26 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 20 கைராசி

கீழ் வீட்டு மாமா சொன்னது போல தம்பையா ரொம்ப கைராசிக்காரர்தான் போல. இரண்டே நாட்களில் வீக்கம் வடிந்து எப்போதும் போல கால்களில் நரம்புகள் தெரியத்தொடங்கிவிட்டிருந்தன. ரணமாகிக்கிடந்த காயமும் நன்றாகக் காயத்தொடங்கி பொறுக்குத்தட்ட ஆரம்பித்திருந்தது

ஆபீஸ் அத்தியாயம் 19 மானக்கேடு

சிறுவயதிலிருந்தே எல்லாக் குழந்தைகளையும் போல அவனுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்பை அதிகமாகத் தின்பது உடம்புக்கு நல்லதில்லை என்று நினைக்கிற எந்த அப்பாவும் அதிகபட்சமாக பயமுறுத்தச் சொல்வது பல் சொத்தையாகிவிடும் என்பதாகத்தானே இருக்கும். அவனுடைய அப்பா, பொணத் தேவடியாள் மகனே இப்படியே சக்கரை தின்றுகொண்டே இருந்தால் ஹைதராபாத் மாமாவைப் போல ஒரு நாள் காலை எடுத்துவிடுவார்கள் பார்த்துக்கொண்டே இரு என்பார். மராட்டியில் தேவடியாள் மகனே என்பதோ தேவடியாளே என்பதோ நிறைய குடும்பங்களில் சகஜம். குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட  ரள்ளேகா ராண்டேவை உபயோகிப்பது சர்வ சாதாரணம்

ஆபீஸ் அத்தியாயம் 18 புகை

அடுத்து வந்த நாட்கள், தினந்தோறும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அங்கே எதுவுமே இல்லாமல் எப்போதும்போல இருட்டு மொட்டையாகத்தான் இருக்கப்போகிறது அவன் வீட்டு மொட்டைமாடி என்பதை உறுதிப்படுத்தின. 

ஆபீஸ் அத்தியாயம் 17 வீடும் பொருளும்

அது இலை. இது இல்லை என்று அவன் வாழ்க்கை பூராவும் ஒரே இல்லாத பாட்டம்தான். எல்லோருக்கும் தன்னால் வரக்கூடிய பேச்சே, அவனுக்கு மூன்று வயதுவரை வரவில்லை. ஆ ஊ என்று எல்லாவற்றுக்கும் சைகை பாஷைதான். காந்தா பாய் பாட்டி சோளிங்கர் நரசிம்மருக்கு மணி கட்டுவதாக வேண்டிக்கொண்டதற்குப் பிறகுதான், அவனுக்குப் பேச்சு வந்ததாகச் சொல்லுவாள் அம்மா. 

ஆபீஸ் அத்தியாயம் 16 அறையும் வீடும்

படிக்கட்டில் நின்றபடியே, கோவிலுக்குப் போய்ட்டு வீட்டுக்குப் போறேன் என்றாள்.


நீ எங்கையாவது போய்க்கோ. உன்னால எனக்கு இன்னைக்கு ஆபீஸுக்கு லேட்டாயிடுச்சி. அட்டெண்டன்ஸ் உள்ள போயிருக்கும் என்றபடி பெடலை அழுத்தி மிதித்தான்


பணம் பத்திரம்டா என்று அவள் சொன்னது எங்கிருந்தோ சொல்வதைப் போல் கேட்டது

 

0

25 February 2023

சுரணையின் மரணம்

 


சுரணையின் மரணம் என் 73ஆவது கிண்டில் புத்தகம்

இது, காலச்சுவடு பதிப்பகத்தில் புனைவு என்னும் புதிர் வெளிவந்தபோது ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றிப் பேசுகிற புத்தகம்.  

24 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 15 புளூபெல்

எழுத்தில் மட்டும் என்றில்லாமல் எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. தான் எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம்

ஆபீஸ் அத்தியாயம் 14 ஒரு சைக்கிளின் கதை

அப்பாவின் அஸ்திப் பானையை கடலில் தூக்கிப்போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்தபோது, கூடவே வந்த மனிதர் குறிப்பிட்டது இந்த சொசைட்டியைத் தானோ. 

ஆபீஸ் அத்தியாயம் 13 விபரீதங்கள்

பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழித்து பதிப்பக முன்னொட்டோடு அறியப்படவிருந்த வசந்தகுமார், வளைவும் நெளிவுமாக ஓவிய எழுத்துக்கள் போல கைப்பட எழுதிபைண்ட் செய்து, அட்டையில் கூட ஓவியம் வரைந்து, உச்சிவெயில் என்கிற குறுநாவலை உலகின் ஒற்றைப் பதிப்புப் புத்தகமாக அவனிடம் கொடுத்து கணையாழி போட்டிக்குச் சேர்த்துவிடும்படி சொன்னான். 

