30 March 2017

வீடு

‪கவிஞருக்கு வீடு கிடைக்கலையாமே ‬

‪ஆமா ‬

‪அப்பறம் எப்படி இன்னும் தேதி போட்டுக் கவிதை எழுதாம இருக்காரு ‬

காலாகாலமா ‪கவிதை தவிதையா பேஸ்புக் போஸ்ட்டா எழுதி போரடிச்சிருச்சாம் இந்த தபா நேரடியா கவிதைத் தொகுதியாவே எழுதிக்கிட்டு இருக்காராம் ‬

‪யோவ் நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே எதையும் டீப்பா புரிஞ்சிக்கத் தெரியாதா ‬

‪ஓ நீ அந்த வீட்டைச் சொல்றியா வீடு பேறு வீட்டை. அது எப்படியா கிடைக்கும் இருக்கும்போதே ‬

‪சமூகச் சிந்தனையாளரா இருக்காரு டிவில. மேடைப் பேச்சாளரா இருக்காரு திமுகவுல. இலக்கியவாதியா பத்திரிகையாளரா பதிப்பாளரா கலக்கறாரு பேஸ்புக்குல. அவுரு நினைச்சா இது கூடவா கிடைக்காது ‬

‪அய்யா சாமி ஆள விடு எனக்கு போட்டோ கிடைக்காமப் பண்ணிடுவே போலயிருக்கே அடுத்த புக்ஃபேர்ல ‬

‪அடச்சீ அல்ப்பை. புக்ஃபேருக்கு இன்னும் 9 மாசம் இருக்கு அதுக்குள்ள எட்டு தடவை சண்டை போட்டு ஒம்போது தடவை கட்டிக்கிலாம் சாருவாட்டம்
 ‬
‪அது என்ன ஒம்போது. ஒம்போது மாசம். புள்ள பெத்துக்கறாப்புல ‬

‪புள்ள பெத்துக்க எதுக்கு ஒம்போது மாசம். மூணு மாசம் பொதாதா. இப்பல்லாம் பேஸ்புக்ல இன்னும் கம்மியாவே பொறந்துடுதே

‪அய்யையோ சாமி என்னைவிடு ஸ்டேட் விட்டு ஸ்டேட்டு போலீஸ் ஸ்டேஷன் போக வெச்சுருவே போலயிருக்கே ‬

‪அப்பறம் நீ எப்பதான் பரபன்ன அக்கிரகாரமெல்லாம் பாக்கிறது சித்தப்பு ‬

‪அடப்பாவி கவிஞருக்கு வீடு கிடைக்கலேனு சொன்னதுக்கு என்னை மாமியார் வீட்டுக்கே அனுப்பிடுவே போலயிருக்கே ‬

‪அதெல்லாம் ஒன்னும் ஆகாது பேஸ்புக் அக்கவுண்ட்டுதான் டிஸ்ஸேபிள் ஆகும் ‬

‪அயோக்கிய ராஸ்கல் நம்ம வீடு பேறே பேஸ்புக் தானேடா அதையே இல்லாமப் பண்ணிருவே போலயிருக்கே ‬

‪அட பயந்தாங்குளி. 5000 பிரெண்ட்ஸோட 6000 ஃபாலோயர்ஸோட இருந்த மாமல்லன் அந்த பேஸ்புக் அக்கவுண்ட் போன பிறகு புது அக்கவுண்ட்ல வெறும் 2300 பிரெண்ட்ஸோட 300 ஃபாலோயர்ஸோட அதைவிட இன்னும் நிறைய லைக் வாங்கலையா நிறைய பேர், முன்ன மாதிரி நாய் இல்லே இப்ப மனுசனாயிட்டான்னு நம்பி பேசவரலையா ‬

‪அப்ப இந்த ஊர்பேர் தெரியாத டம்மி பீஸே இவ்ளோ பேமஸுனா 5000 பிரெண்ட்ஸோட 67,743 ஃபாலோயர்ஸோட இருக்கிற திமுக இலக்கியக் கவிஞர் எவ்ளோ பேமசு. அவுருக்குக் கூடவா ஒரு வீடு கிடைக்கலே வாடகைக்கு ‬

‪அவுரு முஸ்லீம்ங்கிறதால கிடைக்கலியாம் ‬

‪அடப்போய்யா. திமுக ஆட்சிக்கு வந்தா எவ்ளோ வீட்டை ‬வேணா வளைச்சும் போட்டுக்கலாம் வேண்டப்பட்டா வெச்சிக்கவும் வெச்சிக்கலாம் 

நீ இப்ப எந்த வீட்டைப் பத்திப் பேசறே 

அந்த வீட்டைப் பத்திதான் 

சொந்த வீட்டைப் பத்தியா வாடகை வீட்டைப் பத்தியா 

ஆர்டினரி மனுசன் சொந்த வீட்லையே வாடகை வீடாட்டம் வாழ்ந்துகிட்டு இருக்கான். அதிகாரத்துக்கு அணுக்கமிருக்கிறவன் வாடகை வீட்லையே சொந்த வீடாட்டம் வாழ்ந்துகிட்டு இருக்கான் போயஸ் கார்டன்ல சம்மந்தமில்லாத தினகரன் போலீஸ் பந்தோபஸ்தோட பந்தாவா வாழ்ந்துக்கிட்டு இல்லையா

அப்ப கவிஞரு முஸ்லீமுன்றதுக்காக வீடு கிடைக்காமப் போயிடலேங்கிறியா 

முஸ்லீம் பேரா இருக்கேனு இந்து வீடு குடுக்க மாட்டேங்கிறான் பேர்ல மத்திரந்தான் முஸ்லீமா இருக்கேனு முஸ்லீமும் வீடு குடுக்க மாட்டேங்கிறான் 

பேருக்கு முஸ்லீமா இருக்கிறது இவ்ளோ பெரிய பிரச்சனையா 

பேருக்காகக்கூட முஸ்லீமா இல்லாம உண்மையான மனுசனா இருந்துட்டா சீக்கிரம் வீடு கிடைச்சிரும் பாரூக்காட்டம் - உண்மையான முஸ்லீம்னு சொல்லிக்கிறவங்களால 

இப்ப சொல்ற வீடு எது 

விடுதலை