படிக்கட்டில் நின்றபடியே, கோவிலுக்குப் போய்ட்டு வீட்டுக்குப் போறேன் என்றாள்.
நீ எங்கையாவது போய்க்கோ. உன்னால எனக்கு இன்னைக்கு ஆபீஸுக்கு லேட்டாயிடுச்சி. அட்டெண்டன்ஸ் உள்ள போயிருக்கும் என்றபடி பெடலை அழுத்தி மிதித்தான்.
பணம் பத்திரம்டா என்று அவள் சொன்னது எங்கிருந்தோ சொல்வதைப் போல் கேட்டது.
0
அவனுக்கு வந்ததைப் போலவே அவன் அம்மாவுக்கும் அப்பாவின் பணம் வந்திருந்தது. அவளுடைய பென்ஷன் அக்கவுண்ட் நுங்கம்பாக்கம் இண்டியன் பேங்கில்தான் இருந்தது எனினும் எதற்கும் வீட்டிற்கு அருகில் ஒன்று இருந்தால் நல்லதுதானே என்று அசோக் பில்லர் அருகில் அம்மாவுக்கு ஒரு கணக்கு ஆரம்பித்து, அவளுக்கு வந்ததை அதில் போட்டு வைத்திருந்தான்.
போட்ட உடனே மூக்கில் வேர்த்து, அவளுடைய பெரிய தம்பி வந்து எதையோ சொல்லி மாதாமாதம் வட்டியோடு தந்துவிடுவதாக உறுதியளித்து செக் வாங்கிக்கொண்டு போய்விட்டான்.
அவனைப் போலவே அவளும் பணத்தைப் பார்க்காதவள் என்பதால் போகும்போது மொத்தமாகப் போனது, வட்டியோடு வந்தாலும் மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து,அந்த சாமிக்கு இந்த மாமிக்கு என்று கரைந்து காணாமல் போய்க்கொண்டு இருந்தது. கட்டங்கடைசியாக மிஞ்சி இருந்ததும் ஒரேயடியாக சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தது.
0
பணம் பணத்தோடுதான் சேரும். தரித்திரம் தரித்திரத்தோடுதான் சேரும்.
ஆபீஸ் அத்தியாயம் 16 அறையும் வீடும்