மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
//மூன்றாவதாக, ஹவாலா. இந்தியாவின் மிகப்பெரும் செல்வம் மானுட உழைப்பு. முதன்மையாக நாம் ஏற்றுமதிசெய்வதே கைகளையும் மூளையையும்தான். அந்தப்பணம் எங்கும் பதிவாகாமல் வரிகட்டப்படாமல் இங்கே வரும்போது நம் பொருளியல் பெரும் இழப்பை சந்திக்கிறது.//
அடக் கொடுமையே இதுவா ஹவாலா.
எடுத்துக் காட்டாக, வரி ஏய்ப்பு மோசடிப் பேர்வழி, இறக்குமதியில் சுங்க வரியை குறைத்துக் கட்டுவதற்காக, கொள்முதல் செய்யப்பட்ட பொருளின் ‘விலை’யைக் குறைத்துக் காட்டுகிறார் என வைத்துக் கொள்வோம். அதற்கான போலி இன்வாய்ஸும் அங்கிருந்தோ அல்லது இங்கேயோ தயாரித்துதான் சுங்கத் துறைக்கு கொடுத்தாக வேண்டும். அந்தப் போலி இன்வாய்ஸில் குறைத்துக் காட்டப் பட்டிருக்கும் பொய்யான விலைக்குரிய பணம், பெரும்பாலும் தனியார் வங்கி மார்க்கமாக வெளிநாட்டு விற்பனையாளரையும் சென்றடைந்து விடும். ஆனால் அசல் இன்வாய்ஸின்படியான விலைக்கான மீதிப் பணத்தை, வெளிநாட்டில் இருக்கும் பொருளை விற்ற நிறுவனத்துக்கு எவர் மூலம் எப்படிக் கொடுப்பது. இங்கேதான் வருகிறது ஹவாலா. வெளிநாட்டில் உள்ளவருக்கு உரிய பணத்தை இங்கே ஒருவரிடம் கொடுத்துவிட்டால், அங்கே இருக்கும் ‘இவருடைய’ இன்னொருவர், கமிஷன் அடிப்படையில் அவருக்கு செட்டில் செய்து விடுவார். இது போல, வங்கிக்குள் வர முடியாத சட்டத்துக்குப் புறம்பான வரி ஏய்ப்பு முதலாக பயங்கரவாதம் வரையிலான பற்பல மோசடிக் காரியங்களால் உருவாகும் கணக்குவழக்கே இல்லாத கோடிகள் ஹவாலா மூலம் அன்றாடம் அனுப்பப்பட்டுக் கொண்டும் பொருட்கள் முதல் ஆயுதங்கள் வரை கடத்தப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
https://en.wikipedia.org/wiki/Hawala
//Some government officials assert that hawala can be used to facilitate money laundering, avoid taxation, and move wealth anonymously.[citation needed] As a result, it is illegal in some U.S. states, India, Pakistan,[11] and some other countries.[citation needed]//
அடக் கொடுமையே உளறலுக்கு ஒரு அளவு வேண்டாமா
//உண்மையில் இன்று தொழிலதிபர்களே ஜிஎஸ்டியை ஆதரிக்கிறார்கள். அவர்கள் வளர்த்துவிட்ட பூதம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். ஆனால் இன்று அவர்கள் வரிகட்டுவதைவிட பலமடங்கு பணத்தை இவர்களுக்குக் கப்பமாகக் கட்டநேர்கிறது. ஜிஎஸ்டி வந்து அரசுவரிவிதிப்பு முறை இயல்பாகவே நடக்குமென்றால் அவர்களுக்கு உண்மையில் லாபம்தான். இழப்பு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான்//
//வரிகட்டுவதைவிட பலமடங்கு பணத்தை இவர்களுக்குக் கப்பமாகக் கட்டநேர்கிறது//
யம்மாடியோவ் இவ்வளவு லஞ்சம் கொடுக்க நேர்ந்தால், பாட்டன் முப்பாட்டன் சொத்தை எழுதிக் கொடுக்கிற அளவுக்கு தொழில்ல நட்டமில்ல வரும். எவன் தொழில் நடத்துவான். ஜெயமோகனுக்குப் புரியும்படியாகச் சொல்வதென்றால், எழுத்தாளன்கிட்ட, படத்துக்கு வசனமும் எழுதிக் குடுத்து ஃபைனான்ஸும் பண்ணுடான்னு சொல்றா மாதிரியில்ல இருக்கு,
ஜெயமோகனின் தற்புகழ்ச்சி இலச்சினை
//சென்ற இரண்டாண்டுகளாக மிக முக்கியமான தொழிலதிபர்கள் பலர் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்னிடம். நான்கு வெவ்வேறு பொருளியல்நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன்.//