01 August 2015

செய்தி

சென்னையின் பகட்டு ஏரியாக்களில் பெரிய பெரிய அரசியல் கட்சிகள் அஞ்சலி பேனர் வைப்பது பெரிய விசயமில்லை. கருப்பர் நகரத்தில் சின்னச்சின்ன தலித் கட்சிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தின் நற்பணி மன்றங்கள் சர்ச்சுகள் இந்துக் கோவில்கள் தம் கைக்காசை போட்டு நம்மில் ஒருவர் என அப்துல் கலாமுக்கு வைத்திருக்கும் அஞ்சலித் தட்டிகள் என்ன சொல்கின்றன என்பது அறிவுஜீவி கொசு மூளை அலசல்களுக்கு அவ்வளவு சுலபத்தில் எட்டக்கூடியதன்று.

பிரியாணி பொட்டலத்துக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்காகவும் ஓட்டுப் போடுபவர்களாய் நாம் எண்ணும் இந்த எளிய மக்களுக்கு அப்படி என்ன கொடுத்துவிட்டார் அப்துல் கலாம்.

எனக்கும் கலாம் பற்றிப் பெரிய கருத்து இல்லைதான். ஆனால், நான் போனால் என் பெண்டாடடியத் தவிர யாருமில்லை வருத்தப்பட என்கிற யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.

கிடைக்கும் வாய்ப்புக் கேப்புகளில் அறிவுஜீவியாகத் துடிக்கும் இணையக் கொசுக்களே ஆற அமர சிந்தித்து அலசுவீர்.

என்று எழுதியிருந்தேன் அதற்கு எதிர்வினையாய்:

MGRக்கு ராஜீவுக்குலாம் கூடதான் தன்னெழுச்சியா தட்டி வெச்சாங்க கலாமுக்கு வெச்சது என்ன பெரிய விசயம் என்று கேள்வியெழுப்பி, தாங்கள் கொசுமூளைகளே என்பதை உறுதிப்படுத்தியோருக்கு நன்றியுடன்:

MGR தமிழனின் நினைவிலி மனத்தில் பற்பல ஆண்டுகளாய் தோய்ந்திருந்தவர். முதல்வராய் இருக்கையில் மரணத்தை எட்டிப் பார்த்து மறு ஜென்மம் எடுத்து மீண்டவர். பேசக்கூட முடியாமல் இருந்து இறந்தவர். ஒளிர்ந்த நட்சத்திரமும் அரசு அலுவல் அறைகளுக்கு உள்ளேயே வாழ்ந்த அறிவியலாளர் எர்படுத்தும் தாக்கமும் ஒப்பிடக்கூடியதா.

இந்திராவை அறவே பிடிக்காதவர்களையும் உலுக்கிய படுகொலையால் பொதுவெளிக்கு வந்தவர் ராஜீவ் காந்தி. அவரும் அவரது தாயைப் போன்ற கொடூர முடிவையே அடைந்தார் அதுவும் நம் மண்ணில் நம் இனத்தவர்களால் என்பதால் உண்டான குற்ற உணர்விலிருந்து இந்தியத் தமிழ்ப் பெரும்பான்மை இன்றுவரை மீளவில்லை என்பதைத்தானே யதார்த்தம் நிருபித்துக்கொண்டு இருக்கிறது - நீங்களெல்லாம் சேர்ந்து எவ்வளவுதான் காட்டுக் கத்தல் கத்தினாலும்.

இவர்களைப் போன்றவரா அப்துல் கலாம். முதல் குடிமகன் ஆவதற்குமுன் கருப்பர் நகரமாம் வட சென்னையின் எளிய மக்களுக்கு, இவரது முகம்கூடத் தெரிந்திருக்க வாய்ப்புண்டா.

கலாமைப் போலவே அவரது மரணமும் எவ்வித அசாதரணமுமற்ற, முதுமையால் விளைந்த இயல்பான ஒன்றல்லவா. இருந்தும் எப்படி அவரைத் தம்மில் ஒருவராய் அடையாளப்படுத்திக் கொண்டனர், நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாய் திராவிடக் கட்சிகளுக்கே ஓட்டளிக்கும் இந்த எளிய மக்கள். குழந்தை குட்டி குடும்பம் வாரிசு கீப்புச் செட்டப்பு அதனுடைய வாரிசு என்பதை எல்லாம் தலைவர்களிடம் சகஜமாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்ட சமூகம், இப்படியெல்லாம் ஏதுமற்ற ஒண்டிக்கட்டையைத் தங்களின் குடும்பத்தில் ஒருவராய்ப் பார்ப்பது உங்கள் பார்வைக்குக் கட்டமைக்கப்பட்ட பிம்பமாகப் பட்டால் உங்கள் மூளை சாதாரணக் கொசுவுடையதன்று யானைக்கால் நோயால் பீடிக்கப்பட்ட கொசுவின் மூளையாகதான் இருக்கக்கூடும்.