ஆபீஸ் - அத்தியாயம் 12 ரெட் லைட்

சுர்ரென்று ஏறிற்று. 

நீங்கள் ஏசி, இவர்கள் சூப்பிரெண்டெண்ட்டுகள், என்பதைப் போல நான் எல்டிசி. இதில் எங்கிருந்து வந்தது ஆஃப்ட்டரால் என்று உரக்கச் சொன்னான். 

ஆபீஸ் அத்தியாயம் 11 இருந்து செஞ்சிட்டுப் போ

மெதுவடை கேட்டான். மசால்வடை வந்தது. எலி கதையில் அமி விவரித்திருப்பதைப் போலவே அச்சு அசலாக இருந்தது. அந்தக் கதையை அவர் எழுதியே பத்து வருடங்களிருக்கும். மசால் வடை எப்போதும் போலதான் இருந்துகொண்டு இருக்கிறது.

யாசக சாருவும் வாசக அடிமைகளும்

சாரு இந்த வீடியோவை 

23 February 2023

ஒழுங்காய் இருந்த அமேஸான்...

செவ்வாய் மதியம் 12:30 மணி வாக்கில் அமேஸானில் 2 கேஜி கோத்தாஸ் காபி பெளடர் ஆர்டர் செய்தேன். அன்றிரவே 8 - 12PMக்குள் டெலிவரி என்றது ஆப்பு.  

22 February 2023

புனைவு என்னும் புதிர் - கண்ணீர்ப்புகை - ஞானக்கூத்தன்

//உண்மைதான். ரங்கநாயகி தங்கினால் எத்தனையோ விதத்தில் உபயோகமாக இருக்கும். கேட்பார்கள்அவள் வரவில்லையா என்று. வரவில்லை என்றால் யாரும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். தவறாகவும் கருதமாட்டார்கள். இப்பொழுது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இரண்டுபேரும் போனால் எப்படி வர முடிந்தது என்று அதிசயிப்பார்கள். பழக்கமுள்ள ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தோம் என்று சொல்லலாம். ஆனால் அது உறவில்கருணையில் ஒன்று அல்லது பல புள்ளிகள் குறைந்துவிட்டதாகப் படும்.// 

கண்ணீர்ப்புகை - கவனம் 2 ஏப்ரல் 1981

கவன்ம் - முழுத்தொகுப்பு

19 February 2023

உலகச் சிறுகதைகள் 10 ஃப்ரன்ஸ் காஃப்கா

படிப்பதை ரசிப்பவன் வாசகன். ரசிப்பதோடு நின்றுவிடமல் ரசிக்கும்படி, கதை எப்படி மெல்ல மெல்ல உருவாகிறது; எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்படுகிறது; எதையெதையெல்லாம் வைத்து எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, படிப்படியாக,கவனமாக, ஏகலைவன் போல, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் படித்துக்கொள்பவனே நாளடைவில் நல்ல எழுத்தாளனாகவும் ஆகிறான்.

18 February 2023

உலகச் சிறுகதைகள் 9 போனி சேம்பர்லின்

பிறக்கையில் குழந்தை கடவுளாகத்தான் இருக்கிறது. அறிவு வளர்ந்து நாலும் தெரியவந்து வாழ்வில் முன்னேறுவது மட்டுமே முக்கியமாகிப்போக, அநேகமாய் எல்லோருமே கிட்டத்தட்ட சாத்தானாகிவிடுகிறோம்.

உலகச் சிறுகதைகள் 8 மாரியோ பெனதெத்தீ

துரும்பளவு முயற்சியுமின்றி, சும்மா பார்த்தால் போதும் என்கிற மாதிரியான எக்கச்சக்க அக்கப்போர்கள், இலவசமாகவேறு கிடைப்பதால், படிக்கிற பழக்கமே ஒரேயடியாய் போய்விடும்போல இருக்கிறது.

உலகச் சிறுகதைகள் 7 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா

இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இலக்கியத்திற்கு இல்லை. அதனிடம் இருக்கிற ஒரே எதிர்பார்ப்பு அறிந்ததினின்று அறியாததற்கு அழைத்துச்செல்கிறதா என்பது மட்டுமே. 

