போதைப் பொருள் கடத்தல் தொடர்பான சில தகவல்களை விசாரிப்பதற்காக, சற்றுமுன் ஆங்கில இந்து பத்திரிகையிலிருந்து நிருபரொருவர் தொடர்புகொண்டார். பேசி முடித்தபின்,
எப்படி இருக்கிறார் அந்த ஊபர் டிரைவர்
ஊபரா
சாரி ஓலா டிரைவர்
நல்லா இருக்காரே. காருக்கு எட்டு ஒன்பது மாச டியூ கூட கட்டிட்டாரே
நல்ல காரியம் சார் நீங்க செஞ்சது
நான் என்ன செஞ்சேன் எல்லாரும் செஞ்சாங்க இந்துல மட்டும் அது வராம இருந்திருந்தா அந்தப் பாவம் அரெஸ்டே ஆகியிருக்காது
அந்த சமயத்துல நான் லீவுல இருந்தேன். எனக்கு விஷயமே தெரியாது. வந்து விசாரிச்சப் பிறகுதான் தெரிஞ்சிது
அந்த ரிப்போர்ட்டரும் புதுசு போல இருக்கு. ஸ்வாதி மர்டர் நடந்து முடிஞ்ச சமயத்துல, நெட்ல ஈசியா கிடைச்சிருக்கிற டைமிங்கான மேட்டர் போயிடுமேங்கற டென்ஷனோ என்னவோ தடதடனு ஒரு சைடாவே எழுதிப் போட்டுட்டாங்க.
அதுக்கு அப்பறம் JCயை மீட் பண்ணினப்ப இதையேதான் சார் சொன்னாரு
என்னன்னு
இந்து அப்படி பண்ணியிருக்க கூடாது. அதர் சைடையும் கேட்டு போட்டிருக்கணும்னு
பாருங்க அவரே அப்படி ஃபீல் பண்றாரு. அப்படிப் போட்டிருந்தா அரெஸ்ட் பண்ணியே ஆகணும்ங்கிற பிரஷர் அவருக்கு இருந்திருக்காது. அதைத்தான் அவர் வெளிப்படையா சொல்ல முடியாம அப்படி சொல்லி இருக்காரு. கூலி குடுக்காத வெறும் வாய்த் தகறாருக்காகல்லாம் அரெஸ்ட்டாங்க அக்கிரமம்
அவனை அரெஸ்ட் பண்ணினதுல யாருக்குமே விருப்பமில்லே
பாருங்க இதைச் சொன்னா நம்பளை புளுகன்ங்குது ஒரு ஆப் பாயில் கும்பல்
அரெஸ்ட் பண்ணின இன்ஸ்பெக்டருக்கே விருப்பமில்லே
ஏன் ரிமாண்ட் பண்ணின கோர்ட்லையே என்ன நடந்ததுனு அந்தப் பையனே இண்ட்டர்வியூல சொல்லியிருக்கானே
வெளியிடமுடியாத இன்னும் பல விஷயங்களைப் பேசி முடிந்தது அந்தக் கைபேசி உரையாடல்
உண்மை இப்படியிருக்கிறது.
இந்த லட்சணத்தில், கடத்தி வந்தான் என்று உன் டிபார்ட்மெண்ட் சொல்வதை மட்டும் நம்பிதானே செய்தியை வெளியிடுகிறது மீடியா. அவர்கள் என்ன, கடத்திவந்தான் எனக் குற்றம் சாட்டப்படவரைத் தொடர்புகொண்டு, அவன் தரப்பையும் கேட்டு அதன் பிறகா செய்தி வெளியிடுகிறார்கள் என்று நொணநாட்டியம் ஆடுகின்றன பேஸ்புக் கொசுக்கள்.
இந்த எழவெல்லாம் ஒரு லா பாயிட்டா. இதில் பயங்கரக் காமெடி என்னவென்றால், என்னை மடக்கிவிட்டதாய் மேல்மாடியை ரெண்ட்டுக்கு விட்ட ஏழெட்டு வெட்டிகள் ஒன்றுக்கொன்று கெக்கெலி கொட்டிக் கொள்வதுதான்.
எந்தக் கிரிமினலும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேட்டால் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்ட பின்னரே எந்தத் துறையும் பிரஸ் நோட் கொடுக்கும். அப்புறம்தான் மீடியாவுக்கே அதிகார பூர்வமாய் தெரியவரும். எந்தத் துறையின் விசாரணையின் போதும் மீடியா அனுமதிக்கப்படுவதில்லை. இதுதான் யதார்த்தம்
1. ஜெயிலில் மனு போட்டு கடத்தல்காரரை சந்தித்து மீடியா பேட்டி எடுத்து வெளியிடவேண்டும் என்கிறார்கள் போலும். பேஸ்புக் சட்ட மேதைகளின் தர்க்கம் இருக்கிறதே ஒரு வார்த்தை ஒரு லட்சம் பெறும்.