ஆர் வெங்கடராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் ஐயர் என்று தம்மைச் சுலபமாய் அடையாளம் காணும்படி வட இந்தியத் தலைவர்களுக்குச் சங்கர மட டூர் ஆப்பரேட்டர் போல நடந்துகொண்டதால் கடைசி வரை அவர் காங்கிரஸ்காரராகவே பார்க்கப்பட்டார். கலாம் கட்சி சார்பற்றவர் என்பது மட்டுமின்றித் தீவிர இஸ்லாமியராய் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாததும் அவர் இழப்பை தம் இழப்பாய் எல்லோரும் பார்க்க இன்னொரு காரணம். இது கணக்குவழக்குடன் அரசியல்வாதிகள் போல ஆடிய நாடகம் அல்ல. ராமேஸ்வரத்தில் கோயிலுக்கும் மசூதிக்கும் செல்பவராய் அவர் இயல்பாகவே இப்படித்தான் எப்போதும் இருந்தவர். அவர் மட்டுமல்ல எங்கள் ஊரில் நாங்கள் மத ரீதியாய் வித்தியாசம் பார்ப்பதில்லை என்பதைப் பள்ளிவாசல் நூருல் ஹூதா கூறுகிறார். இப்போது என் தரப்புக்கு வலு சேர்க்க 2002ல் கலாம் குடியரசு தலைவராவதற்கு முன் அவரது பதவியேற்பைப் பார்க்க முதல் முறையாய் தில்லி வந்த முப்பத்து நால்வரில் ஒருவராய் வந்த இமாம் சொல்கிறார்.

The excited entourage has a composition befitting the ideals Kalam has followed. It is a display of communal harmony, a journey that the Rameswaram temple priest, Shastri, and imam of the local mosque, A C M Noor-ul-Huda, took together.

Both the holy men are praying for Kalam's successful Presidency. The priest has brought prasad for Kalam while the imam offered special namaaz.

"We do not differentiate on the basis of religion in Rameswaram. We live together happily. He (Kalam) would visit the temple and the mosque," said Noor-ul-Huda.

http://www.rediff.com/news/2002/jul/24spec1.htm

குடியரசுத் தலைவர் எனும் அவ்வளவு பெரிய அரசுப் பதவியில் அமர்ந்த எத்தனைபேர் எவ்வளவு அல்பமாக நடந்துகொண்டிருக்கின்றனர். அப்துல் கலாம் பற்றி அரசல் புரசலாகவேனும் ஏதும் கேள்விப்பட்டு இருக்கிறோமா. இவ்வளவு அதிகாரமும் வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் உங்களில் எத்தனைப்பேரால் எந்தவித கிசுகிசுப்புக் குற்றச்சாட்டுகளுக்கும்கூட ஆளாகமல் இருக்கமுடியும் என்று உறுதியாய் சொல்ல முடியும் நெஞ்சைத் தொட்டுக்கொள்ளுங்கள்.

சென்னையில் இருக்கும் கவர்னர் மாளிகையே இவ்வளவு பெரியது என்றால் தில்லியில் இருக்கும் குடியரசுத் தலைவரின் மாளிகை எவ்வளவு பெரிதாய் இருக்கக்கூடும். ஆனால் அங்கே தனிக் கட்டையாய் அல்லவா அவர் வாழ்ந்தார். அவரது அண்ணன் குடும்பம் அவரது பதவிக்காலத்தில் அங்கு வாழ்ந்து அனுபவித்து இருந்தால் யார் தவறாக எண்ணியிருக்கப் போகிறார்கள். கலாம் மட்டுமல்ல அவரது அண்ணனும்தான் எவ்வளவு பெரிய மனிதர்.

Although he is looking forward to seeing his brother in the presidential palace, the old man prefers the sea. "I will not stay at Rashtrapati Bhavan even if he asks me to and will leave on July 26

யாரோ ஒரு காவி சாமியார் கலாம் தலையில் கைவைத்து ஆசீர்வதிப்பதையும் அதை அப்துல் கலாம் கைகூப்பி ஏற்பதையும் படமாய்ப் போட்டு முஸ்லீம் முஸ்லீமாய் இல்லாததால்தான் இந்தியா அவரை ஏற்றது என்றோர் அற்பப் பிரச்சாரம். கொசுமூளை என்றால் வருத்தப்படும்/கோபப்படும் மூடர்காள் இதைப் பாரும்.

Next to him is P L V Shastri, an elderly priest from Rameswaram, who was the President-elect's classmate. Despite the long journey, Shastri shows no signs of fatigue.

"The journey was very comfortable. But I have been impatient all the way. I just wanted to reach here fast. It is our greatest moment," he declared.

He is carefully carrying a weed basket. "I have brought prasad for him. It is from the holy temple at Rameswaram. He used to come there frequently. It is my way of wishing him a glorious term as President," he said with a sparkle in his eyes.

கலாம் எனக்கும்கூடப் பெரிய விசயமாகப் படவில்லைதான். ஏனெனில், என்ன இருந்தாலும் நானும் உங்களைப் போன்ற ஒரு கொசுதானே. ஆனால் எளியோர்க்கு அவர் இழப்பு ஏன் இவ்வளவு பெரிதாய்ப் படுகிறது என்பது எனக்குப் பெரிய விசயம் என்றே படுகிறது. கொள்கையின்பாற்பட்ட கொசுமூளைச் சாய்வுகளற்று இதைப் புரிந்துகொள்ள முயல்வது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.

சீழ் பிடித்த மூளையுடன் வாழ்வதே சீரும் சிறப்பும் என்று நினைப்போர் கலாமை மட்டுமல்ல என்னையும் RSS என்று திட்டத் தொடங்கலாம்.

என் வாழ்வே என் செய்தி என்பது காந்திக்கும் கலாமுக்கும் மட்டுமல்ல எனக்கும் உங்களுக்கும் கூடத்தான் என்பதை ஒருபோதும் மறவாதீர்.