சாரு தன்னைப்பற்றிப் பெருமையாக என்ன சொல்லிக்கொண்டாலும் அதில் கடுகளவும் உண்மையிருக்காது என்று உறுதியாகக் கூறலாம். இந்தப் பொதுவிதி இதில் எப்படி இயங்குகிறது என்று ஆதாரங்களுடன் பார்க்கலாமா.
கசடதபற முழுத்தொகுப்பு கிண்டிலில் கிடைக்கிறது. பொய்யிலேயே புழுத்து விளைந்த சாரு புண்ணாக்கைக் கட்டிக்கொண்டு மாரடித்து விற்றுக்கொண்டிருக்கும் ஸீரோடிகிரி ஓனர்களும் வாசகர் வட்ட புட்டங்களும் வாங்கிப் படித்துக்கொள்ளவும். கண் திறந்து பார்த்தால் இலக்கியத்தில் சாரு ஒரு மண்ணும் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிடும்.
ஆதாரம் 2
மீட்சி இதழ் 2 கிண்டிலில்கிடைக்கிறது. இதில்செப்டம்பர் 1983ல்போர்ஹேவின் 'வாளின்வடிவம்' கதையைமொழிபெயர்த்துபோர்ஹேவைப்பற்றியகட்டுரையையும்எழுதி,
இவரின்கதைகள்ஆங்கிலம், பிரஞ்சுஸ்வீடிஷ், டேனிஷ், ஜெர்மன், இத்தாலிபோன்றமொழிகளில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில்முதன்முதலில்போர்ஹேயின் Circular Ruins சிறுகதையைமொழிபெயர்த்தவர்தர்மூஅரூப்சீவராம். வெளியிட்டது 'கசடதபற'. 1971 ஆம்ஆண்டு International Publishers Prizeஐ Samuel Beckett உடன்பகிர்ந்துகொண்டார். The Greatest living writer in the Spanish language today என்று Time பத்திரிகைஅவரைப்பற்றிஎழுதியிருக்கிறது.
இந்தநாகரிகத்தையெல்லாம்எல்லாம் 'நானேநானே எல்லாம் நானே'எனஇல்லாததைப்பிடித்துக்கொண்டிருப்பதானபாவனையுடன்விடைத்துக்கொண்டுதிரியும்இணையப்புழுத்திகளில்ஒருவனானசாருவிடம்எதிர்பார்க்கஇயலாது.
இதில் தவறிப்போன முக்கியமான வரலாற்றுத் தகவல், போர்ஹேவின் The Lottery in Babylonகதையை 'குருட்டாம்போக்கு' என்று 1963லேயே மொழிபெயர்த்திருக்கிறார் கநாசு. அவர் நடத்திய இலக்கிய வட்டம் முதல் இதழிலேயே அதை வெளியிட்டிருக்கிறார். அது இப்போது அழிசி வெளியிட்டுள்ள யமன் தொகுப்பில் உள்ளது.
வாங்க வாட்ஸப் எண்: +91 70194 26274
இப்படித்தான் ரிலே ரேஸ் போல போய்க்கொண்டு இருக்கிறது இலக்கியம்.
இதில் சாரு போன்ற கோமாளிதான்,
'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான். பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.'
1983 செப்டம்பரில் மீட்சி 3ஆம் இதழில் பிரம்மராஜனால் மார்க்கேஸ் அறிமுகப்படுத்தப்பட, மெட்ராஸ் பேப்பர் இணைய இதழின் இலக்கியப்பகுதியில் இருக்கிற 'செவ்வாய்க்கிழமை மதியத் தூக்கம்' ஆர். சிவகுமாரின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.
ஆனால் மனசாட்சியே இல்லாத அண்டப் புளுகன் சாரு சொல்கிறான்,
'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான். பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர். '
இந்தப் புளுகோடு நின்றிருந்தால் கூட ஒழிகிறது நூற்றோடு நூற்றியொன்று என விட்டிருக்கலாம்.
ஆதாரம் 4
இடையிடையில் ஃப்ளாஷ்பேக்குகளாய் வரும் சுக்கு பெறாத கதையை நான்-லீனியர் என்று ஏணி வைத்து ஏத்திக்கொண்டு, அது தன்னிடம் கலையாக மாறியதாக வேறு எப்படி அடித்துவிட்டுக்கொள்கிறான் என்று பாருங்கள்.
//நான்–லீனியர் என்ற இந்த எழுத்துப் பாணி வாசிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதை இலக்கியப் பிரதியாக மாற்றுவது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்று. ஏனென்றால், இக்கதைகளுக்கான கச்சாப் பொருளை நான் குப்பையிலிருந்து எடுக்கிறேன். ரொலாந் பார்த் (Roland Barthes) இதை Literature of Trash என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே தமிழ்ச் சமூக வெளியில் ஏராளமான குப்பை மலிந்து கிடக்கிறது. இங்கே சினிமாவுக்கு எழுதுபவரும் ஜனரஞ்சகப் பொழுதுபோக்குக் குப்பைகளை உற்பத்தி செய்பவர்களும்தான் எழுத்தாளராகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குப்பைக் கிடங்கிலிருந்து குப்பையைப் பொறுக்கி அதை எப்படி கலையாக மாற்றுவது? அந்த மாயாஜாலத்தைத்தான் என்னுடைய நான்–லீனியர் கதைகள் செய்தன. கூடவே ஸில்வியாவும் இதே மாதிரியான கதைகளை எழுதினார். ஒரு கட்டத்தில் ஸில்வியாவும் நானும் கதைகளிலேயே விவாதித்துக் கொண்டோம். என் கதைக்கு அவர் பதில் கதை எழுதினார். அதற்கு நான் பதில் எழுதினேன். என் கதைகளை அப்போது முனியாண்டி என்ற புதிய புனைப்பெயரில் எழுதினேன். அப்போதெல்லாம் முனியாண்டி விலாஸ் பிரியாணி மிகவும் பிரபலம். அந்தப் பெயரையே என் புனைப்பெயராகக் கொண்டேன். (கதை மட்டும் அல்ல, புனைப்பெயரைக் கூட ஜனரஞ்சக் குப்பையிலிருந்து எடுத்துக் கொண்டேன்.) என்னையும் பிரம்மராஜனையும் ஸில்வியாவையும் தவிர யாருக்கும் முனியாண்டி யார் என்று தெரியாது.//
இது ஒருபக்கம் இருக்க, எனக்கு ஏழு வருடம் பெருசான சாரு, முதல் முதலாகக் கதை என்று எழுதிய டீ எப்போது வெளியானது தெரியுமா? நவம்பர் 1983ல் முனியாண்டி என்கிற பெயரில்.
