குழந்தைகள் எவ்வளவோ தேவலாம். பலூன் போனதற்காக அழும். ஐஸ் கிரீம் கிடைத்ததும் அதை மறந்துவிடும் பாக்கியம் பெற்றவை. பெரியவர்கள் அப்படியில்லை. சபிக்கப்பட்டவர்கள். நினைவுகளில் மருகிச் சாகவே சபிக்கப்பட்டவர்கள். போனதை எண்ணியெண்ணி உள்ளூர எப்படி மாய்ந்து போவாள் பாவம் அந்தத் தாய். அவளை நினைக்க நினைக்க அய்யோவென்று இருந்தது அவருக்கு.
இந்தக் காலத்துப் பசங்களுக்கும் பெண்களுக்கும் எப்படி இதெல்லாம் தெரிகிறது. நாம் பள்ளிப் பையனாக இருந்த காலத்தில் சாவைப் பார்த்துதானே பயப்படுவோம். இந்தப் பசங்களுக்கு வாழ்வைப் பார்த்து ஏன் இவ்வளவு பயம்.
முழுவதும் படிக்க: https://amzn.to/3LGO57P