//உண்மைதான். ரங்கநாயகி தங்கினால் எத்தனையோ விதத்தில் உபயோகமாக இருக்கும். கேட்பார்கள், அவள் வரவில்லையா என்று. வரவில்லை என்றால் யாரும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். தவறாகவும் கருதமாட்டார்கள். இப்பொழுது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இரண்டுபேரும் போனால் எப்படி வர முடிந்தது என்று அதிசயிப்பார்கள். பழக்கமுள்ள ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தோம் என்று சொல்லலாம். ஆனால் அது உறவில், கருணையில் ஒன்று அல்லது பல புள்ளிகள் குறைந்துவிட்டதாகப் படும்.//
கண்ணீர்ப்புகை - கவனம் 2 ஏப்ரல் 1981
//நிஜமாகவே நடந்த கலவரத்தை, கலவரங்கள் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே எழுதி, எட்டு தாள்களை மடித்து ஒற்றை நூலால் தைத்துப் பதினாறு பக்கங்களாக்கிய பத்திரிகையில் வெளியாகி, யாராலும் கண்டுகொள்ளப்படாமல் நாற்பது வருடங்களாய் பழுப்பேறிக் கிடக்கிறது இந்தக் கதை. //