2. உண்மையிலேயே அவன் தங்கத்தைக் கடத்தினானா இல்லையா என அவன் தரப்பைக் கேட்டறிய இங்கே மீடியா போகிறதா, அப்புறம் ஏன் ஓலா ஓட்டுனரின் தரப்பை மட்டும் மீடியா கேட்க வேண்டும் என்பது என்ன விதமான தர்க்க எழவு. உண்மையில் என்ன நடந்தது என்பது யருக்குமே தெரியாது, அதற்கான ஆதாரம் ஒரே ஒருவர் சொல்வது மட்டுமே. அதிலும் அவருக்கும் புறவயமான எந்த காயமும் இல்லை. அவரே கூட அவன் அதுவரைக்கும் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்ததற்கான காசைக் கொடு என்று மிரட்டினான் என்றுதான் கூறுகிறாரேயன்றி தாக்கினான் என்று கூறவில்லை. உழைத்ததற்கான சம்பளத்தை மாதக் கடைசியில் கொடுக்காவிட்டால் உங்கலில் எத்தனைப் பேர் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருப்பீர்கள் என்பதை உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். கூலி கொடுக்காமல் அவன் வயிற்றில் அடித்தால் அவன் கோபப்படுவது நியாயமா இல்லையா என்பதுதான் நான் அன்று கேட்ட கேள்வி. அவனோ தரக்குறைவாகவெல்லாம் பேசவே இல்லை என்று ஆடியோவில் சொல்கிறான். என் தரப்பு அவன் அப்படியே ரெண்டு வார்த்தை கையாலாகாத கோபத்தில் வயிறெறிந்து சொல்லியிருந்தாலும் அதிலென்ன தப்பு என்பது. அவனுக்கு 127 ரூபாய் உங்கள் சம்பளத்தைக் கொடுக்காது போனல், எதிரிலிருப்பவன் ஆண் என்றால் நீங்கள் சட்டையைப் பிடிப்பீர்களா இல்லையா. பெண்ணாகப் போனதனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னொரு பக்கம் கூலி கொடுக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டிருக்கையில், மறுதரப்பைக் கேட்க வேண்டியது இங்கே மீடியாவின் கடமை ஆகிறது.
பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட பிறகும் இந்துவின் இளம் நிருபர் வந்து சென்ற பின்னும் அவன் வெளியில்தானே இருக்கிறான். இந்து நிருபருக்கு அவன் நம்பரைப் பிடித்து அவனிடம் ஒரு வார்த்தை கேட்கவேண்டும் என்று தோன்றவில்லையே. இதுவே ஒரு தொழிலதிபரின் மகனாக இருந்தால், இவ்வளவு அவகாசமும் இருந்தால், அவர் தரப்பைக் கேட்காமல் பொட்டிருப்பீர்களா என்று கண்ணை நேருக்கு நேராய் சந்தித்துக் கேட்ட கேள்விதான் இந்துவைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்தது. இணையத்தில் இவ்வளவு வெளிப்படையாய் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி வேறு யார் கண்னிலும் பட்டு அவர்கள் வெளியிடும் முன் நாம் வெளியிட்டுவிட வேண்டும் என்கிற பரபரப்பு வெறியில் வெளியிட்ட செய்தி ஒருவனின் வாழ்க்கையில் எப்படி விளையாடிவிட்டது.
பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட பிறகும் இந்துவின் இளம் நிருபர் வந்து சென்ற பின்னும் அவன் வெளியில்தானே இருக்கிறான். இந்து நிருபருக்கு அவன் நம்பரைப் பிடித்து அவனிடம் ஒரு வார்த்தை கேட்கவேண்டும் என்று தோன்றவில்லையே. இதுவே ஒரு தொழிலதிபரின் மகனாக இருந்தால், இவ்வளவு அவகாசமும் இருந்தால், அவர் தரப்பைக் கேட்காமல் பொட்டிருப்பீர்களா என்று கண்ணை நேருக்கு நேராய் சந்தித்துக் கேட்ட கேள்விதான் இந்துவைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்தது. இணையத்தில் இவ்வளவு வெளிப்படையாய் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி வேறு யார் கண்னிலும் பட்டு அவர்கள் வெளியிடும் முன் நாம் வெளியிட்டுவிட வேண்டும் என்கிற பரபரப்பு வெறியில் வெளியிட்ட செய்தி ஒருவனின் வாழ்க்கையில் எப்படி விளையாடிவிட்டது.
