14 January 2017

அடத் தேவாங்கே

யாரோ பிச்சைக்காரன் திரித்துச் சொன்னதை, துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக யாரோ மெய்ல் தட்டினால் அதற்கு, வங்கிப் பெண்மணி வீடியோ போல ஆப் பாயிலாகக் கொதித்து இன்னொரு ’தேவாங்குக் குதி’ குதித்திருக்கிறார் ஜெயமோகன். 



இது இவ்வளவு தாமதமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது. என்ன செய்வது இணையத்தில் வண்ணநிலவன் போன்ற கலைஞனுக்கு இவ்வளவுதான் முக்கியத்துவம். இப்படியோர் அயோக்கியத்தனத்தை ஜெயமோகன் செய்திருப்பது சிறு முனகலைத்தான் உருவாக்கியிருக்கிறது ஃபேஸ்புக்கில்.

யாரோ அனுப்பிய வீடியோவைப் பார்த்துவிட்டு, தேவாங்கு என எழுதி, வங்கிப் பெண்மணிக்கு அறம்வளர்த்தான் ஜெயமோகன் இழைத்த அநீதியை இணையமே ஒன்று திரண்டு காறித் துப்பியதால் மன்னிப்பு கேட்டு பதிவையும் நீக்கப்பட்டது. 

இப்போது, வண்ணநிலவன் சொல்லாததை சொல்லியதாக எண்ணிக்கொண்டு, வண்ணநிலவன் பொருமல் என எடுத்து வைத்த வாந்தியின் தவறை, வாசகர்கள் சுட்டிக் காட்டிய பின்பும் நியாயப்படுத்த, இருபதைந்து ஆண்டுகளுக்கு முன்பே தான் ‘விமர்சனக் குறிப்பு’ எழுதியிருப்பதாகச் சொல்கிற நேர்மையாளர் அதைத் தேடியெடுத்து வெளியிட வேண்டியதுதானே. 


//வண்ணநிலவன் கதைகள் சுந்தர ராமசாமி உட்பட பிராமணர்களால் சில குறிப்பிட்ட பிராமணக் கதாபாத்திரச் சித்தரிப்பு காரணமாக கொண்டாடப்பட்டவை//

வண்ணநிலவன் எத்தனை பிராமண கதாபாத்திரங்களை விதந்தோதி எழுதியிருக்கிறார் அதற்காகத்தான் சுந்தர ராமசாமி உட்பட அத்தனை பிராமண எழுத்தாளர்களும் அவர்களைப் பாராட்டினார்கள் என்கிற, மானமிகு வீரமணி டைப் ஜெயமோகக் கண்டுபிடிப்பு வாசகனுக்கும் தெரியவரட்டுமே. 

சாரதா என்கிற ஒரு பிராமணப் பெண்ணைப் பற்றி எழுதியிருப்பதைத்தவிர, ஜெயமோகன் கட்டுரை எழுதிய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல இன்றுவரை வண்ணநிலவன் எவ்வளவு கதைகளை பிராமணக் கதாபாத்திரங்களை சித்தரித்திருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் முன் வைப்பதுதான் நேர்மை. 


அடுத்து என்ன, 

தான் பிராமணன் இல்லை நாயர் என்பதால்தான் பிராமணரான சுந்தர ராமசாமி விஷ்ணுபுரத்தைப் பாராட்டைவில்லை. 

தான் பிராமணன் இல்லை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மலையாளத்தான் என்பதால்தான், தமிழ் பிள்ளைமாரான ஜெயகாந்தன், ”வாழ்வைச் சித்தரிப்பதல்ல இந்நாவல். அதன் அடிப்படைகளை ஆராய்வது. அத்தகைய தேடல் கொண்டவர்களே இதன் வாசகர்கள். நாவலில் இருந்து மேலும் விரிவடையக் கூடிய திறன் கொண்டவர்கள் அவர்கள். நாவலை தங்களை நோக்கி சுருக்கிக் கொள்ளும் வாசகர்களை நோக்கி இது தன் வாசல்களை  மூடிக்கொள்ளும்.”  என்கிற தன் முன்னுரையை வைத்தே தன்னை, மேடையிலேயே அவமானப்படுத்திவிட்டார் என்றெல்லாம்கூட சொல்லலாமே.

யாரோ சொன்னதை வைத்து அரைகுறையாய்ப் புரிந்துகொண்டு வண்ணநிலவன் மீது, ஜாதியவாதியாய் எகிறிக் குதறுகிற இந்த நீசத்தனம்தான் எண்ணிறைந்த குருமார்கள் இந்த எச்சைக்கு இட்ட பிச்சை போலும்.

அடத் தேவாங்கே இவ்வளவுதானா உன் டக்கு