விற்றுக் கொடுப்பார்கள் என்றுதான் புக்ஃபேரில் கடைகளில் கொடுக்கிறேன்
வைக்கிறார்கள்.
எதில் எவ்வளவு விற்றிருக்கிறது என்று அவ்வப்போது போய் எட்டிவேறு பார்க்கவேண்டியிருக்கிறது. இதில் விருட்சம் சந்திரமெளலிகூட எவ்வளவு இருக்கு வேணும்னுல்லாம் ஒவ்வொருத்தருக்கா அப்டேட் பண்ணிண்டிருக்க இருக்கமுடியாது நீயாதான் வந்து பாத்து குடுக்கணும் என்கிற அளவுக்கு முதலாளியாக இருக்கிறார்.
அதுவாக விற்றால்தான் உண்டு என்கிற புக்ஃபேர் முடிந்ததும் மீதம் இருப்பதை நானே போய் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. 30% கமிஷன் கடையில் வைப்பதற்குதான். விற்பது உன்பாடு எங்கள் வேலையில்லை என்பதைப்போல்தான் எல்லா கடைகளும் இருக்கின்றன.
அப்போதும் பேஸ்புக்கில் நான்தான் கரகாட்டம் ஆடிக்காட்டி விற்கவேண்டியிருக்கிறது. வெறித்தனமாய் ஆடித்தீர்க்கிற சமஸுக்கு நானே பரவாயில்லை என்பது வேறுவிஷயம்.
நம்பர் ஒன் பிரபலம் என்பதால் நிறைய விற்பதாய் மார்தட்டிக்கொள்ளும் சாருவும் ஜெயமோகனும் இதனால்தான் வருடம் முழுக்க நான் நான் நானேதான் இதோ இதோ இருக்கிறேன் என்று கத்திக் காட்டிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. இதை, புத்தகத்திற்கு முன்னுரை கூட எழுதிக்கொள்ளாத நான் எப்படி எதிர்பார்க்கமுடியும்.
கொஞ்சம் புக் விற்க தமிழில் எவ்வளவு கதறவேண்டியிருக்கிறது என்பதற்கு புக்ஃபேர் முடிந்தபின் பேஸ்புக்கில் நிலவும் மயான அமைதியே சாட்சி.
பிகு: 30% கமிஷன் போக புக்ஃபேரில் காமன்ஃபோக்ஸ் மூலமாகவும் விற்று கிடைத்த பணம் 15,000+ யாவரும் கொடுத்த ₹900ஐயும் சேர்த்து. (கம்ப்யூட்டரே வேலை செய்யாததால் கணக்கு கொடுக்கமுடியாமல் இருக்கும் டிஸ்கவரியில் ஏதேனும் விற்றிருக்கலாம்) ஒன்றைத்தவிர எல்லாம் பழைய புத்தகங்கள். விளக்கும் வெளிச்சமும் வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதுவும் ஏற்கெனவே 200 பிரதிகள் விற்றது.
ஒன்மேன் பதிப்பகத்திற்கு இது அதிகம்தான் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இனி புக்ஃபேரில் கிடந்து லோல்படுவதாக இல்லை.
கொஞ்ச நேரம்
இருப்பதற்காக
ரொம்ப தூரம்
நடக்கவேண்டியிருக்கிறது…
- விக்ரமாதித்யன்