படிப்பதை ரசிப்பவன் வாசகன். ரசிப்பதோடு நின்றுவிடமல் ரசிக்கும்படி, கதை எப்படி மெல்ல மெல்ல உருவாகிறது; எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்படுகிறது; எதையெதையெல்லாம் வைத்து எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, படிப்படியாக,கவனமாக, ஏகலைவன் போல, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் படித்துக்கொள்பவனே நாளடைவில் நல்ல எழுத்தாளனாகவும் ஆகிறான்.
மெத்தப் படித்துப் பெரிய பெரிய பட்டங்களை வாங்கிய 'பெத்த' படிப்பாளிகள்,படிப்பாளிகளாக மட்டுமே எஞ்சிவிடுவதும் படிப்பில் முட்டை வாங்கி, பள்ளிக்கூடத்தைக்கூடத் தாண்டாதவர்கள், படைப்புகளை மட்டுமே ஆழப் படித்து,கற்றுத்தேர்ந்து, சிறந்த படைப்பாளர்களாக ஆகிவிடுகிற அதிசயம் நிகழ்வதும் இதனால்தான்.
புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 10 வாளியில் பயணம் செய்கிறவன்