எழுதியிருக்கிற நேர்த்தியின் காரணமாகவும் சொல்முறையின் நூதனம் காரணமாகவும் வணிகரீதியான சுவாரசியத்தை மட்டுமே முதன்மையாகக்கொண்ட கதைகள்கூட, இலக்கியத் தரம் போன்ற தோற்றத்தை அளித்து, எளிய வாசகனை சாமியாட வைத்து, எழுத்தாளனின் அடிமையாக ஆக்கிவிடுகின்றன. தீவிர தேடல் உள்ள வாசகன் எழுத்தின் சூட்சுமங்கள் பிடிபடப் பிடிபட, இந்தத் தாசி மனநிலையிலிருந்து வெகு சீக்கிரமே விடுபட்டுவிடுகிறான்.