02 டிசம்பர் 2021
இந்திய காப்புரிமைச் சட்டப்படி, ஆசிரியரின் வாழ்நாள் + மறைவுக்குப் பின் 60 வருடங்கள் வரை மட்டுமே காப்புரிமை.
கு.ப.ரா மறைந்த வருடம் 1944
68 வருடங்கள் கடந்து, காப்புரிமை இல்லாத குபரா கதைகளை 2012ல் பதிப்பித்துதான் காசு பார்த்திருக்கிறார் பெ. முருகன்.
கு.ப.ராவின் சந்ததியினரே கோரமுடியாத காப்புரிமையை பெ.முருகன் கோருவது உச்சபட்ச காமெடி.
மூல பாடம் பாலபாடம் வருட வரிசை என்று பெ. முருகன் விடுகிற கதைகளெதுவும் சட்டப்படி வேலைக்காகா.
அமேஸானில் வேலை பார்ப்பவர்களுக்கு அறிவும் கிடையாது தமிழும் தெரியாது. அவர்களோடு கிடந்து தொட்டதற்கெல்லாம் போராடியே கழிந்துகொண்டிருக்கிறது என் வாழ்நாள்.
என் அறியாத முகங்கள் சிறுகதையை எவனோ நெட்டில் போட்டிருக்கிறான். பொதுவெளியில் இருக்கும் அதை கிண்டில் புக்காகப் போட்டு நான் காசு பார்க்கிறேன் என்று மெய்ல் அனுப்பிற்று. என் அனுமதியின்றி எவனோ திருடிப் போட்டதற்கு நான் என்ன செய்ய என்று கேட்டால், அதற்கு என்னிடம் எக்ஸ்க்ளூஸிவ் ரைட்ஸ் இருக்கா என்று கேட்டது அமேஸான் ப்ரம்மஹத்தி என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.😂😂😂
பப்ளிக் டொமைன் கண்ட்டண்ட் என்று வெளிப்படையாகக் கூறி வெளியிடவேண்டும். நீங்கள் வெளியிடும் புத்தகம் ஏற்கெனவே அமேஸானில் இருந்தால், அந்தப் புத்தகத்தில் இருந்து வேறுபட்டதாக, பிரத்தியேகமாக உங்களது பங்களிப்பாக கட்டுரை குறிப்புகள் என கூடுதலான அம்சம் ஏதேனும் இருக்கிற பட்சத்தில் அமேஸானுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
http://www.saprlaw.com/taxblog/copyright_final.pdf
https://kdp.amazon.com/en_US/help/topic/G200743940