இதை இந்து பத்திரிகையின் ரெஸிடெண்ட் எடிட்டரான சுரேஷ் குமார் அவர்களே, அவன் தரப்பைக் கேட்டு வெளியிடாதது தவறுதான் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் ஒன்றும் தெரியாமல் ஓலு ஓலு எனக் கத்தும் இந்த வெட்டிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
அந்த ஓலா ஒட்டுனரின் தரப்பைக் கேட்காமல் செய்தியை இந்து வெளியிட்டது தவறு என ஜாய்ண்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ் சொல்கிறார். ஆனால் இந்த மூனாக் கூனாக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
யாருக்கு அஜெண்டா எனக்கா இவர்களுக்கா.
சரி இவர்கள் எடுத்துக்காட்டுக்கே வருவோம். கடத்தலில் கைது செய்யப்படுபவர்களெல்லாம் சும்மா கைவீசிக் கொண்டா வருகிறார்கள். அவர்களிடம் பிடிபடும் கோடிக்கணக்கான விலைமதிப்புள்ள தங்கம் குற்றத்துக்கான ஆதாரமில்லையா.
அதிகாரிகள் தங்கத்தைக் கள்ள மார்க்கெட்டில் வாங்கி, அப்பாவிகளை மாட்டிவிடவேண்டும் என்பதற்காக, பொய் கஞ்சா போல அவர்களிடம் வைத்து கப்பென பிடித்து விடுகிறார்களா. இதில் உண்மையை அறிய மீடியாவுக்கு என்ன எழவு இருக்கிறது. கைப்புண்ணுக்கு மருந்தெதற்கு.
இந்த மாதிரி லூசுத்தனமான உளறல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்றால் எதிரி வாயடைத்துப் போய்விட்டான் என்று அவர்களுக்குள்ளாகவே மாறி மாறி அடித்து விட்டு கர சேவை செய்துகொள்ள வேண்டியதுதான்.
3. எத்தனைக் கடத்தல் கேஸ்களில், கடத்திக் கொண்டுவந்த தங்கத்துக்கு உரிமை கொண்டாடி, ஃபைன் பெனால்ட்டி கட்டி எத்தனைக் குருவிகள் திரும்ப வாங்கியிருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரம் ஏதாவது இருக்கிறதா. இத்தனைக் கிலோ தங்கம் கடத்த இத்தனை ஆயிரம் கூலி கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள் என்றல்லவா கடத்தல்காரர்கள் சுய வாக்குமூலத்திலேயே ஒப்புக் கொள்கிறார்கள். வேண்டுமென்றால் வெளியில் வந்தபின் எந்தக் கடத்தல்காரரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். ச்சும்மா பொய்க் கேசு போட்டுட்டாய்ங்க என்று எவனாவது சொல்கிறானா பாருங்கள்.
ஓலா டிரைவர் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கும் வாக்குமூலம் என்ன என்பதை அவர் வாயாலேயே கேட்டுக் கொள்ள வேண்டியதுதானே ஆடியோவில். அதைத்தான் போலீசிலும் சொன்னேன் எழுதிக் கொடுத்தேன் என்றல்லவா சொல்லி இருக்கிறார்.
அனுதாப விளம்பரத்துக்காக ஒரு ஆப் பாயில்,
//அசிங்கமாக என்னைப் பார்த்துக் கை ஓங்க வந்தான். உடனே நான் அந்த ஆட்டோக்காரரிடம் வண்டியை வேகமாக எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே ஏறுவதற்குள் , 'கழுத்தை அறுத்துடுவேன், தெரியுமா?' என்று படு பயங்கரமாக முகத்தை வைத்துக்கொண்டு மிரட்டினான். அவன் கையில் ஆயுதம் எதுவும் இருந்ததா என்றுகூட கவனிக்கத் தெம்பில்லாமல், அந்த அரையிருளில் கவனிக்கவும் முடியாமல்//
என்றெல்லாம் கூறி பித்தலாட்டம் செய்து எதோ கொல்ல வந்ததைப் போல நடித்ததை வைத்து ஊரில் இருக்கிற ஒட்டுமொத்த ஆப் பாயில்களும் குய்யோ முறையோவெனக் கூவி, அவனைக் கொலைகாரனாகவே சித்தரித்தன.
