பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் படிக்கிற பெண்கள்,
அப்படி அந்த குர்த்தாவுடன் போக, மத்திய நூலகக் கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில் அவனைப் பார்த்த, நந்தனம் கலைக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த அக்கினிப் புத்திரன், நவீன நாடகத்தை நடத்துகிற ‘நாநி’ சங்கரன் என்கிற தம் நண்பரும் இப்படித்தான் ஜிப்பா அணிவார் என்று கூறி பரீக்ஷா கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
என்னதான் நடக்கிறது என பார்ப்போமே என்று எட்டிப் பார்க்கப் போனவன், எங்கும் நவீனம் எதிலும் நவீனம் என்றாகி, இனி கலை இலக்கியமே வாழ்க்கை என்று நவீன ஜோதியில் ஐக்கியமாகிவிட்டான். எல்லாமே தற்செயல் என்பதைப் போலவே எல்லாமே கொஞ்சநாள் என்பதும் அவன் ஜாதகத்தின் முக்கிய அம்சமாக இருக்கவேண்டும். பரீக்ஷாவும் ஒன்றரை ஆண்டுகள்தான் நீடித்தது. எனினும் அவன் மனதிற்குள் வேர்விட்டுக் கிளை பரப்பி விருட்சமாக அதுவே ஆரம்பத் தொட்டி ஆகிற்று.