க்ரியால ஷோபா சக்தியோட புக்கு போட ராமகிருஷ்ணன் ஆசைப்படறார் போல இருக்கே
ஷோபா சக்தி ஆசைப்படறாப்பல தோணலியே
சுந்தர ராமசாமி புக்கு போட்டவர்ங்கறதால ஷோபா ஆசைப்படமாட்டார்னு தோணுதா. பூமணி புஸ்தகம் கூடதான் போட்டிருக்கு க்ரியா
சுந்தர ராமசாமி போலவே பூமணியும் க்ரியால பங்குதாரரா இருந்தார்னு பராபரியா ஒரு பேச்சு இருந்துது ஒரு காலத்துல
ஆதாரபூர்வ செய்திதானா
இதுக்குலாம் RTI போட்டா பேச முடியும். புக்கு வெளியாவறதை வெச்சி நாமளா புரிஞ்சிக்க வேண்டியதுதான்
இதுக்கும் ஷோபா சக்திக்கும் என்ன சம்மந்தம்
இல்லை ஷோபாவுக்கு ஷேர்லயெல்லாம் நம்பிக்கை உண்டானு தெரியலியே
கருப்புப் பிரதியின் பங்குத் தந்தையே அவர்தானே
வேற யாரும் வேணாம்னுதான தானே தொழில் முனைவோரா ஆயிட்டாரு
அப்ப வெளி கம்பெனிக்கு குடுக்கமாட்டாருங்கறே
ஆனா இண்ட்டர் நேஷனலா தெரிஞ்ச ஃபிகரா ஆயிட்ட ஒருத்தரை க்ரியா மாதிரி ஒரு இண்ட்டர் நேஷனல் நிறுவனம் அவ்வளவு சுலபத்துல விட்டுற முடியுமா
அப்ப பெங்குயின்ல புக்கு வந்து ஃபிரெஞ்சு படத்துல நடிக்கவேற செய்யனுமா க்ரியால புக்கு வர
அப்பிடின்னு இல்லேனுதான் சொல்லுவாய்ங்க ஆனா நடைமுறைல அப்படிதான். இல்லாட்டா இன்னோன்னும் செய்யலாம்.
என்ன
பேசாம ஒரு நோபல் பரிசு வாங்கிட்டா போதும் டக்குனு புக்கு போட்டுருவாய்ங்க.