எழுதிக்கிட்டு இருக்கியா
எழுதிக்கிட்டுதான் இருக்கேன்
எங்கே என் கண்ல எதுவும் படலியே
அதுக்கு நான் என்ன பண்ண
ஃபேஸ்புக்ல எழுதறதை சொல்லாதே அதெல்லாம் இலக்கியமில்லை.
ஹிஹிஹி இல்லை. 2015லேந்து இதுவரை எழுதியிருக்கிற 9 கதைகளும் என் பிளாக்லையே இருக்கே
பிளாகா. பிளாகெல்லாம் பாக்கறதில்லை.
எல்லாமே பத்திரிகைகள்ல வெளியானவைதானே
அப்படியா. எந்த பத்திரிகைல வந்தது
விகடன்லேந்து காலச்சுவடு வரை உயிர்மை உட்பட எல்லாத்துலையும் வெளிவந்துருக்கே
அப்படியா. எப்படி எதுவுமே என் கண்ல படாம போச்சு
...
அதுல இருக்கிறதுல தவிப்பு கதை மட்டும் எந்த பத்திரிகைலையும் வராதது. விகடன்ல நாலு மாசம் காலச்சுவடுல ஒரு மாசம் உயிர்மைல ஒரு மாசம்னு இருந்துட்டு யாருமே போடாம திருப்பிக் குடுத்தது
எதைப் பத்தின கதை
தீவிரவாதம் பத்தினது. முஸ்லீம் பையன் ஒருத்தனை விசாரணை பன்றதைப் பத்தின கதை. விசாரணை அதிகாரியின் பார்வைக் கோணத்துலேந்து எழுதப்பட்ட கதை. இந்த மாதிரி பாய்ண்ட்டாஃப் வியூலேந்து இதுக்கு முன்ன வந்திருக்கா. முஸ்லீம்னாலே ஏன் பயப்படறாங்க
அதான் சொல்ல வந்தேன். நம்ம ஊர்ல முஸ்லீம் தலித் பெண்கள் இந்த மூணு பேரையும் பத்தி எதிர்மறையா எழுதவே முடியாது. இதைக் கூட தனிப்பேச்சுல மட்டும்தான் சொல்லவே முடியும். இதை எந்த மீட்டிங்குலையும் பேசவோ எந்தப் பத்திரிகைலையும் எழுதவோ முடியாது.