எழுத்து நடையில், சொல்கிற முறையில்எல்லாவற்றையும் மாதிரி இது இன்னொரு கதை என்பதைப் போல அமைதியாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கிற கதை. கதையின் நாயக பாத்திரத்தைப்பற்றி கதைசொல்லி சொல்வதன் மூலமாக கதை சொல்லியைப்பற்றித் தானாகவே தெரியவருகிறது. 

உலகச் சிறுகதைகள் 6 ரேமண்ட் கார்வர்

உள்ளே இருப்பவை வெளியே கிடக்கின்றன என்றுசொல்லி வெளியில் இருக்கும் நம்மை அவனுக்கு உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார் ஆசிரியர். 

உலகச் சிறுகதைகள் 5 எர்னாந்தோ தெய்யெஸ்

எழுதியிருக்கிற நேர்த்தியின் காரணமாகவும் சொல்முறையின் நூதனம் காரணமாகவும்

உலகச் சிறுகதைகள் 4 ஜார்ஜ் லூயி போர்ஹே

முதல் முறையாகப் படித்தபோது ஒன்றுமே புரியவில்லை என்றாலும் என்னய்யா இது இத்துனூண்டு கதைல என்னென்னத்தையோ சொல்லி வைத்திருக்கிறான் என்று மிரட்டிவிட்டது.

ஆபீஸ் அத்தியாயம் 10 கூச்சம்

ஏசி சொன்னதைப் போல அரை நாள் லீவ் எழுதிக்கொடுத்துவிட்டு, ஆபீஸிலேயே இருந்து ஐசிக்களை எழுதியிருந்தால், லஞ்ச்சுக்கு முன்பாகவே நிறுத்தி நிதானமாக எழுதி முடித்திருக்கலாம்.

ஆபீஸ் அத்தியாயம் 9 ஆபீஸ் டைம்

எட்டு மணி நேரத் தூக்கம். எட்டு மணி நேர வேலை. மிச்சமிருக்கிற எட்டு மணி நேரம் மட்டுமே அவனுக்கு. அதுவரை அப்படியில்லை. தூக்கம் தவிர நாள் முழுவதுமே அவனுடையதாக இருந்தது. இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இருந்ததில்லை. 

ஆபீஸ் அத்தியாயம் 8 வெட்டி ஆபீஸர்

அவன் பெயரைச் சொல்லி கையெழுத்துப் போடச்சொன்னால்தான் சாரி என்று சொல்லிவிட்டுப் போடுவான். என்னை மதி நான் உன்னை மதிக்கிறேன் என்பது அவன் கொள்கை.

ஆபீஸ் அத்தியாயம் 7 கல்ல வாங்கு கல்ல வாங்கு

ஹேமலதா விதிர்விதிர்த்துப் போயிருந்தாள். அவளது ஜிமிக்கி ஆடாமல் அசையாமல் இருந்தது. 

ஆபீஸ் அத்தியாயம் 6 தூக்கி வெளிய போட்ருவேன்

வாங்க. நீங்கதான் SBல இருந்து வரேள் இல்லையா என்று அவன் பெயரைச் சொல்லிவெல் கம் டு ப்ரிவெண்ட்டிவ்நான் ஹேமலதாஸ்டெனோ என்று கூறி நட்புடன் சிரித்தது ஒரு ஜிமிக்கி.

தவிப்பு சிறுகதைத் தொகுப்பு

மார்ச் 2015 முதல் ஜூன் 2016 வரை எழுதிய 9 சிறுகதைகளின் தொகுப்பே தவிப்பு.

16 February 2023

உலகச் சிறுகதைகள் 3 காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

படிப்பதுதுரதிருஷ்டவசமாக பலருக்கு கிரகித்துக்கொள்வதாக இருப்பதில்லை.

உலகச் சிறுகதைகள் 2 பீட்டர் ஹாக்ஸ்

பொதுவாகவே உருவகக் கதை என்பது, குட்டிக்கதை போல அளவில் சிறிதாகவும் மூடிய வாய்க்குள் நாக்கைத் துழாவிக்கொண்டு எழுதப்பட்டதைப் போன்று மெல்லிய நகைச்வையுடனும் உள்ளே இருக்கிற விஷயம் படிப்பவனின் முதிர்ச்சிக்கு ஏற்ப வேறு தளத்தில் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு இடம் கொடுக்கிறவகையிலும் இருக்கும். இதற்கு ஈசாப் பரமஹம்சர் முல்லா நஸ்ருதீன் என்று நிறைய உதாரணங்களைக் கூறலாம். 

