பொதுவாகவே உருவகக் கதை என்பது, குட்டிக்கதை போல அளவில் சிறிதாகவும் மூடிய வாய்க்குள் நாக்கைத் துழாவிக்கொண்டு எழுதப்பட்டதைப் போன்று மெல்லிய நகைச்வையுடனும் உள்ளே இருக்கிற விஷயம் படிப்பவனின் முதிர்ச்சிக்கு ஏற்ப வேறு தளத்தில் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு இடம் கொடுக்கிறவகையிலும் இருக்கும். இதற்கு ஈசாப் பரமஹம்சர் முல்லா நஸ்ருதீன் என்று நிறைய உதாரணங்களைக் கூறலாம்.
நவீன இலக்கியத்தில் கூட, எழுதப்பட்டிருப்பதிலிருந்து, வார்த்தைகளாகச் சொல்லப்பட்டிராத விஷயங்களுக்குக் கொண்டு செல்ல, சிறந்த வகையாக உருவகக் கதைகள் இருக்கின்றன என்று சொல்லலாம்.
இந்தக் கதையைப் பொறுத்தவரை, எழுதப்பட்ட நாட்டின் வரலாறும் எழுதப்பட்டிருக்கிற காலமும் கூட, புரிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.