உண்மையிலேயே அந்த ஓலா ஓட்டுனர் ஒரு கிரிமினல் எனத் தோன்றியிருந்தால், போலீஸ் டிரீட்மெண்ட் எப்படி இருந்திருக்கும். அவரை எப்படி நடத்தி இருப்பார்கள் என்பதென்ன யாருக்கும் தெரியாத உலக ரகசியமா. போலீஸ் ஏன் அந்த ஓட்டுனரைத் தொடக்கூட இல்லை. இதெல்லாம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கும் பேஸ்புக் கர சேவகர்களுக்குத் தெரியவில்லை தோன்றவில்லை என்பதற்கு நானா போறுப்பு. இதுகள் மிஞ்சி மிஞ்சி செய்ததெல்லாம், இருக்கிற இடம் விட்டு நகராமல் ஆப் பாயிலுக்கு ஒரு போன் போட்டுப் பேசியது மட்டும்தானே. போலீஸ் ஏன் ஓட்டுனரை எதுவும் செய்யவில்லை என்றால், அதற்குக் காரணம், அந்தக் கைதே மீடியா அழுத்தத்தால் துரதிருஷ்டவசமாய் செய்ய நேர்ந்த ஒரு அநியாயம் இதில் அவனைத் துன்புறுத்த வேறு வேண்டுமா என்பதுதானே.
நானாக இதைத் திரும்பத் திரும்ப எழுதவில்லை. அப்படி எழுத வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. மேலே குறிப்பிட்ட நிருபரைப் போல இப்படி யாராவது அவ்வபோது தானாக வந்து, நெகிழ்ந்து பழையதைக் கிளறி விட்டுப் போய்விடுகிறார்கள். என் தரப்பு சரி, என்பதற்கான பல்வேறு தரவுகள், அவ்வப்போது வெளியாகிக்கொண்டே இருக்கின்றன - அப்போதே JC இப்படிச் சொன்னார் என்பது தற்செயலாக இப்போது தன்னால் வெளியாகியிருப்பதைப் போல.
நான் என்ன செய்யட்டும். உண்மை அனுபவத்தை உண்மையாகப் பதிவு செய்வதல்லாவா உண்மையிலேயே எழுத்தாளனின் வேலை. அதைத்தான் அப்போது செய்தேன் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். இதிலிருந்து எப்போதும் தவறிவிடலாகாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.
நான் என்ன செய்யட்டும். உண்மை அனுபவத்தை உண்மையாகப் பதிவு செய்வதல்லாவா உண்மையிலேயே எழுத்தாளனின் வேலை. அதைத்தான் அப்போது செய்தேன் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். இதிலிருந்து எப்போதும் தவறிவிடலாகாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.
பரீக்ஷாவின் பலூன் நாடகத்தில், கவிஞன் சத்யன் என்கிற கிளர்ச்சிக்காரனின் வேடமேற்று 1980-81ல் நடித்தேன். அவன் கோர்டில் பேசுகிற வசனமாக, புவியரசு நடத்திய காற்று என்கிற சிறுபத்திரிகையின் இரண்டாம் இதழில் மஞ்சுவின் (மஞ்சு என்கிற பெயரில் இதை மொழிபெயர்த்தது புதுவை ஞானம் - தகவல் உபயம் ஞாநி) மொழிபெயர்ப்பில் டோப்ரி ஜொடேவ் (Dobri Jotev) என்கிற பல்கேரியக் கவிஞனின் கவிதை வரியொன்று வரும்.
ஆணையிடுங்கள் காற்றுக்கு
எங்கே எப்போது எப்படி வீசவேண்டுமென்று
அதற்குப் பிறகு காற்றாய் இருக்காது
***
பலூன் புத்தகத்திலிருந்து குறிப்பிட்ட பக்கங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பிய டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கு நன்றி.
இதில் கவிஞனாக நடித்தது நானா பாலா சிங்கா என்பது கொஞ்சம் டவுட்டாக இருக்கிறது என்றேன். நடிச்ச உனக்கே மறந்துவிட்டதா என்றார் ஞாநி. உங்கள் ஒவ்வொருவரையும் இன்னின்னாருக்கு இன்ன கேரெக்டர் என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினேன் என்று எழுதியபோதே கூறினேனே என்றார். அப்போது எனக்கு 19-20 வயது. இன்னும் மூன்று மாதத்தில் 57 முடிந்துவிடும். என் கேரெக்டர் மாறாது கட்டையில் போகும்வரை அதேதான்.