உலகச் சிறுகதைகள் 1 ரேமண்ட் கார்வர்

கருத்தைச் சொல்வதல்ல கதை. கதை மாந்தர்களை உருவாக்குவதன் மூலம் அவர்களோடு, தன்னைப் பொருத்திப் பார்த்து, வாசகனே கருத்தை உருவாக்கிக்கொள்ள வைப்பதுதான் கதை.

இராசேந்திரசோழனின் சாவி

எந்த அரசியலைச் சார்ந்தவராக இருந்தாலும் கட்சி எங்கேயாவது கண் சிமிட்டிவிடும்.

வண்ணநிலவனின் சாரதா

துயரங்களை அடுக்குவதே தப்பில்லை. அதன் காரணமாகவே அது  வணிக எழுத்தாகவும் ஆகிவிடாது.

அன்பை வாங்குதல்

நானும் ஒருகாலத்தில் புத்தகம் வாங்கியிருக்கிறேன். ஆனால், யாரிடமும் ஆட்டோகிராஃப் வாங்கியதில்லை. அசோகமித்திரன் கி. ராஜநாராயணன் பிரபஞ்சன் என்று கொடுத்த புத்தகங்கள் கையெழுத்தோடு இருக்கின்றன. அவற்றில் இருப்பவை கேட்டுவாங்கியவையல்ல. பிரியத்துடன் அவர்களாகப் போட்டுக்கொடுத்தவை. 

15 February 2023

ஆபீஸ் - அத்தியாயம் 5 முதல் மாற்றல்

கல்கியில் வந்தது போகஅவனுடைய சிறுகதைகள்கணையாழிகவனம் பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகிஇலக்கியச் சிறுவட்டத்திற்குள் அவனுடையதும் ஒரு பெயர் என்று ஆகத் தொடங்கியிருந்தது. 

ஆபீஸ் - அத்தியாயம் 4 முதல் சம்பளம்

நாலும் தெரிய ஆரம்பித்த பின், எதையும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, எல்லாவற்றையும் குறுக்குவெட்டாக அறுத்து யோசிக்கும் புத்தியும் வந்த பிறகு

ஆபீஸ் - அத்தியாயம் 3 முதல்நாள்

சித்திரகுப்தன் பேரேடு என்று கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டோம். அதேதான் மத்திய அரசாங்கத்தில், சர்வீஸ் புக் என்கிற நாமகரணத்தில் இருக்கிறது

ஆபீஸ் - அத்தியாயம் 2 ஆரம்பம்

பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் படிக்கிற பெண்கள்,

ஆபீஸ் - அத்தியாயம் 1 முடிவு

பச்சையப்பாஸில் படித்த காலத்திலேயே எந்த ஆசிரியரையும் சார் சொல்லி விளித்ததில்லை.

10 February 2023

மொக்கைகளே விழித்தெழுங்கள்

'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான்.  பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.'

- சாரு நிவேதிதா பெயர்  

08 February 2023

சார்ந்தும் சாராமலும்

"மாமல்லன் எழுதும் ஆபீஸ் நாவல் தொடர் மெட்ராஸ் பேப்பரில் யாரும் படிக்கிறீங்களா"

சில நாட்களுக்குமுன், காலையில் இப்படியொரு செய்தி வந்தது வாட்ஸப்பில். 

மூன்று சூப்பர் ஸ்டார்கள்

45 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொள்கிறவனிடம்  என்ன எதிர்பார்ப்பீர்கள் - எழுதியிருப்பவை அமரகாவியங்களோ இல்லையோ குறைந்தபட்சம் அவன் எழுத்தில் தகவல் பிழைகளோ மொழிக் குளறுபடிகளோ தர்க்கப் பிழைகளோ இருக்காது என்று நம்புவீர்கள் இல்லையா. 

02 February 2023

இழைதலும் இளித்தலும்

பிரபலம் என்பதற்காக மட்டுமே எனக்கு எந்தக் காலத்திலும் எவரையும் பிடித்ததில்லை. அப்படியே ஏதேதோ காரணங்களுக்காகப் பிடித்திருந்தாலும் சிவாஜி கண்ணதாசனில் இருந்து ஜெயகாந்தன் பிரமிள் அசோகமித்திரன் சுந்தர ராமசாமி வரை கமல் ரஜினி உட்பட பிடித்தும் பிடிக்காமலும் போயிருந்த காலகட்டங்கள் இருந்திருக்கின்றன. 

01 February 2023

இன்றைய மெட்ராஸ் பேப்பரில்...

PUCL பி வி பக்தவச்சலம் ஏதோ ஒரு கூட்டத்தில் சொன்னதாக நுங்கம்பாக்கம் நூலகத்திற்கு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களில் ஒருவரான மனஓசை தேவராஜன் பொது அக்கறை குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது.