவில்கள் தம் கைக்காசை போட்டு நம்மில் ஒருவர் என அப்துல் கலாமுக்கு வைத்திருக்கும் அஞ்சலித் தட்டிகள் என்ன சொல்கின்றன என்பது அறிவுஜீவி கொசு மூளை அலசல்களுக்கு அவ்வளவு சுலபத்தில் எட்டக்கூடியதன்று.