அதுவும் எப்போது என்கிறீர்கள், பத்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலுமாக நான் என் முதல் தொகுப்பான அறியாத முகங்கள் வெளியிட்டதற்கு முந்தைய மாதமான.டிசம்பர் 1983ல். அப்போது, 1960ல் பிறந்த எனக்கு எனக்கு 23. 1953ல் அவதரித்ததற்கு 30. இதற்கே எருமைக்கு என்ன பெருமை பார்த்தீர்களா.
அறியாத முகங்கள் தொகுப்பில் இருந்த தாஸில்தாரின் நாற்காலி என்கிற சிறுகதையை மீட்சி 5 டிசம்பர் 1983ல் 5ஆம் இதழில் வெளியிட்டது மீட்சி (அதற்கு முன்னுரை எழுதிய சுகுமாரன் மூலமாக).
ஆக 30 வயதுவரை, சாரு செய்திருந்த இலக்கியத் தொண்டு என்றால், வெங்கட் சாமிநாதன் வீட்டில் தங்கியிருந்ததால் அவருக்கு அடியாளாக எழுதியவையும் அவருடன் சண்டை வந்த பிறகு, அவரது தனி வாழ்க்கை பற்றி வனைந்த அவதூறுகளும்தான்.
ஈரோடிற்கு மாற்றலாகிப்போய் ஆறு மாதங்களுக்குள் திரும்ப மெட்ராஸுக்கு வந்துவிட்டாலும் கேகே நகர் குவார்ட்டர்ஸ் போய்விட்டதால், டெல்லிவரை போய் மல்லுக்கட்டியாகவேண்டியிருந்ததால் 1983 ஜூன் 18 - 27ல் LTCயில் போனபோது செ. ரவீந்திரன் அறையில் தங்கி வெங்கட் சாமிநாதனுடன் எஸ்டேட் ஆபீஸுக்குப் போய்விட்டு வந்தவன் கிளம்பும் முன், வெ.சாவுக்குப் பிடிக்காவிட்டாலும் நண்பன் என்று சாருவைப் பார்க்க ஆபீஸுக்குத் தேடிப்போய் அவனுடைய வீட்டிலும் தங்கினேன்.
ஆர்வத்தில் நான் அசோகமித்திரன் சுந்தர ராமசாமி என்று இலக்கியமாகப் பொங்கிக்கொண்டிருந்தால், சாரு அரசியல் தீவிரவாத்யைப் போல சார்த்தர் ஜெனே காஸ்ட்ரோ க்யூபா சே குவேரா எனவும் அமேரிக்காவுக்கு எதிராகவும் உக்கிரமாய் பேசிக்கொண்டு இருந்தானே தவிர, லத்தீன் அமெரிக்க எழுத்து பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஏனெனில் அப்போது என்னைப்போலவே அவனுக்கும் தெரியாது என்பதைத்தவிர இதற்கு வேறு என்ன வியாக்கியானம் இருக்கமுடியும்.
உண்மை இப்படி இருக்க,
'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான். பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.'
என்று சாரு கூசாமல் கூறிக்கொள்ள, தட்டிக் கேட்க யாருமில்லை என்கிற தெனாவட்டும் தனக்குக் கிடைத்திருக்கும் ஸீரோடிகிரி, வாசகர் வட்ட, விஷ்ணுபுர குழம அடிமைகள் 'மிகவும் மொக்கைகள்' என்கிறா தைரியமும்தானே காரணம்.
அது தெரிந்த விஷயம்தான் தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். இப்போது ஏன் சாரு இதைச் சொல்கிறார் என்கிறீர்களா.
மெட்ராஸ் பேப்பரில் ஆர் சிவகுமார் ஆர் சிவகுமார் என்று வாராவாரம் தொடர்ந்து வந்தால், அதுவும் ஒரு வாரம் முழுக்க எல்லோரும் படிக்கும்படி மெட்ராஸ் பேப்பர் திறந்து வேறு கிடந்தால், என்னதான் வாசக அடிமையாக இருந்தாலும் ஓ இவ்வளவு பிரமாதமான வேலைகள் நடந்திருக்கின்றனவா, அப்ப நம்ம சாரு டம்மி பீஸா என்று தோன்றிவிடாதா. அதனால்தான் அடிவயிற்றிலிருந்து தீனமாகக் குழலெழும்புகிறது,
'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான். பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.'
ஆதாரங்களைக் கொடுத்தால், இதற்குமேல் வார்டனை அடிக்காமல் விட்டுவிட நான் தயார் நீங்கள் தயாரா.