விமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு.
சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள் (1983), முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986), உயிர்த்தெழுதல் (1994) ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு.
உயிர்மை பதிப்பகம் 2010ல் வெளியிட்டது. சத்ரபதி வெளியீடு மூலமாக 2017ல் மறு பதிப்பு வெளியானது.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் சிறுமி கொண்டு வந்த மலர் சிறுகதை The Flower Brought by the Little Girl என, Westland Publications Limited வெளியிட்டுள்ள The Tamil Story என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் Subashree Krishnaswamy அவர்களின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது.இலை சிறுகதை Curry Leaf என, Penguin Books வெளியிட்டுள்ள A Place to Live என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் Vasantha Surya அவர்களின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது. வலி சிறுகதை Pain என, Writers Workshop வெளியிட்டுள்ள Modern Tamil Stories என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் M.S. Ramaswami அவர்களின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது.
அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்
கிண்டிலில் வாங்க: விமலாதித்த மாமல்லன் கதைகள்