01 February 2023

இன்றைய மெட்ராஸ் பேப்பரில்...

PUCL பி வி பக்தவச்சலம் ஏதோ ஒரு கூட்டத்தில் சொன்னதாக நுங்கம்பாக்கம் நூலகத்திற்கு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களில் ஒருவரான மனஓசை தேவராஜன் பொது அக்கறை குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. 

பச்சையப்பன் கல்லூரி மணவர்களுக்குப் பொதுமக்களிடத்தில் பொறுக்கிகள் ரெளடிகள் என்றுதான் பெயர் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. தெருவில் ஒரு விபத்து நடந்தால் முதலில் ஓடிப்போய் தூக்குபவன் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவனாகதான் இருப்பான். மற்ற கல்லூரிகளில் படித்தவர்களைக் குறைவாகச் சொல்லவேண்டும் என்பதற்காகவோ நானும் பச்சையப்பனில் படித்தவன் என்பதாலோ இதைச் சொல்லவில்லை. பொதுவெளியில் ஒரு ஆபத்தோ அநீதியோ நடந்தால் அதை உடனடியாக எதிர்கொள்வதென்பது அந்தக் கல்லூரி வளாகத்தின் இயல்பிலேயே இருக்கிறது. 

இதையெல்லாம் கேட்ட சமயத்தில்தானும் பச்சையப்பாஸ் என்பதால் பெரிய பூரிப்பாக இருந்திருக்கிறது. இப்போது எல்லாம் வடிந்துவிட்டது என்றாலும் பிவிபி சொன்னதைப் போலதான், தான் இன்னும்கூட பச்சையப்பாசில் இருந்ததைப் போலவேதான் இருந்துகொண்டு இருக்கிறோமோ என்று பட்டது. 

ஆபீஸ் 35 இடம்  


எங்களால் செயலாளரை மட்டும்தான் பார்க்க முடிந்ததுஅவர், எங்கள் அலுவலகத் தலைவரின் வார்த்தைகளைக் குறித்துக் கொண்டார். ஒத்திகைகளின்போது யாருமே திக்கித்திணறிப் பேசவில்லைஆனால் ஒத்திகைகளிலேயே மிக மோசமான ஒத்திகையின்போது பேசியதைவிட மோசமாக அலுவலகத் தலைவர் பேசினார். அடுத்தநாள் நடக்கப்போகும் அமர்வில் எங்கள் பட்ஜெட் பரிசீலிக்கப்படும் என்ற அமைச்சரின் பதிலுடன் செயலாளர் திரும்பி வந்தார். 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் - பட்ஜெட்