கம்யூனிஸ்ட்டுகள் பங்கைக் கண்டுகொள்ளவே இல்லையென்றாலும் CPI(M) அதிகாரபூர்வமாக ஜெய்பீமை ஆதரித்திருப்பது எவ்வளவு பெருந்தன்மை
தோழர்கள், காம்ரேட் சூர்யாவுக்கு லால்சலாம் சொல்லாதது ஒன்றுதான் குறை.
'வறுமையின் நெறம் செழுப்பு' வெளியான சமயத்தில் கே. பால்சந்தர் கூட காம்ரேடாக இருந்திருப்பார். பிரபல தளத்தில் பேமஸாக இருக்கமுடியவில்லையென்றால், பேமஸாக இருப்பவரை இழுத்துப் பிடித்துக் கட்டிக்கொள் என்பது தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்டுகளின் நடைமுறைத் தத்துவம்.
ஆமாம் பாவம் இவர்களும் நினைவு தெரிந்த நாள் முதலாய் பாலகுமாரன் ஆவதற்காக அல்லாடுகிறார்கள். அம்பேத்கர் பெரியார் என நேரத்துக்கு ஏற்றார் போல ஆயிரம் சாயம் பூசிக்கொண்டாலும் இவர்களை சுப்ரமண்யராஜு லெவலிலேயே வைத்திருக்கிறது இந்த நன்றிகெட்ட சமூகம்.
தொழிற்சங்கம் கொடிகட்டி பறந்த காலத்திலேயே - 'பெரும்பான்மைத் தொழிலாளர்கள் CITU / AITUCல இருக்காங்க. ஆனா தேர்தல்னு வந்தா திமுக அதிமுகவுக்கு ஓட்டு போட்டுடறாங்கனு' புலம்பிக்கொண்டே கிடந்து திமுக அதிமுகவின் எலெக்ஷன் டைம் அல்லக்கைங்களாக ஆகிவிட்டார்கள்.
80களில், 'உலகைக் குலுக்கும் பேரணி' என்று மெளண்ட்ரோடின் இடது பிளாட்பார்ம் ஓரமாக, அட்லீஸ்ட் ரெவ்வண்டு பேராகவேனும் ஊர்வலம் போவார்கள். இந்தியப் பொருளாதாரம் உலகமயமாகி ஐடி பெருவெடிப்பில் தொழிற்சங்கம் இருந்த இடம் தெரியாமல் சிதறி சின்னாப்பின்னமாகிப் போனதில், ஊர்வலமும் போய் வள்ளுவர்கோட்டம் சைடு ரோடுக்கு வந்துவிட்டனர் தோழர்கள்.
பேஸ்புக் இருப்பதால் இன்னும் இழுத்துக்கொண்டு கிடக்கிறது.