24 February 2023

யாசக சாருவும் வாசக அடிமைகளும்

சாரு இந்த வீடியோவை 


இப்படிப் பகிர்ந்துகொண்டிருக்கிறான்.


இவர்கள் தெருவில் கிடந்து உருள்வதற்கு எந்த நடிகராவது ஊக்குவிப்பதை, இதை ஷேர் செய்து ஊக்குவிப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா. 

ஆனால்,  கல்லூரிப் பேராசிரியையாக இருந்து ஓய்வுபெற்ற மூதாட்டி, குருவே வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்கிற கடிதங்களை கூச்சமே இல்லாமல் ஆதரித்து ஊக்குவித்துக்கொண்டிருந்தவர் நானே நெ. 1 எழுத்தாளன் என்று பீற்றிக்கொள்கிற ஜெயமோகன். 
இந்த அசிங்கங்களையெல்லாம் சுட்டிக்காட்டித் தட்டிக்கேட்க 16 வருட இடைவெளிக்குப் பின் மாமல்லன் என்கிற மகா கேவலமான பிறவி 2010ல் எழுந்து வரவேண்டியிருந்தது. 
போன்ற தொடர்ந்த சாட்டையடிகளால்தான் இவையெல்லாம் ஓரளவு அடங்கின என்பது இணைய வரலாறு. 

என் ட்விட்டர் / பேஸ்புக் எழுத்துகள் அனைத்தும் என் குரல் என்கிற பெயரில் 2010 முதல் வருட வாரியாக கிண்டிலில் இருக்கின்றன.

சாமியே பூதமே ஆண்டவனே என்று ஜெயமோகனின் அடிமைகள்தான் இப்படி அலகு குத்திக்கொண்டு ஆடுகின்றன என்றால்  சாரு அடிமைகள் இதற்குக் கொஞ்சமும் சளைத்தவையல்ல. 



தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்தவன்: வளன் அரசு January 12, 2023


சாருவின் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு என்ற புதிய நாவலைப் படித்ததிலிருந்து ஒருவிதமான ட்ரான்ஸ் மனநிலையில் இருக்கிறேன். இவ்வளவு பெரிய நாவலை இவ்வளவு சீக்கிரமாகவும் தீவிரமாகவும் வாசித்ததேயில்லை. நாவலின் pdf அனுப்பிய அன்றே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். முப்பது பக்கம் முடித்தவுடன் மனமில்லாமல் மூடிவைத்துவிட்டு மற்ற வேலைகளில் மூழ்கினேன். இன்று காலை மீண்டும் வாசிக்க ஆரம்பித்து மதியத்துக்குள் முழுவதும் முடித்துவிட்டேன். நடுவில் உணவில்லை தண்ணீரில்லை. மதியம் பன்னிரண்டு மணிக்கு முக்கியமான வேலை, வாசிக்கும் ஆர்வத்தில் சுத்தமாக மறந்துவிட்டேன். வாசிப்பை நிறுத்துவதே சிரமமாக இருந்தது.


சாரு இந்தக் கதையை அன்பிற்கு எதிரான கதை என்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. நாம் அன்பு என்று நம்பிக்கொண்டிருக்கும் வன்முறைக்கு எதிரான கதை என்று வேண்டுமானல் புரிந்துக் கொள்ளலாம்.


இப்படியொரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம் தான். முன்பெல்லாம் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையில் ஒரு பகுதியினர் ஒடுக்கப்படுவார்கள் அல்லவா? அந்த ஒடுக்கப்பட்ட பகுதியினரில் சிலர் தானாக முன்வந்து தாங்கள் கொண்ட நம்பிக்கைகாக தங்கள் உயிரையும் கொடுப்பார்கள். தொடக்க கால கிறிஸ்துவத்தில் இப்படி பல்லாயிரம் சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒரேயொரு சம்பவத்தை மட்டும் சொல்லாம் என நினைக்கிறேன். 258ஆம் வருடம் வலேறியன் என்ற ரோமை பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துகளை சூரையாட நினைத்திருந்த போது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துகளை விற்று ஏழைகளுக்கு பகிர்ந்துக் கொடுத்தார். சொத்துகள் எதையும் கைப்பற்ற முடியாத வலேறியன் இரண்டாம் சிக்ஸ்தூஸை கொன்றுவிடுகிறான். போப்பின் உதவியாளரான லாரன்ஸையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான். எப்படியென்றால் இரும்புக் கட்டிலில் லாரன்ஸை படுக்க வைத்து, கீழே விறகை மூட்டி தீ வைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸின் சதை வேக ஆரம்பிக்கிறது. ஆனால் முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறார் லாரன்ஸ். பின் வலேறியனைப் பார்த்து என் ஒரு பக்கம் நன்றாக வெந்துவிட்டது, வேண்டுமானால் என்னைத் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள் என்று லாரன்ஸ் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது. இப்படியான முயற்சிதான் சாருவின் இந்நாவல்.


இந்நாவலின் வழியாக தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு. அன்பு குறித்த நம்பிக்கைகள் கட்டுடைக்கப்படும் அதிர்ச்சியுடன் இச்சமூகம் இப்புதினத்தைப் புசிக்கட்டும்.


வளன் அரசு


'தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு' என்று சாருவின் தற்போதைய தலைமை அடிமை புகழ்ந்தேத்துகிற இந்த நாவலைப் பற்றி, சாருஆன்லைன்.காம் என்கிற சாருவின் ப்ளாகில் எழுதியவற்றின் காபி பேஸ்ட்தான் ஒரு வாரத்தில் எழுதியதாக சாரு ரீல்விட்ட இந்தப் புத்தகம் என்று காறித் துப்பிவிட்டது பேஸ்புக். சாம்பிளுக்கு ஒன்று.

