உடல்நலமும் மனநலமும்
ரமேஷ் பிரேதனின் எதிர்கால நலனுக்காகவும் அவரது உடல் நலம்பெறவும் பொருளதவி செய்த அனைவருக்கும் அடுத்த பெருங்கடமை காத்திருக்கிறது. அது, ஊர்கூடி ரமேஷ் பிரேதனிடம் அளித்திருக்கும் 2.77 லட்சத்தை ரமேஷ் பிரேதனிடமிருந்து காப்பாற்றுவதாகும்.
செலவானது போக இன்னமும் அவரிடம் 2.50 லட்சம் இருக்கிறது. அதில் குறைந்தது 2 லட்சத்தையேனும் வங்கி ஃபிக்ஸட் டெப்பாஸிட்டில் போட்டுவைப்பத்தே புத்திசாலிதனமாகும் என்று எடுத்துச்சொல்லி வங்கி மேலாளரிடம் பேசி ஒருவாரமாகியும் படிவம் வங்கிக்குப் போகிற வழியாய் தெரியவில்லை. ஆனால் ரமேஷ் பிரேதனோ, எஸ்.ராவின் வாசக நண்பரான ஜார்க்கண்ட் டாக்டர் சொன்னபடி ஸ்கேன் செய்துவந்ததைப் பற்றி என்னிடமும் 2 லட்ச ரூபாயை எவரோ வட்டிக்கு விடுபவரிடத்தில் கொடுத்து மாதச் செலவை சமாளித்துக்கொள்வதைப் பற்றி நம்முடைய டாக்டரிடத்திலும் விவாதிக்கும் அளவுக்குத் தெளிவான புத்திசாலியாக இருக்கிறார்.
அவரைக் குறைசொல்லவில்லை. பணம் கொஞ்சம் கூட வந்தால் பல நிர்பந்தங்களும் கூடவே வரும். இதுதானே வாழையடி வாழையாய் மனிதனின் தலைவிதி.
இப்படி ஒரு போஸ்ட் போட்டால் உங்கள் பெயர் கெட்டுவிடும் என்றார் டாக்டர் நண்பர். என் பெயர் கெட்டுப்போகால் இருப்பதைவிட எனக்கு முக்கியம் ஊர் கொடுத்த பணம் வீணாகக் கரைந்துவிடவோ தொலைந்துவிடவோ கூடாது என்பதுதான்.
இல்லை. அடுத்தமுறை வேறு எவருக்காவது நீங்கள் உதவவேண்டி வந்தால் அதற்கு யாருமே முன்வராமல் போய்விடுவார்கள். இதைப் பார்த்து உங்கள் எதிரிகள் குத்தாட்டம் போடுவார்களே கொஞ்சம் யோசியுங்கள் என்றார்.
இப்படியெல்லாம் கணக்கு வழக்கு பார்த்து நடக்கத் தொடங்கினால் முதலில் மாமல்லனை மாமல்லனே மதிக்கமாட்டான். எவர் மதிப்பதையும்விட மாமல்லனை மாமல்லன் மதிக்கும்படி வாழ்வதுதான் கடைந்தெடுத்த சுயநலமியான மாமல்லனுக்கு முக்கியம்.
கொடுத்ததோடு சரி என் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களைக் குறை சொல்லமாட்டேன். ஆனால் கொடுத்தது முழுப்பயனை அளிக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். அப்படிப்பட்டவர்கள்,
+91 89036 82251
+91 86086 10563
என்கிற எண்களில் தொடர்புகொண்டு 2 லட்ச ரூபாயை ஃபிக்ஸட் டெப்பாஸிட்டில் போடச் சொல்லி ரமேஷ் பிரேதனுக்கு அறிவுருத்துங்கள்.
பிகு: பேலியோவில் இருக்கும் ரமேஷ் பிரேதனின் உடல் அசைவுகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகக் கூறினார் டாக்டர் நண்பர். ஆண்டவன் எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு வழி வைத்திருக்கிறான்.