எஸ்ராவே பரவாயில்லை என்கிற அளவிற்கு எழுத ஆரம்பித்துவிட்டான் சாரு. விஷ்ணுபுரம் விருது வாங்கியதற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டதோ என்னவோ பாவம்.
அபத்தம் 1
எப்போதெல்லாம் என்று நீட்டி முழக்கி ஆரம்பித்தால் அப்போதெல்லாம் என்கிற மாதிரியல்லவா வாக்கியத்தை முடிக்கவேண்டும்.
இப்படி சாதாரணமாக தகவலைச் சொல்லும் சொல்தொடருக்கு ‘எப்போது பவனில் சாப்பிட்டாலும்…’ போதுமே.
அபத்தம் 2
‘பவன்’ என்பதே பொதுவாக சைவ உணவகங்களின் பெயர்களில்தானே இருக்கின்றன. பவனில் சைவம்தானே சாப்பிட்டாகவேண்டும். அப்புறம் ஏன் ‘பவனில் சைவம் சாப்பிட்டாலும்’
ஶ்ரீ சாய் பவன் - என்று சாய்பாபா பெயரில் நடத்தப்படும் உயர்தர சைவ அசைவ உணவகங்கள் அரிதானவை. இதை ஒரு லா பாய்ண்ட் கவுண்ட்டராகத் தூக்கிக்கொண்டு வரப்போகிற வாசகர் வட்டத்துப் புட்டங்களுக்கு:
இதற்கு முன் எழுதியிருப்பதையும் பார்க்கவும்
//சேலம் பக்கத்தில் ஒரு அசைவ மெஸ் வரும். அங்கே சாப்பிட வேண்டாம் என்பார் ஒரு நண்பர். மற்ற இருவரும் அங்கே சாப்பிட விரும்பியும் ஏதோ ஒரு பவனில் சைவ உணவு உண்பார்கள்.//
கேவலம் ஒரு ப்ளாகு போஸ்டுக்கு இவ்வளவு அலப்பறையா என்று கேட்பவர்களுக்கு:
அடுத்த புக்ஃபேரில் இதையெல்லாம் காப்பி பேஸ்ட் செய்து ஸீரோடிகிரியின் சூப்பர் ஸ்டாரான சாரு, நான்கே நாள்களில் எழுதிய புதிய நாவல் என்று 200 பக்கங்களை 500 ரூபாய்க்கு நம் தலையில் கட்டுவான் எச்சரிக்கை.