கணேச குமாரன்


#அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு.


நாவல் என்று சொல்லிக்கொண்டாலும் நாவல் இல்லை இது. ஆட்டோ ரைட்டப் என்ற வகைமையில் சொல்லிக்கொண்ட #எக்ஸைல் நாவலில் ஆட்டோ ரீடிங் மேஜிக் இருந்தது. அப்படி இதில் எதுவும் இல்லை. சொல்லப்போனால் #சாரு_நிவேதிதா அவரது ப்ளாகிலும் முகநூலிலும் தொடர்ந்து எழுதிய டைரிக் குறிப்பின் தொகுப்புதான் இது.


அவரின் நண்பர்கள் பலரும் வரும் இந்தப் புத்தகத்தில் திரும்பத் திரும்ப சொல்லப்படும் ஒரே விஷயம் கொக்கரக்கோ என்ற அவரின் நண்பரை அவரிடமிருந்து பிரித்து விடாதீர்கள் என்பதே. வழக்கம்போல அவரின் எழுத்தில் வெளிப்படும் பு, சு, சூ எல்லாம் தேவையோ தேவை இல்லாமலோ அதிகமாகவே இடம் பெற்றிருக்கின்றன. மற்றபடி அந்த இரண்டு வார்த்தை மந்திரம் சொல்லி மூடி வைத்துவிடலாம்.


ஆம்... இவ்வாறாகத் தொடங்கியிருக்கிறது 2023 க்கான இலக்கிய வாசிப்பு


இதற்கு வந்த கமெண்ட்டையும் பார்த்துவிடுங்கள்.



பிறவித் திருடனான சாருவந்தவரை சுருட்டலாம் என்றுஇப்படிக் கண்டதையும் திரட்டி நாவல் என்று கடைசி காலத்தில் சொல்லிக்கொள்வதில் ஒன்றும் வியப்பில்லை. 

கேவலத்தைச் செய்துவிட்டு, அதோடு நில்லாமல், அதைப்பற்றி ஆகா ஓகோ என்று அடிமைகளை விட்டு எழுதவைத்துப் போட்டுக்கொள்வது என்பதைவிடவா கேவலம் சாரு ஷேர்பண்ணியிருக்கும் சினிமா ரசிகர்களின் டான்ஸ். 

கண்டிப்பாக யாசக சாருவையும் அவரது வாசக அடிமைகளையும் விட சினிமா ரசிகர்களோ நடிகர்களோ எந்த விதத்திலும் கேவலமில்லை. ஏனெனில் அவர்கள் சாருவைப் போலவோ சாருவின் வாசக அடிமைகளைப்போலவோ போலியாக இல்லை - நடிகர்கள் தாம் துட்டுக்காகத்தான் நடிக்கிறோம் என்பதிலும் ரசிகர்கள் ஜாலியாக இருக்கிறோம் என்பதிலும் உண்மையாக இருக்கிறார்கள். சாரு ஜெயமோகனைப்போல இலக்கியச் சேவை அறிவுஜீவிக் கூவை என்றெல்லாம் அலப்பறை செய்துகொண்டிருப்பதில்லை. 

இலக்கியம் என்கிற பெயரில் இணையத்தை மொக்கையாக்கியதில் பெரும் பங்கு ஜெயமோகனையும் சாருவையுமே சாரும். 

நான் இணையத்திற்கு வந்த 2010ல் சாருவின் பிரதான சீடையாக இருந்த, இன்றுவரை இரண்டு வரிக்குமேல் எதைப்பற்றியும் எழுதத்தெரியாமல் விரிவாக எழுதவேண்டும் என்று சொல்லியே இணைய பிழைப்பை ஓட்டிக்கொண்டு, நகுலன் சாரு ரஜினி கலைஞ்சர் என்று விநோத அவியலாக, தலைவா அரசியலுக்கு வா என்று சவுண்டு விட்டுக்கொண்டிருப்பதைப்போலவே சாருதான் சிறந்த எழுத்தாளர் என்று கூவிக்கொண்டிருக்கும் மொக்கையைத்தான் இணைய மொக்கைகள் இலக்கிய குருஜி என்று அழைத்துக்கொண்டிருந்தன. 

இதுகளை விட இந்த வலிப்பு டான்ஸ் கும்பல் எந்த விதத்தில் கேவலம். 

உண்மையில் இதுகளே கேவலம். ஏனென்றால் இதுகள் லைக்குகளுக்காக எந்த கேவலத்தை செய்யவும் எங்கே லைக் போய்விடுமோ நாம் மாமல்லனைப்போல தனிமரமாகப் போய்விடுவோமோ என்கிற நிலையான அச்சத்துடன் மனதுக்கு சரியெனப் படுவதையும் ரசிப்பதையும் வெளிப்படையாகச் சொல்ல தயங்கி பயந்து பம்மி செத்து செத்து புழுக்களைப்போல வாழ்ந்துகொண்டிருக்கிறன. 

சினிமா ரசிகன் எந்த லாப நஷ்ட கணக்குமின்றி, யார் என்ன நினைப்பார்கள் என்கிற எந்தக் கவலையுமின்றி  சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் சாமானை தொங்கவிட்டுக்கொண்டு ஒடிய அறிவுஜீவியைப்போல.